Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஷாம் 25 - ஸ்பெஷல் ஸ்டோரி

27 பிப், 2015 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Shaam---25-:-Special-story

எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமாவது என்பது கஷ்டம் என்றால் பத்து வருடத்துக்கு மேல் நிலைத்து நிற்பதும், 25 படங்களில் நடித்து முடிப்பதும் அதை விட கஷ்டம். அப்படியரு கஷ்டத்தை தாண்டி தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர் ஷாம்.


அறிமுகம்


திருப்பத்தூரை பூர்வீகமாக கொண்ட சம்சுதீன் இப்ராஹிம் என்கிற ஷாம், படித்தது பெங்களூரில். படித்து முடித்து விட்டு மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்தார். அப்போது விஜய் நடித்த குஷி படத்தில் அவரது நண்பராக சிறிய கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவாவால் 12பி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.


மீசையில்லாத முகம், வெள்ளை தேகமென வடஇந்திய நடிகர்களை நினைவுபடுத்தினாலும், ஷாமை 12பி மூலம் மக்கள் ஹீரோவாக ஏற்றுக் கொண்டார்கள். முதல் படத்திலேயே சிம்ரன், ஜோதிகா ஜோடி. ஹாரிஸ் ஜெயராஜ் இசை, லெனின் எடிட்டிங் என பெரிய டீம் அமைந்தது.


சாக்லெட் ஹீரோ இமேஜ்


அதன் பிறகு, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, அன்பே அன்பே, லேசா லேசா, படங்கள் அவருக்கு சாக்லெட் பாய் இமேஜை உருவாக்கிக் கொடுத்தது. எஸ்.பி.ஜனநாதன் இயற்கை படத்தில் அவரது வேறொரு பரிமாணத்தைக் கொண்டு வந்தார். உள்ளம் கேட்குதே அவருக்கு அடுத்த அடையாளத்தை கொடுத்தது. இப்படி ஷாமின் கேரியர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. ஆனால் என்ன காரணம், தவறு எங்கே என்று தெரியவில்லை. சாக்லெட் பாய் இமேஜுக்கும், ஆக்ஷன் இமேஜுக்கும் இடையில் அல்லாடியதில் சறுக்கல் ஏற்பட்டது. ஏபிசிடி, மனதோடு மழைக்காலம், தூண்டில், இன்பா போன்ற படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை.


கைகொடுத்த தெலுங்கு


இதனால் பிற மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பெங்களூரில் படித்ததால் அவருக்கு கன்னடம் சரளமாக பேச வரும் என்பதால் தனனம் தனனம் என்ற கன்னட படத்தில் நடித்தார். அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் அவர் நடித்த தெலுங்கு படமான கிக் அவருக்கு இன்னொரு பாதையை காட்டியது. ஹேண்ட்சமான போலீஸ் அதிகாரியாக நடித்து புதிய பாதையை கண்டுபிடித்தார். அதே படம் தமிழில் தில்லாலங்கடி என்ற பெயரில் வெளிவந்தபோது அவரது முக்கியத்துவம் குறைக்கப்பட்டு படத்தின் ஹீரோ ஜெயம்ரவிக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டது. இதனால் தில்லாலங்கடி அவர் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. தெலுங்கில் வந்த கிக் வெற்றிபெற தமிழ் தில்லாலங்கடி தோற்றது. கிக்கை தொடர்ந்து தெலுங்கில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தது.


உழைப்பின் வெற்றி


தெலுங்கில் பிசியாக நடித்தாலும் தமிழில் அவருக்கான இடம் கிடைக்கவில்லை. இனி யாரையும் எதிர்பார்க்க வேண்டாம், நம்முடைய இடத்தை நாமே பிடித்துக் கொள்வோம் என்று சொந்த தயாரிப்பில் இறங்கினார். 6 மெழுகுவர்த்திகள் படம். காணமல் போகும் மகனைத் தேடிச் செல்லும் தந்தையின் உயிரோட்டமிக்க கதை. இதற்காக தன் உடலை வருத்தி, கண்களை வீங்க வைத்து நடித்தார். படத்தை பார்த்தவர்கள் எல்லாம் ஷாமின் உழைப்பை பாராட்டினார்கள். இயக்குனர் ஷங்கர் அவரை பார்த்து மிரண்டதாக சொன்னார். எல்லோரும் அவரது நடிப்பை புகழ்ந்தார்கள். ஆனாலும் படம் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை.


வெற்றிப் பாதை


6 மெழுகுவர்த்திகள் ஷாமிற்கு பெரிய லாபத்தை தரவில்லை என்றாலும், ஒரு நடிகனாக தன்னை நிரூபித்தார். அந்தப் படத்தின் உழைப்புதான் எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு படத்தில் அவருக்கு வாய்ப்பு பெற்றுத் தந்தது. எந்த ஒரு நடிகனின் பரிமாணத்தையும் மாற்றி அமைத்து விடக்கூடியவர் ஜனா. இயற்கை படத்தில் ஷாமை மாற்றினார். ஈ படத்தில் ஜீவாவை மாற்றினார். பேராண்மை படத்தில் ஜெயம்ரவியை மாற்றினார். இப்போது இரண்டாவது முறையாக ஷாமை அடுத்த கட்டத்தில் கொண்டு விட காத்திருக்கிறார். ஆர்யா, விஜய் சேதுபதி கூட்டணியில் ஷாமிற்கு வெற்றி காத்திருக்கிறது. 25 படங்களை தாண்டிவிட்ட ஷாம் தற்போது கன்னடம், தமிழில் தயாராகும் ஒரு மெல்லிய கோடு படத்தில் அர்ஜுனுடன் நடிக்கிறார்.


ஒரு நடிகனின் வெற்றிக்குத் தேவை பொறுமை, உழைப்பு, தன்னம்பிக்கை, இந்த மூன்றும் இருந்தால் எத்தனை இடையூறுகள் வந்தாலும் ஜெயிக்கலாம் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் ஷாம். புறம்போக்கும், ஒரு மெல்லிய கோடும் ஷாமின் வெற்றிக் கணக்கை தொடங்கி வைக்கும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in