Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஜெயிக்கிற குதிரையாக மாறுவேன்! - நடிகை டிம்பிள் சோப்தே பேட்டி

05 டிச, 2014 - 15:13 IST
எழுத்தின் அளவு:

யாருடா மகேஷ், கல்கண்டு ஆகிய படங்களில் நடித்தவர் டிம்பிள் சோப்தே. தற்போது ஜீவனுடன், ஜெயிக்கிற குதிரை படத்தில் நடித்து வரும் இவருக்கு பிடித்தமான நடிகை அசினாம். அதனால் அவரைப்போன்று நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வேண்டும் என்பதுதான் அவரது சினிமா கனவாக உள்ளதாம்.


தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு....


நீங்கள் நடிகையானது பற்றி சொல்லுங்கள்?


எனது சொந்த ஊர் புனே. டிகிரி படித்து முடித்த பிறகு நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்து வந்தேன். அப்போதுதான் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு தமிழில் யாருடா மகேஷ், கல்கணடு படங்களில் நடிக்க சான்ஸ் கிடைக்க, கோடம்பாக்கத்துக்கு வநது விட்டேன். இந்த படங்களில் எனது நடிப்பைப்பார்த்து விட்டுத்தான் ஜீவன் நடிக்கும் ஜெயிக்கிற குதிரை படத்துக்கு இயக்குனர் ஷக்தி சிதம்பரம் என்னை ஒப்பந்தம் செய்தார். அதையடுத்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவும் பேசிக்கொண்டிருககிறேன்.


உங்களது ரோல் மாடல் நடிகை யார்?


ஸ்ரீதேவிதான் எனது ரோல் மாடல் நடிகை. நான் சிறுவயதில் இருநதே அவர் நடித்த படஙகளைத்தான் விரும்பிப் பார்த்து வருகிறேன். அவரது நடிப்பில் ஒரு உயிரோட்டம இருக்கும். எந்த வேடமாக இருந்தாலும் அதை உணர்ந்து செய்வார். அதனால் இப்போது நான் எந்த கதைகளை தேர்வு செய்து நடித்தாலும் அந்த கதாபாத்திரங்களை உள்வாங்கும்போது, ஸ்ரீதேவி இந்தியில் நடித்த சில படங்கள்தான் என் மனக்கண்ணில் ஓடும். மேலும், இப்போதைய லேட்டஸ்ட் நடிகைகளில் அசினை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிகப்படியான கிளாமர் காட்டாமல் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் நடித்து வருகிறார். அதனால், அசின் போன்ற ஒரு நடிகையாக சினிமாவில் வலம் வர வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக உள்ளது.


தமிழில் நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லையே?


படங்களின் வெற்றி தோல்வி குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. என்னைப்பொறுத்தவரை நல்ல கதைகளாக தேடிப்பிடித்துதான் நடிக்கிறேன். ஆனாலும் சில சமயங்களில் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இருப்பினும், இதுவரை தமிழ், தெலுங்கில் நான் நடித்த படங்களில் எனது நடிப்புக்கு நல்ல பெயரே கிடைத்து வருகிறது. அதனால்தான் படங்களின் தோல்வி எனது வளர்ச்சியை பாதிக்கவில்லை. இருப்பினும் தற்போது நான் நடித்து வரும் ஜெயிக்கிற குதிரை படம் வெற்றி பெற்று, என்னை ஜெயிக்கிற குதிரையாக மாற்றும் என்று எதிர்பார்க்கிறேன்.


நடிப்பு தவிர வேறு என்னென்ன விசயங்கள் பிடிக்கும்?


கிரிக்கெட் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் என்றால் டிவி முன்னாடி உட்கார்ந்து கொண்டு செம ரகளையுடன் பார்த்து ரசிப்பேன். தவிர, சமையல் கலையில் நான் கில்லாடி. கிச்சன் பக்கம் சென்று விட்டால் வெஜ்டேரியன் உணவுகளை விதவிதமாக சமைத்து வீட்டில் இருப்பவர்களை அசத்தி விடுவேன். ஆனால் அந்த மாதிரி சமையங்களில் மெல்லிய இசையை வீடு முழுக்க தவழ விடுவேன். காரணம், நான் இசையிலும் அதிக ஈடுபாடு கொண்டவள்.


உங்களது இஷ்ட தெய்வம் எது?


புனேயில் இருக்கும் நாட்களில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்குள்ள விஷ்ணு கோயிலுக்கு செல்வேன். மேலும், திருப்பதி, தென்திருப்பதி போன்ற ஸ்தலங்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்வேன். ஆன்மீகத்தில் எனக்கு மன அமைதியும், நம்பிக்கையும் கிடைக்கிறது.


தமிழில் உங்களின் மனங்கவர்ந்த ஹீரோ யார்?


இந்த மாதிரி வம்பில் மாட்டி விடும் கேள்விதானே வேண்டாங்கிறது. எனக்கு எல்லா ஹீரோக்களையுமே பிடிக்கும். ஒரு நடிகர் ரசிகர்களை கவர்ந்து வளர்ந்து நிற்கிறார்கள் என்றால் அவர்களிடத்தில் ஏதோ அசாத்திய திறமை இருக்கிறது என்றுதான் அர்த்தம். அதனால் திறமையை முன்வைத்து வளர்ந்து நிற்கும், வளர்ந்து கொண்டிருக்கும் அனைத்து ஹீரோக்களையுமே எனக்கு பிடிக்கும்.


உடல் அழகை எப்படி பராமரிக்கிறீர்கள்?


நடிகைகள் என்கிறபோது திறமைக்கு பிறகு அழகும் ரொம்ப முக்கியம். அதனால் உடம்பில் செயற்கையான அழகு சாதனப்பொருட்களை விட இயற்கையான அழகு சாதனப்பொருட்களை அதிகமாக பயன்படுத்துகிறேன்.அதோடு, என்னதான் பெரிய பிரச்சினை என்றாலும் அதை மனதில் போட்டுக்குழப்பிக்கொள்ளாமல், டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்வேன்.அந்த வகையில், எப்போதும் மனதை சந்தோசமாக வைக்க முயற்சி செய்வேன். அதனால் எனது அழகு அதிகரிப்பதாக கருதுகிறேன். மேலும், நடிகைக்கு உடல் எடை மிக முக்கியம் என்பதால், டயட்ஸ், உடற்பயிற்சி மூலம் உடம்பை பாதுகாத்து வருகிறேன். அந்த வகையில், எனது உயரம் 5.5 அடியும், 52 கிலோ உடல் எடையும் இருக்கிறேன்.




முத்தக்காட்சி, பிகினியில் நடிப்பீர்களா?


காதல் காட்சிகளுக்கு முத்தக்காட்சி அவசியம் என்கிறபோது நடிப்பேன். அதேசமயம், பிகினி உடையணிந்து நடிப்பது பற்றி இதவரை என்னிடம் யாரும் கேட்டதில்லை. ஆனால் கண்டிப்பாக அப்படி நடிக்க வேணடும் என்று யாராவது டைரக்டர்கள் சொன்னால் அதன்பிறகுதான் அந்த காட்சியில் நடிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி முடிவெடுப்பேன். இப்போதைக்கு பிகினி உடையணிந்து நடிப்பது பற்றி எனக்கு எந்த ஐடியாவும இல்லை என்கிறார் டிம்பிள் சோப்தே.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in