Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பிரியாணியில் மயக்க மருந்து கலந்து நடிகையருக்கு விருந்து வைக்கிறேனா? - ஆர்யா

16 ஜூலை, 2015 - 00:43 IST
எழுத்தின் அளவு:
Aryas-jolly-interview

கோலிவுட்டின் எவர் கிரீன் ரோமியோ, சத்தியமாக ஆர்யா தான். ஹீரோயின்களுக்கும், இவருக்கும் இருக்கும், கெமிஸ்ட்ரியை பார்த்து, சக நடிகர்கள் காதுகளில் இருந்து புகை வரும் அளவுக்கு, காதல் மன்னனாக வலம் வருகிறார். சைக்கிள் போட்டி, பிரியாணி விருந்து, நடிகர் சங்க விவகாரம், கல்யாணம் போன்ற பல விஷயங்களை, நம்முடன், அவர் மனம் விட்டு பகிர்ந்து கொண்டார்.


விஎஸ்ஓபி படம் பற்றி சொல்லுங்க...?


பாஸ் என்ற பாஸ்கரன் தொடர்ச்சி தான் இந்த படம் என்று சொல்லலாம். படம் முழுக்க காமெடி நிறைந்துள்ளது. 5 வருடம் கழித்து ஒரு புது சென்ஸ் எடுத்து வரும் படம். இயக்குநரின் ராஜேஷின் பலமே யதார்த்தமான டயலாக் தான். எந்த செயற்கை தனமும் இல்லாமல் ஒரு காமெடி படம். இந்தப்படத்தை பார்க்கும்போது குடும்பத்தில் நடக்கிற சில விஷயங்களை நமக்கு ஞாபகப்படுத்தும்.



முதல் முறையாக தமன்னாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த அனுபவம்?


தமன்னா பற்றி கண்டிப்பாக ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். ஐந்து ரூபாய் கொடுத்தால், அந்த பொண்ணு, 1,000 ரூபாய்க்கு நடிக்குது. படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் கூட்டம் அதிகம் இருந்தால், நடிப்பவர்களுக்கு ஒருவிதமான கூச்சம் இருக்கும். வி.எஸ்.ஓ.பி., படத்தின் படப்பிடிப்பு, கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் நடந்தபோது, எக்கச்சக்கமான கூட்டம்.


கூட்டமா இருக்கு; படப்பிடிப்பை நாளைக்கு வச்சுக்கலாம்னு இயக்குனரிடம் இரண்டு பேரும் சேர்ந்து சொல்லலாமா? என, தமன்னாவிடம் கேட்டேன். அதற்கு அந்த பொண்ணு, அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்; எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. இப்பவே படப்பிடிப்பை வச்சுக்கலாம் எனக் கூறி, என்னை வெறுப்பேற்றி விட்டது. அந்தப்பொண்ணு மேட்ரிமோனியல் நடத்துற இடத்தில் வேலைபார்க்கும். நான் வழக்கம் போல வேலை எதுவும் இல்லாமல் அப்படியே ஜாலியாக சுற்றி வர்ற கேரக்டர் தான். படம் ரொம்ப சூப்பராக வந்துள்ளது.


அது என்ன, வி.எஸ்.ஓ.பி.,ன்னு ஒரு டைட்டில்... வேறு எதையோ ஞாபகப் படுத்துற மாதிரி இருக்கே?


வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்பதன் சுருக்கம் தான் இது. இந்த தலைப்பை முழுமையாக வைத்தால், இது என்ன மொக்கையான டைட்டில் என, முணுமுணுப்பாங்க. அதே, வி.எஸ்.ஓ.பி., என வைத்தால், அது, மக்களிடம் ஏற்கனவே, ரீச் ஆன ஒரு விஷயம். இப்போதெல்லாம், பட தலைப்பு தான் எல்லாரையும் கவனிக்க வைக்கிறது. ஆனால், இந்த தலைப்பை நான் தேர்வு செய்யவில்லை. இயக்குனர் ராஜேஷிடம், இதுபோன்ற ஏராளமான தலைப்புகள் கைவசம் உள்ளன.


ஆர்யாவுக்கு மட்டும் இவ்வளவு ஹீரோயின்கள் மாட்டுறாங்களே என, சக நடிகர்கள் புலம்புவதாக...?


