Advertisement

சிறப்புச்செய்திகள்

என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஜுன் மாத திரைப்படங்கள் - ஒரு பார்வை

30 ஜூன், 2015 - 14:47 IST
எழுத்தின் அளவு:
June-month-movie-report

2015ம் ஆண்டின் அரையாண்டு இன்றுடன் முடிவடைகிறது. இந்த ஆறு மாத காலத்தில் 26 வெள்ளிக்கிழமைகளில் 105க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்து தமிழ்த் திரையுலகில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்த 105 படங்களில் எத்தனைப் படங்கள் வசூல் ரீதியாகவும் லாபத்தைக் கொடுத்த படங்கள் என்று விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த ஜுன் மாதம் தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் மிகப் பெரும் வசூல் மாதம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும், எதிர்பாராத வசூலையும் கொடுத்த மாதமாக அமைந்துவிட்டது.


வசூலை குவித்த காக்கா முட்டை!


பொதுவாக விருது பெறும் படங்கள் வசூலைக் குவிப்பதில்லை என்ற ஒரு கருத்துதான் இத்தனை நாட்களாக இருந்து வருகிறது. அதை பொய்யாக்கும் வகையில் காக்கா முட்டை படம் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற படமாக இருந்தாலும் வசூல் ரீதியாகவும் சில பல கோடிகளை அள்ளி படத்தை வாங்கியவர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளது.


அதே இந்த மாதத்தில் மூன்று நகைச்சுவை நடிகர்களின் இரண்டு படங்கள் வெளிவந்தது குறிப்பிட வேண்டிய விஷயமாகும். சந்தானம் நாயகனாக நடித்த இனிமே இப்படித்தான் படம் ஜுன் 12ம் தேதியும், வடிவேலு நடித்த எலி ஜுன் 19ம் தேதியும், கருணாஸ் நடித்த லொடுக்கு பாண்டி ஜுன் 26ம் தேதியும் வெளியாகின. சந்தானம் சத்தான வசூலை அள்ள, வடிவேலுவின் எலி அனைத்து மட்டங்களிலும் பலியாகிப் போனது. லொடுக்கு பாண்டி படத்தை பத்திரிகையாளர்களுக்குக் கூடப் போட்டுக் காட்டவில்லை.


கடந்த வாரம் வெளிவந்த படங்களில் இன்று நேற்று நாளை படம் மட்டுமே வெற்றி பெற்ற படமாக அமைந்தது. புதிய கதைக் களத்துடன் நகைச்சுவை இழையோடிய இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவிக்குமார் பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவி நாயகனாக நடித்த ரோமியோ ஜுலியட் வெளிவந்தது. இந்தப் படத்தின் ஆரம்பம் என்னமோ அமர்க்களமாகத்தான் இருந்தது, ஆனால், போகப் போக வசூல் குறைந்து தள்ளாடிப் போனது.


அறிமுக இயக்குநர்கள் அசத்தல்


இந்த மாதத்தில் வெற்றி பெற்ற படங்களாகக் கருதப்பட்ட காக்கா முட்டை படத்தின் மூலம் மணிகண்டன் இயக்குனராகவும், இனிமே இப்படித்தான் படத்தின் மூலம் முருகானந்த் என்ற இரண்டு இயக்குனர்களும், இன்று நேற்று நாளை படத்தின் மூலம் ரவிக்குமார் இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளனர். ஆக, அறிமுக இயக்குனர்கள்தான் இந்த மாதத்தில் அசத்தியுள்ளனர். ஓரளவிற்கு வெற்றி பெற்ற ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய லட்சுமணும் ஒரு அறிமுக இயக்குனர்தான்.


முன்னணி நாயகர்கள் நடித்த படங்கள் ஒன்று கூட வெளியாகவில்லை. ஜெயம் ரவி, ஆதி, விமல், விஷ்ணு விஷால் ஆகிய சின்ன கதாநாயர்கள் நடித்த படங்கள்தான் இந்த மாதத்தில் வெளிவந்தன.


புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் படம் மூலம் பின்னணிப் பாடகரான கிரீஷ் நடிகராக அறிமுகமானார்.


அமரகாவியம் படத்தில் அறிமுகமாகி ஓரளவிற்கு நல்ல பெயரைப் பெற்ற மியா ஜார்ஜுக்கு அந்தப் படம் தோல்வியாக அமைந்தாலும் இன்று நேற்று நாளை படம் அவரைக் காப்பாற்றி விட்டது.


ஹன்சிகா நடித்த ரோமியோ ஜுலியட் படம் மட்டுமே முன்னணி நடிகை ஒருவர் நடித்த படமாக வெளிவந்தது. எலி படத்தின் மூலம் சதா தமிழில் ரீ-என்ட்ரி ஆனால். வடிவேலையே யாரும் கண்டு கொள்ளாத போது, பாவம் சதாவை யாருமே கண்டு கொள்ளவில்லை.


மற்றபடி முன்னணி நட்சத்திரங்கள் நடித்த எந்தப் படங்களும் ஜுன் மாதத்தில் வெளியாகவில்லை. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் மாதம் என்பதால் பெரும்பாலானோர் தியேட்டர்கள் பக்கம் வர மாட்டார்கள் என்ற காரணத்தால்தான் அதிகப்படங்கள் வரவில்லை என்கிறார்கள்.


மெகா கலெக்ஷன் தந்த ஜூராசிக் வேர்ல்டு


ஆனாலும், ஹாலிவுட்டிலிருந்து வந்த ஜுராசிக் வேர்ல்டு அந்தப் பொய்க் காரணங்களை முறியடித்து தமிழ்நாட்டின் பல திரையரங்குகளில் இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.


ஜுன் மாதம் நாயகர்களின் பிரம்மாண்டங்களின் வெற்றி இல்லையென்றாலும் தமிழ் ரசிகர்களின் ரசனை என்ன என்பதை மீண்டும் அழுத்தமாக உணர்த்திய மாதமாக இருந்தது.


இரண்டு சிறுவர்கள் மட்டுமே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த காக்க முட்டை படம் தமிழ் ரசிகர்கள் மீதான விமர்சனங்களை உடைத்தெறிந்தது. அந்தப் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு, நல்ல படங்கள் வந்தால் நாங்கள் கண்டிப்பாக ஆதரிப்போம் என்ற திரையுலகத்திற்கு சொல்லப்பட்ட ஒரு எச்சரிக்கை மணியாகவே ஒலித்தது.


ஜுன் மாதம் வெளியான திரைப்படங்கள்...


ஜுன் 5


காக்கா முட்டை


புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்


புத்தனின் சிரிப்பு


காத்தம்மா


தேகம் சுடுகுது


ஜுன் 12


ரோமியோ ஜுலியட்


இனிமே இப்படித்தான்


ஜுன் 19


எலி


அச்சாரம்


இயக்குனர்


இரு காதல் ஒரு கதை


ஜுன் 26


லொடுக்கு பாண்டி


மூணே மூணு வார்த்தை


காவல்


யாகாவாராயினும் நா காக்க


இன்று நேற்று நாளை


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in