மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
2015ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல ஆண்டாக அமையும் என்றுதான் புத்தாண்டு துவக்கத்தின் போது எல்லோருடைய எண்ணமாகவும், ஆசையாகவும் இருந்தது. ஆனால் ஜூன் இறுதி வரையிலான அரையாண்டை திரும்பிப் பார்க்கும்போது அப்படி அமையவில்லை என்பது கவலைக்குரிய விஷயம். கடந்த 6 மாதங்களில் 105 நேரடி தமிழ் படங்கள் வெளிவந்திருக்கிறது. ஆனால் அவற்றில் 10 படங்கள்தான் வெற்றி பெற்றிருக்கிறது. 11 படங்கள் நஷ்டத்தில் இருந்து தப்பித்திருக்கிறது (பிரேக் ஈவெண்ட்).
வசூல் விபரம் (தோராயமாக)
வெளிவந்த 105 படங்களில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தின் பட்ஜெட் 150 கோடி என்கிறார்கள். வெளிவந்த 105 படங்களில் 20 படங்கள் சராசரியாக 25 கோடியில் எடுக்கப்பட்ட பெரிய படங்கள் என்று கணக்கிட்டால் அதன் மொத்த பட்ஜெட் 500 கோடி. 30 படங்கள் சராசரியாக 10 கோடியில் எடுக்கப்பட்ட மீடியம் பட்ஜெட் படங்கள் என வைத்துக் கொண்டால் அதன் பட்ஜெட் 300 கோடி. மீதமுள்ள 54 படங்கள் சராசரியாக 3 கோடியில் எடுக்கப்பட்ட சிறு பட்ஜெட் படங்கள் என வைத்துக் கொண்டால் அதன் மொத்த பட்ஜெட் 162 கோடி. ஆக மொத்தம் தமிழ் சினிமா 2015ல் முதல் அரையாண்டில் முதலீடு செய்த தொகை ரூ.1112 கோடி.
இதில் திரும்ப கிடைத்த பணம் பற்றிய விபரம் (கோடிகளில்): (விநியோகஸ்தர்கள் வட்டார தகவல்படி)
ஐ (தமிழ், தெலுங்கு, இந்தி) -190
காஞ்சனா &2 (தமிழ், தெலுங்கு)- 100
என்னை அறிந்தால் (தமிழ் தெலுங்கு)- 78
மாசு (தமிழ், தெலுங்கு) -63
அனேகன் -49
காக்கி சட்டை -45
உத்தம வில்லன் -40
ஓ காதல் கண்மணி -40
கொம்பன் -35
ரோமியோ ஜூலியட் -20
இன்று நேற்று நாளை (எதிர்பார்ப்பில்) - 30
ஆக 11 படங்கள் திரும்ப எடுத்திருக்கும் தொகை 690 கோடி ரூபாய். மீதமுள்ள 94 படங்கள் சராசரியாக ஒரு கோடி வசூல் செய்திருப்பதாக கருதினால் அதன் மொத்த வசூல் 94 கோடி (சில படங்கள் பத்து லட்சத்துக்கும் குறைவாக வசூலித்திருக்கும், சில படங்கள் இரண்டு கோடி வரை வசூலித்திருக்கும்) ஆக மொத்தம் தமிழ் சினிமா முதலீடு செய்த 1112 கோடியில் திரும்ப கிடைத்திருப்பது 784 கோடி. இதில் விநியோகஸ்தர்கள், தியேட்டர் பங்கு இவற்றுக்கு 40 சதவிகிதம் (313 கோடி) தவிர்த்து தயாரிப்பாளருக்கு வந்து சேர்ந்திருக்கும் தொகை 471 கோடி. கூட்டி கழித்து பார்த்ததில் நஷ்டம் 641 கோடி.
லாபம் ஈட்டிய படங்கள்
கடந்த 6 மாதங்களில் வெளிவந்த படங்களில் ஐ படமும், காஞ்சனா 2வும் சூப்பர் ஹிட் படங்கள். டிமாண்டி காலனியும், காக்கா முட்டையும் குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்டு பெரிய லாபத்தை சம்பாதித்த படங்கள். இது தவிர டார்லிங், என்னை அறிந்தால், அனேகன், காக்கி சட்டை, கொம்பன், ஓகே கண்மணி, 36 வயதினிலே, ரோமியோ ஜூலியட், இன்று நேற்று நாளை படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டிக் கொடுத்த படங்கள்.
நஷ்டம் தவிர்த்த படங்கள்
மாசு, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இவனுக்கு தண்ணியில கண்டம், ராஜதந்திரம், உத்தம வில்லன், வை ராஜா வை, இந்தியா பாகிஸ்தான், புறம்போக்கு, இனிமே இப்படித்தான் படங்கள் நஷ்டத்திலிருந்து தப்பித்த படங்கள். சில படங்கள் சிறிய லாபம் பெற்றிருக்கலாம். சில படங்கள் சிறிய அளவில் நஷ்டம் அடைந்திருக்கலாம்.
ஏமாற்றிய படங்கள்
சில படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றியிருக்கின்றன. ஆம்பள, இசை, எனக்குள் ஒருவன், ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை, வலியவன், சகாப்தம், நண்பேண்டா, எலி போன்ற படங்கள் அவற்றில் முக்கியமானவை. தொப்பி, சென்னை உங்களை வரவேற்கிறது, திறந்திடு தீசே, இருவர் ஒன்றானால் படங்கள் மீடியாக்களால் பாராட்டப்பட்டும் போதிய விளம்பரம் இன்றி ஓடாமல்போன படங்கள்.
2015ம் ஆண்டின் தமிழ் சினிமாவின் வரவு செலவும், வெற்றி தோல்வியும் திருப்திப்படும் அளவிற்கு இல்லை. அடுத்த 6 மாதங்கள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.