இதெல்லாம் சாதாரண விஷயமில்லை. தொடர்ந்து முயற்சி செய்தால் தான், எந்த விஷயத்திலும் வெற்றி கிடைக்கும்; கடனுக்கு செய்தால், எதுவும் வேலைக்கு ஆகாது. நான், எல்லா ஹீரோயின்களுடனும் யதார்த்தமாக பழகுறேன். லவ் பண்றதா இருந்தால், எக்ஸ்கியூஸ்மீ, நான் உங்களை காதலிக்கிறேன் என, வெளிப்படையாக கூற வேண்டும். நட்பையும், காதலையும் குழப்பக் கூடாது; அதில், தெளிவாக இருக்க வேண்டும்.


பொண்ணுங்களுக்காக நேரத்தை செலவழிக்கிறது, சுத்துறது பற்றி...?


பொண்ணுங்களுக்காக நேரத்தை செலவழிக்கிறதெல்லாம்... 200 சதவீதம், டோட்டல் வேஸ்ட். பொண்ணுங்க பின்னாடி அர்த்தம் இல்லாமல் சுத்துறதுக்கு, தினமும், மூணு மணி நேரம் சைக்கிள் ஓட்டலாம்; உடம்பாவது தேறும்.


உண்மையை சொல்லுங்க...? உங்களுக்கு அனுஷ்கா நெருக்கமா.? நயன்தாரா நெருக்கமா.?


என்னங்க இப்படி சிக்கலான ஒரு கேள்வி கேட்டுடிங்க. எனக்கும் இரண்டு பேரும் இரண்டு கண்கள் மாதிரி. இரண்டு கண்ணில் எந்த கண்ணை நான் சொல்ல முடியும். ப்ளீஸ் விட்டுங்க.


நீங்கள் சைக்கிள் ஓட்டும் விஷயம் பிரபலமாகி விட்டதே?


ஆமாம்; என்னை பார்த்து நிறைய நடிகர்கள் சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க. உடல் எடையை குறைப்பதற்கு, இது ரொம்ப உதவும்; கால் வலி இருக்காது. டீம் ஜாமி என்ற பெயரில், ஒரு சைக்கிள் கிளப் வச்சுருக்கேன். யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம். நான், 4, 5 சைக்கிள்கள் வச்சுருக்கேன்; லேட்டஸ்டா, ஒரு லட்சம் ரூபாயில் ஒரு சைக்கிள் வாங்கினேன். உடம்பை பார்த்துக்க, கொஞ்சம் செலவழிப்பது தப்பில்லையே...?


எந்த மாதிரி குணம் உள்ள பெண்ணை திருமணம் செய்ய ஆசை?


நல்ல கலராக, அழகாக, உயரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. என் கேரக்டருக்கு பொருந்துகிற பெண்ணாக இருக்க வேண்டும்; அவ்வளவு தான். அழகை ரொம்ப நாளைக்கு ரசிக்க


முடியாது. கணவன் - மனைவி இடைய, ஒரு புரிதல் இருக்க வேண்டும். என் நண்பர்கள் சிலர், திருமணம் ஆன சில மாதங்களிலேயே, டைவர்ஸ் வாங்கி விட்டனர். அந்த பயம் எனக்கு இருக்கு; அதனால் தான், நிதானமாக அடி எடுத்து வைக்கிறேன். நல்ல பெண் கிடைத்தால், நாளைக்கே கல்யாணம் தான்.


ஹீரோயின்களுக்கு பிரியாணி கொடுப்பதாக உங்கள் மீது ஒரு முத்திரை உள்ளதே?


அட நீங்க வேறங்க; நான் என்ன பிரியாணியை கேரியரில் வைத்து, ஒவ்வொரு ஹீரோயின் வீட்டுக்கும் போய் கொடுக்கிறேனா? ரம்ஜானுக்கு அம்மா பிரியாணி செய்வாங்க; எனக்கு மிகவும் நெருக்கமான சிலரை அழைத்து, பிரியாணி விருந்து கொடுப்பேன். அதில் சிலருக்கு, அவர்களை அழைக்கவில்லை என்ற கோபம். இதனால், இப்போதெல்லாம், ரம்ஜானுக்கு, 200 பேரை அழைத்து பிரியாணி விருந்து கொடுக்கிறேன்; இது தான் உண்மை. ஆனால், நான் என்னவோ, பிரியாணியில் மயக்க மருந்து போட்டு, ஹீரோயின்களுக்கு கொடுப்பது போல், வதந்தி பரப்புறாங்க. உண்மையில், எங்க அம்மா தான் பாவம்.


