Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கமலை பார்த்தாலே ஒரு, 'எனர்ஜி' வரும் - கிஷோர் பேட்டி!

12 அக், 2015 - 14:37 IST
எழுத்தின் அளவு:
When-seeing-kamal-we-will-get-energy-says-Kishore

முறுக்கிய மீசை; போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துபவர். சமீபத்திய நல்ல படங்களில், இவரின் பங்களிப்பு இருந்து வருகிறது. கமலுடன் துாங்காவனம், ரஜினியுடன் கபாலி படத்தில் நடிப்பதன் மூலம் இப்போது, 'பிசி'யாக உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கி வரும் கிஷோருடன் ஒரு சந்திப்பு...


தூங்காவனம் படத்தில் உங்க ரோல்?


போலீஸ் வேடம்; இப்படி ஒரு நல்ல படத்தில் நானும் நடிப்பது சந்தோஷமாக உள்ளது.


கமலுடன் நடித்த அனுபவம்?


என்னை கேட்டால், எல்லா நடிகர்களும் கமலுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்; நிறைய விஷயங்களை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். அவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார். சில நிமிடங்கள் அவரைப் பார்த்தாலே போதும். ஒரு, 'எனர்ஜி' வரும்; எதுவுமே தெரியாம இருக்கோமேன்னு எனக்கு அசிங்கமாக இருந்தது. தூங்காவனம் செட்டில், எல்லாருக்கும் முன்னாடி அவர் வந்திருப்பார்; ஷூட்டிங் முடிந்ததும், எல்லாரும் போன பிறகே அவர் போவார்.


வெண்ணிலா கபடிக்குழு, ஹரிதாஸ், ஆடுகளம் போன்ற படங்களில், உங்கள் நடிப்பு பாராட்டு பெற்றது பற்றி?


அந்த கேரக்டரை கொண்டு வந்த இயக்குனர்களின் பங்களிப்பு அது. அந்த கேரக்டர் பற்றி சொல்லும் போதே, நமக்கு ஒரு ஐடியா வந்திடும். இயக்குனர் சொல்வதை உள்வாங்கி, என்னால் முடிந்த அளவுக்கு, ஒவ்வொரு படத்திலும் என் கேரக்டரை பதிவு செய்து வருகிறேன்.


உங்களுக்கு போலீஸ் வேடம் கச்சிதமாக பொருந்துதே?


கன்னட படத்தில் ஆரம்பித்து இப்போது வரை, நிறைய படங்களில் போலீசாக நடித்து விட்டேன். அதனால் யாராவது, போலீஸ் கேரக்டர் நீங்க பண்ணனும்னு இப்போது கேட்டால், ஓடி ஒளிகிறேன். என் உயரம், மீசை, எல்லாருக்கும் என்னை அந்த கேரக்டரில் பதிவு செய்துவிட்டது.


உங்க, 'ஹேர் ஸ்டைலை' மாற்ற விரும்புறீங்களா?


எனக்கு, தலையின் முன்பக்கம் முடி இல்லை; அதனால், கொஞ்சம் வருத்தம் தான். 'விக்' வைக்கலாம்னு சொல்வேன். ஆடுகளம் படத்தில் நான் விக் வைத்து நடித்த போது, பல பேருக்கு தெரியல. நானே சொன்னதால் தான் தெரிந்தது. எனக்கு கொஞ்சம், 'லுக்'கை மாற்ற ஆசை தான். தமிழில் அவ்வளவா வாய்ப்பு கிடைக்கல. ஆனால், கன்னட படங்களில் நிறைய ஸ்டைலில் நடித்திருக்கிறேன்.


மனதில் நிற்கும் மறக்க முடியாத படம்?


ஹரிதாஸ்; குழந்தையை வளர்க்கும் அப்பாவின் வலி மற்றும் வாழ்க்கை. அந்தப் படம் எடுக்கும் போது அவ்வளவு உணர்வு இல்லை. ஒரு கதையா திரையில் பார்க்கும் போது, ரொம்ப கஷ்டப்பட்டேன். நான், சினேகா, மொத்த டீமும் படம் பார்த்தோம். படம் முடிந்த பின், நான் சினேகாவை பார்க்கவே இல்லை; எங்கே அழுதிடுவேனோன்னு பயந்தேன்.


நிறைய படங்கள் நடிச்சிக்கிட்டு வந்தீங்க; திடீர்னு குறைத்தது ஏன்?


எனக்கு படங்களை விட, நல்ல கதைகள் தான் முக்கியம். ஆரம்பத்தில், வயிற்றுப் பிழைப்புக்காக நிறைய படங்களை ஒப்புக் கொண்டேன். அதன்பின், எனக்கு பிடித்த மாதிரியான படங்களில் நடிக்கிறேன்.


பெங்களூரில் ஒரு விவசாய பண்ணை வைத்து, நீங்களே நேரடியாக விவசாயம் பண்றீங்களாமே?


அந்த அளவுக்கு என்னிடம் வசதி இல்லை. வீடு கட்டலாம் என்று லோன் வாங்கி வைத்திருந்தேன். ஆனால், நண்பர் மூலமா இந்த இடம் தெரிய வந்தது. பெங்களூரு பக்கத்தில் சிறிய கிராமம். அருவி ஓடும்; பக்கத்திலே அடர்ந்த காடு; அதன் அருகே வயல்வெளி. என் பெரும்பாலான நேரத்தை அங்கே தான் கழிக்கிறேன். 8 ஏக்கர் நிலம்; அதில் தானிய வகைகளை பயிரிட்டுள்ளேன். கம்பு, தினை, ராகி, சாமை விளைகிறது. மூன்று வருஷமாச்சு; மனசுக்கு இது ஒரு வகையான சந்தோஷம் தருகிறது.


ரஜினியோடு - கபாலி படம் அனுபவம்?


என்னை விட என் மனைவி, ரஜினியோடு கூட்டத்தில் ஒருவராகவாவது நான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்; அந்த வாய்ப்பு இப்போது தான் கிடைத்துள்ளது. கபாலி படத்தில் வில்லன் ரோலில் நடிக்கிறேன். ரஜினி பெரிய ஸ்டார் நடிகர்; அவரோடு நடிக்க கிடைத்த வாய்ப்பை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in