Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விளம்பரத்திற்காக சர்ச்சையா? சிந்து சமவெளி விவகாரத்தில் திருப்பம்!

08 செப், 2010 - 15:49 IST
எழுத்தின் அளவு:

தனது படத்தின் விளம்பரத்திற்காக டைரக்டர் சாமி சர்ச்சையை கிளப்பி விட்டிருப்பதாக சிந்து சமவெளி விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மருமகள் மீது சல்லாபம் கொள்ளும் மாமனார் பற்றிய கதையம்சத்துடனான சிந்து சமவெளி படத்தை இயக்கிய டைரக்டர் சாமிக்கு கொலைமிரட்டல் விடுக்கப்படுவதாக முதலில் செய்திகள் வெளியாயின. சாமியே பேட்டியின் வாயிலாக இதனை ஊடகங்களுக்கு தெரிவித்தார். அதன் பின்னர் சாமியின் கார் கல் வீசி தாக்கப்பட்டது. இதுகுறித்து டைரக்டர் சாமி போலீசில் புகார் செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரனையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் சாமி மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். படத்தை ஓட வைக்க சாமியே திட்டமிட்டு இந்த பரபரப்பை கிளப்புகிறாரோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுளளதாம். அப்படி சாமி விளம்பரத்திற்காக இதை செய்தார் என்று உறுதியானால் அவரையே கைது செய்யவும் திட்டமிட்டுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சாமியைப் போலவே படத்தின் நாயகி நடிகை அனகாவும் தனக்கு கொலை மிட்டல் வந்ததாக போலீசில் புகார் செய்துள்ளார். அவரிடமும் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

sankar - singapore,இந்தியா
10 செப், 2010 - 21:30 Report Abuse
 sankar first நல்ல படமா எடுங்கப்பா................
Rate this:
madhan - mailaduthurai,இந்தியா
10 செப், 2010 - 18:33 Report Abuse
 madhan dei marumagal innoru magal mathiri. antha urava ivlo asiga paduthara konjam yosichitu padam panra
Rate this:
09 செப், 2010 - 14:32 Report Abuse
 ஜெயா.ஜெகதீஷ்.எடப்பள்ளி.குன்னூர். ஒரு நல்ல படம் வியாபார ரீதியாக வெற்றி பெற இதைப் போன்ற சர்ச்சைகளைக் கிளப்பிவிடுவது இது முதன் முறை அல்ல.........நல்ல நாயகன், நாயகி,நல்ல திரைக்கதை பிறகு ஏன் இந்த விபரீதம் ...........
Rate this:
sakthi - kakinada,இந்தியா
09 செப், 2010 - 11:38 Report Abuse
 sakthi இதுதான், அவனா ஆப்பு மேல ஏறி உட்கார்ந்துகிறது என்கிறது...
Rate this:
ராம் - Chennai,இந்தியா
09 செப், 2010 - 07:35 Report Abuse
 ராம் ஒரு படம் வியாபார ரீதியாக வெற்றி பெற இதைப் போன்ற சர்ச்சைகளைக் கிளப்பிவிடுவது இது முதன் முறை அல்ல. கமல் அவருடைய சமீபத்திய படங்களுக்கு எல்லாமே இது போன்ற சர்ச்சைகளைக் கிளப்பி விட்டார் என கோலிவுட் வட்டாரத்தில் சொல்லுவது உண்டு. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in