நீங்க மற்ற ஹீரோ படங்களிலும் கெஸ்ட் ரோல் நடித்து அவங்களுக்கும் ரொம்ப உதவியாக இருக்கீங்க போல.?


சமீபத்தில் விக்ராந்த், விஷ்ணு படங்களில் நடித்தேன். எல்லோரும் நண்பர்களாக இருக்கோம். நம்மகிட்ட ஒரு சின்ன உதவி கேட்க நாங்க அவர்களுக்கு காசு பணம் கேட்கவில்லை. ஒரு நாள் வந்து நடித்து கொடுக்க சொல்றாங்க, இதைக்கூட செய்யவில்லை என்றால் நட்புக்கு அடையாளமே இல்லை. எனக்கு நண்பர்கள் கிட்ட நோ என்ற சொல்லே வராது. என்னால் முடிந்த வரை உதவி செய்கிறேன். யார் கேட்டாலும் கண்டிப்பாக செய்வேன்.



முதலில் யாருக்கு திருமணம்? உங்களுக்கா, உங்க நண்பர் விஷாலுக்கா?


எனக்கு தெரிந்த வரை, விஷாலுக்கு இப்போதைக்கு கல்யாணம் நடக்க வாய்ப்பில்லை. நடிகர் சங்க கட்டடம் கட்டினால் தான் கல்யாணம் என்கிறான். அவங்க அப்பா அம்மா என்னை பயங்கரமா திட்டுவாங்க, நான் சொல்றேன் அங்கிள் என்று சொல்லி வைத்துள்ளேன். கட்டடம் எப்போது கட்டுவது; கல்யாணம் எப்போது முடிவது. முதலில், ஆர்யாவுக்கு திருமணம் ஆனால் தான், எனக்கு திருமணம் என, பில்டப் கொடுத்தான்; இப்போது, நடிகர் சங்க கட்டடத்தின் மீது பழியை போட்டு, தப்பிக்கிறான். நாளைக்கே எனக்கு பொண்ணு கிடைத்தால் உடனே திருமணம் தான்.


நடிகர் சங்க தேர்தலில் நிற்க போகிறீர்களா?


அதுபற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்த விஷயத்தில், விஷால், கார்த்திக்கு ஆதரவாக இருக்கேன்; அவர்களுக்காக வேலை பார்க்கிறேன். நல்லது நடந்தால், எல்லாருக்கும் நல்லது தானே.


ஒரு சில நடிகையர், உங்கள், கஸ்டடியில் இருக்காங்களாமே?


இப்படி வேற வதந்தியை பரப்புறாங்களா? அப்பா... இப்பவே கண்ணை கட்டுதே. கஸ்டடியில் வச்சிருப்பதற்கு, நான் என்ன போலீஸ் ஸ்டேஷனா நடத்துறேன்? நடிகையர் யாரும், என்னிடம் ஆலோசனை கேட்பது இல்லை; சைக்கிள் பற்றி வேண்டுமானால் கேட்பர். நான் சிபாரிசு செய்து, ஒரு நடிகைக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்றால், நான் சூப்பர் ஸ்டாராக இல்ல இருக்கணும்?


எந்த ஹீரோயினுடன் நடிக்க ஆசை?


இப்போதெல்லாம், ஹீரோயின் கிடைப்பதே ரொம்ப கஷ்டமா இருக்கு. தமிழ், தெலுங்கு என, மாறி மாறி நடிக்கிறாங்க. கால்ஷீட் வாங்குவதற்குள் திக்குமுக்காடி விடுகிறது; எப்படா படம் முடியும் என்று ஆகி விடுகிறது. அடுத்த படத்தில் இருந்து, புது ஹீரோயின்களை, புக் பண்ணும்படி, இயக்குனர்களிடம் சொல்லப் போகிறேன் தமிழே தெரியலேன்னா கூட பரவாயில்லை, நான் சொல்லிக் கொடுத்து இனி புது ஹீரோயின்களை வளர்க்க போகிறேன். தமிழில் ஒரு ஹீரோயினை அறிமுகப்படுத்திய பெருமையாவது நமக்கு கிடைக்கட்டுமே.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in