ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மறைந்த இயக்குனர் கே. பாலசந்தர், ஹிந்தியிலும் சில படங்களை இயக்கியுள்ளார். 1981ம் ஆண்டு ஹிந்தியில் அவர் இயக்கி கமல்ஹாசன், ரதி நடித்து வெளிவந்த 'ஏக் துஜே கேலியே' திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்1981ம் ஆண்டு ஹிந்தியில் அவர் இயக்கி கமல்ஹாசன், ரதி நடித்து வெளிவந்த 'ஏக் துஜே கேலியே' திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த ஒரு படம். ஹிந்தித் திரையுலகிலும் பலராலும் மதிக்கப்படும் இயக்குனராக விளங்கியவர் கே.பாலசந்தர்.
இந்தியத் திரையுலகின் மிகப் பெரும் நட்சத்திரமான ஆமீர் கான் சில மாதங்களுக்கு முன் சென்னைக்கு வந்திருந்த போது இயக்குனர் கே.பாலசந்தரை சந்தித்துப் பேசினார். இரு தினங்களுக்கு முன் கே.பாலசந்தர் மறைந்ததையடுத்து நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஆமீர்கான் அவருக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
“திரு.கே.பாலசந்தர் 23ம் தேதி மரணமடைந்து விட்டார். இந்தியத் திரையுலகிற்கு ஒரு சோகமான நாள். இந்தியத் திரையுலகிற்கு அவருடைய பங்களிப்பு மகத்தானது. மிகவும் பண்பான மனிதர். என்னுடைய 25 வருட வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத ஒரு மாலைப் பொழுது என்றால் அது திரு.பாலசந்தர் அவர்களைச் சந்தித்ததுதான்.