மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
80களில் இளமையோடு இருந்த பெல்பாட்டம் இளைஞர்களின் கனவு கன்னி ராதாவின் வாரிசுகள் இருவரும் இப்போது சினிமாவிற்கு வந்து விட்டார்கள். அந்தக் கால கனவு கன்னியின் மகள்கள்தான் என்றாலும் அவரது வாரிசுகள் சினிமாவில் ஜெயிக்க நிறைய போராடுகிறார்கள். அதிலும் கார்த்திகா படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். அடுத்து வெளிவர இருக்கும் புறம்போக்கு என்கிற பொதுவுடமை படம் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை தரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார். அந்த நம்பிக்கை தளராமல் தில்லாக பேசுகிறார்...
* ஒரு பெரிய ஹீரோயின் மகளாக இருந்தும் நிலையான ஒரு இடத்தை பிடிக்க இத்தனை போராட்டமாக இருக்கிறதே...?
ராதாவின் மகள் என்பது ஒரு விசிட்டிங் கார்ட் அவ்வளவுதான். நான் அறிமுகமாவதற்குதான் அந்த அடையாளம் பயன்படும். ஆனால் என்னை தக்க வைத்துக்கொள்ள, வளர்த்துக்கொள்ள என் திறமைதான் பயன்படும். "என் மகள் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாள்" என்கிற அறிவிப்பு மட்டும் தான் என் அம்மாவின் பங்கு. மற்றபடி யாரிடத்திலும் எனக்காக அவர் வாய்ப்பு கேட்டுப் போகவில்லை. நானும் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. முதல் படத்திலிருந்து. இப்போது நடித்துள்ள புறம்போக்கு வரை அத்தனை வாய்ப்பும் என்னை தேடி வந்ததுதான்.
* இப்படி இருந்தால் எப்படி முன்னுக்கு வர முடியும்?
நடிச்சு சம்பாதிக்கணும்ங்ற எந்த கட்டாயமும் இல்லை. பெரிய புகழுக்கும் ஆசைப்படவில்லை. எனக்கு நடிப்பு மீது நிறைய ஆர்வம், ஏன் பக்தினு கூட சொல்லலாம். படிப்பு முடிந்ததும் அடுத்து என்ன என்ற கேள்விக்கு முன்னால் நிறைய பதில்கள் இருந்தது. அதில் நான் தேர்ந்தெடுத்த பதில் சினிமா. இதற்காக என்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டு வந்தேன். வருடத்துக்கு ஒரு படம் நடித்தாலும் அது பேசப்படும் படமாக இருக்க வேண்டும். இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு சினிமா கேரியரை திரும்பி பார்க்கும்போது இந்த படத்தில் நடித்துவிட்டோமே என்று எந்தப் படத்தை பார்த்தும் வருத்தப்படக்கூடாது. இதுவரை நான் நடித்த படங்கள் வெற்றியும் அடைந்திருக்காலாம், தோல்வியும் அடைந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு படத்தில் நடித்தற்காக நான் பெருமைப்படுகிறேன்.
* கமர்ஷியல் ஹீரோயினாக வளர வேண்டிய நேரத்தில் புறம்போக்கு படத்தில் உயிரை பணயம் வைத்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறீர்களாமே?
உயிரை பணயம் வைத்து நடித்தேன் என்பது பெரிய வார்த்தை. நல்ல பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்தான் நடித்தேன். சிரமப்பட்டு நடித்தேன் என்று வைத்துக் கொள்ளலாம். குளுமனாலியில் மைனஸ் டிகிரி குளிர், ராஜஸ்தானில் 110 டிகிரி வெயில் இரண்டிலும் நடித்தேன். குயிலி கேரக்டரை ஜனா சார் சொன்னதும் இந்த கேரக்டருக்காக என்ன வேணாலும் செய்யலாமுன்னு முடிவு பண்ணினேன். அதனால் எனக்கு எந்த சிரமும் தெரியவில்லை.
* ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் இவர்கள் பற்றி....?
ஆர்யா என்மீது நிறைய அக்கறை எடுத்துக் கொள்வார். ஆக்ஷன் காட்சிகளில் நான் தைரியமாக நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு ஆர்யா கொடுத்த உற்சாகம்தான் காரணம். நானே சில காட்சிகளில் நடிக்க பயந்தபோது தைரியம் சொல்லி நடிக்க வைத்தார். விஜய்சேதுபதி ரொம்ப அமைதியானவர். தேவையானதை மட்டும்தான் பேசுவார். ஷாமுடன் எனக்கு அதிக காமினேஷன் காட்சிகள் இல்லை என்றாலும் நான் நடிக்கும்போதெல்லாம் செட்டுக்கு வருவார். நிறைய விஷயங்கள் பேசுவார். நடிப்பு தவிர சினிமாவின் மற்ற ஏரியாக்கள் பற்றியும் தெரிஞ்சுக்குங்க பிற்காலத்துல உதவும் எனச் சொல்வார். மூன்று பேருமே நல்ல நண்பர்களாகி விட்டார்கள்.
* முதல் படம் கோ ஹிட், அதன்பிறகும் தமிழில் அதிக வாய்ப்புகள் வரவில்லையே?
ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். கோ ஹிட்டுக்கு நான் காரணம் இல்லை. இயக்குனரும், கதையும்தான் காரணம். ஒரு ஹிட் படத்தில் நான் வேலை செய்திருக்கிறேன். ஹிட்டுக்கும், வாய்ப்புக்கும் சம்பந்தமில்லை. நம் திறமைதான் வாய்ப்பை பெற்றுத் தரும்
* இதுவரை கடந்து வந்த சினிமா பாதை திருப்தியாக இருக்கிறதா?
நல்ல திருப்தி. 10 படங்களில் நடித்திருந்தாலும் கமர்ஷியல் படம், ஹிஸ்ட்டாரிகல் படம், கிராமத்து படம், இரட்டை வேடம், காமெடி படம், ஆக்ஷன் படம் என எல்லாவற்றையும் செய்துவிட்டேன். இப்படியான வாய்ப்பு எல்லோருக்கும் அமையாது.
* உங்கள் அம்மாவுடன் ஒப்பிடும்போது....(கேள்வியை முடிப்பதற்குள்)
அம்மாவுடன் ஏன் ஒப்பிட வேண்டும். ராதா ராதாதான், கார்த்திகா கார்த்திகாதான். அவர் ஜீனியஸ் அவர் பக்கதில்கூட நான் செல்ல முடியாது. அவர் மாதத்திற்கு ஒரு படம் நடித்தவர். நான் வருடத்துக்கு ஒரு படம் நடிக்கிறேன். என் ஆயுளில் அவர் நடித்த படங்களில் கால்வாசி கூட நான் நடிக்க முடியாது. அதனால் இந்த ஒப்பீடு தேவையில்லாதது.
* அம்மாவுடன் நடிப்பீர்களா?
அம்மாவுடன் நடித்தே ஆக வேண்டும் என்கிற ஆசைக்காகவோ, கட்டாயத்துக்காகவோ நடிக்க மாட்டேன். ராதாவும், கார்த்திகாவும் இந்த ஸ்கிரிப்டில் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று ஒரு ஸ்கிரிப்ட் வரவேண்டும். அது எங்கள் இருவருக்குமே பிடிக்க வேண்டும். அப்படி நடந்தால் நடிக்க வாய்ப்பிருக்கிறது. சும்மாவாச்சும் அவர் அம்மாவாகவும். நான் மகளாகவும் நடிப்பதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடும்.
* அடுத்த படங்கள்....?
நான் முன்பு சொன்னதுதான். என்னைத் தேடி படங்கள் வரட்டும். அது பிடித்திருந்தால் நான் நடிக்கிறேன். வாய்ப்புகளை தேடி எப்போதும் செல்ல மாட்டேன்.