Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்வர்ணலதா மரணம்! இறுதி அஞ்சலியில் ரசிகர்கள் கண்ணீர்

12 செப், 2010 - 12:41 IST
எழுத்தின் அளவு:

நுரையீரல் பாதிப்பு காரணமாக மரணமடைந்த பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் இறுதி அஞ்சலியில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ஸ்வர்ணலதா (37). இவர் நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியாரின் பாடலைப் பாடி இசைஞானி இளையராஜாவால் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகபடுத்தப்பட்டார்.

எண்பதுகளின் முதல் பகுதியிலேயே அறிமுகமாகியிருந்தாலும் 1990ம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய ஆட்டமா... தேரோட்டமா... பாடல்தான் இவரை பிரபலபடுத்தியது. அதேபோல அதற்கடுத்து சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற "போவோமா ஊர்கோலம்... பாடல் ஸ்வர்ணலதாவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இப்பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருது கிடைத்தது. 1996ம் ஆண்டு வெளியான கருத்தம்மா படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" பாடலுக்குகாக தேசிய விருதும் பெற்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பஞ்சாபி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியிருக்கும் ஸ்வர்ணலதாவின் குரலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தனது இனியைமான குரலால் ரசிகர்களை மதிமயங்க வைத்த ஸ்வர்ணலதா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். பெற்றோர் இறந்து விட்டதால் சென்னையில் உள்ள தனது சகோதரரின் வீட்டில் இருந்து வந்த ஸ்வர்ணலதா சமீப காலமாக நுரையீரல் பாதிப்பால் கஷ்டப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை வீட்டில் இருந்தபோது திடீரென வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகி்ச்சை அளித்தும் பலனின்றி காலமானார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஸ்வர்ணலதாவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது இறுதிச்சடங்குகள் இன்று காலை நடந்தது. இதில் திரையுலக பிரபலங்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்வர்ணலதாவின் ஹிட்ஸ்களில் சில...

ஆட்டமா தேரோட்டமா (கேப்டன் பிரபாகரன்)
போவோமா ஊர்கோலம் (சின்ன தம்பி)
மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை)
அடி ராக்கம்ம கையத் தட்டு (தளபதி)
அந்தியில வானம் (சின்னவர்)
உசிலம்பட்டி பெண்குட்டி (‌ஜென்டில் மேன்)
மலைக்கோயில் வாசலிலே... (வீரா)
மாடத்திலே கன்னி மாடத்திலே (வீரா)
என்னுள்ளே.. என்னுள்ளே (வள்ளி)
உளுந்து விதைக்கையிலே... (முதல்வன்)
எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலைபாயுதே)
முக்காலா முக்காபுலா (காதலன்)
பூங்காற்றிலே உன் சுவாசத்தில்... (உயிரே)
அக்கடா நாங்க (இந்தியன்)
அன்புள்ள மன்னவனே (மேட்டுக்குடி)
குச்சி குச்சி ராக்கம்மா (பம்பாய்)
மெல்லிசையே... (மிஸ்டர் ரோமியோ)
கட்ட கட்ட நாட்டு கட்ட (ஜெமினி)
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா (உடன்பிறப்பு)
ஒரு பொய்யாவது சொல் கண்ணே (ஜோடி)
அஞ்சாதே ஜீவா (ஜோடி)
காதலெனும் தேர்வெழுதி... (காதலர் தினம்)
முத்தே முத்தம்மா... (உல்லாசம்)
மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன் (மே மாசம்)

Advertisement
கருத்துகள் (174) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (174)

manoj - cuddalore,இந்தியா
13 அக், 2012 - 23:42 Report Abuse
 manoj நீய நிரந்தரம் என் மனதில் உங்கள் பாடல்கள்..i லவ் யுவர் வாய்ஸ்
Rate this:
கோபி - Bangalore,இந்தியா
01 நவ, 2011 - 10:01 Report Abuse
 கோபி மிக சிறந்த பின்னணி பாடகியை இந்த தமிழ் திரையுலகம் இழந்துள்ளது. செல்வி ஸ்வர்ணலதா பாடிய அனைத்து பாடல்களும் மிக அழகானவை, அருமையானவை.அவர்கள் இந்த பூமியை விட்டு பிரிந்தாலும் , ரசிர்களின் நெஞ்சங்களில் என்றும் நீடித்து இடம் பெற்றிருப்பார்.
Rate this:
tamilmani - chennai,இந்தியா
26 ஜூலை, 2011 - 12:46 Report Abuse
 tamilmani நல்லவர்கள் இந்த உலகில் அதிக நாள் வாழ்வதில்லை , இனி இந்த இனிய குரலை கேட்க முடியாது , மிக வருத்தமாக உள்ளது,
Rate this:
பாலகுமார் - tirunelveli,இந்தியா
18 மே, 2011 - 22:28 Report Abuse
 பாலகுமார் ஸ்வர்ணலதா மாதிரி ஒரு அற்புதமான குரல் இந்த உலகத்தில் யாருக்குமே கிடையாது. அவங்க சாகவில்லை இன்னும் நம்மோடுதான் இருக்கிறார். இந்த உலகத்தின் நம்பர் ஒன் ரசிகன் நான்.
Rate this:
tamilkumar - vriddhachalam,இந்தியா
15 ஏப், 2011 - 11:21 Report Abuse
 tamilkumar she is very great singer,im very mis you
Rate this:
மேலும் 169 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in