Advertisement

சிறப்புச்செய்திகள்

சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

நேச்சுரல் சயின்சஸ் - விமர்சனம்

26 நவ, 2014 - 17:11 IST
எழுத்தின் அளவு:

பன்னிரெண்டு வயது பள்ளி சிறுமி லைலா. முரட்டு சுபாவம். தன் தந்தையை கண்டுபிடிக்க அவள் எடுக்கும் முயற்சிகள் தான் நேச்சுரல் சயின்சஸ் படத்தின் ஒருவரிக்கதை.


தன் தந்தையை கண்டுபிடிக்க பள்ளியிலிருந்து தப்பிக்க முயலுகிறார் லைலா. அவளிடம் அக்கறை கொண்ட அந்தப்பள்ளியின் ஆசிரியை ஜெர்மி அவரை தடுக்கிறார். பிறகு லைலாவும், ஜெர்மியும், லைலாவின் தந்தையை தேடி கண்டுபிடிக்க செல்கின்றனர். தந்தையை பற்றி லைலாவுக்கு தெரிந்த ஒரே க்ளூ, 12, 13 ஆண்டுகளுக்கு முன்னர் அர்ஜெண்டினாவின் ஒருகிராமத்தில் வீடுகளில் டிவி ஆண்டனாக்கள் பொருத்தும் கம்பெனியில் பணிபுரிந்தார் என்பது மட்டும் தான். ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பே அந்த கம்பெனியை இழுத்து மூடி விட்டார்கள் என்ற செய்தி இண்டர்நெட் வாயிலாக தெரிகிறது. தொடர்ந்து அவர்களது பயணம் தொடர்கிறது. 200 கி.மீ., தூரத்தில் உள்ள ஊரில் டிவி ரிப்பேர் செய்யும் பணிகளை ஒருவர் செய்கிறார் என்பது தெரியவருகிறது.


அந்த இடத்திற்கு போக ஜெர்மி தயங்குகிறாள், ஆனால் லைலா பிடிவாதமாக அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று இருக்கிறாள். அவரை சந்திக்கிறார்கள், அந்த கிராமத்தில் வந்து பணிபுரிந்தபோது தான் பழகிய பெண்ணின் பெயர் செலியா என்று நினைவு கூறுகிறார். லைலாவும், ஜெர்மியும் அவருக்காக உணவுப்பொருட்கள் வாங்கி வந்து சமைத்து மூவரும் சாப்பிடுகிறார்கள். பிறகு தன் தந்தையை பற்றி அவரிடம் விசாரிக்கிறார். தன் தாயின் பெயர் ரோஸா என்றும், அவருக்கு உங்களிடம் தொடர்பு இருக்கிறதா என்று கேட்கிறார். ஆனால் தனக்கு எந்த ரோஸாவையும் தெரியாது என்று தெளிவாக சொல்கிறார் அந்த டிவி ரிப்பேர் பார்ப்பவர். தங்கள் முயற்சி அவ்வளவு தான் என்ற விரக்தியில் ஜெர்மியும், லைலாவும் காரில் கிளம்பும் போது, அந்த டிவி ரிப்பேர் பார்க்கும் நபர், ஓடி வந்து என்னுடன் வெல்டர் ஒருவரும் பணிபுரிந்தார் என்று சொல்கிறார்.


உடனே அந்த வெல்டரை தேடி கண்டுபிடிக்கிறார்கள். அவர் பெயர் புமா. அவருக்கோ ஒரே குழப்பமாக இருக்கிறது. உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். ஒன்றுமில்லை, உங்களை சந்தித்து பேச வேண்டும் என்கிறார். தான் தான் உங்களது மகள் என்கிறார். ஆனால் அவருக்கு இன்னொரு மனைவியும், டீன் ஏஜ் மகனும் இருக்கிறார்கள். தனியாக தன்னை தேடி வந்ததற்கு லைலாவை பாராட்டுகிறார் புமா. திசை காட்டும் எளிய உபகரணம் அவரது வெல்டிங் ஷாப்பில் இருக்கிறது. அதை புமா, லைலாவிடம் கொடுக்கிறார்.


நமது கலாச்சாரத்திலிருந்து இரண்டு விஷயங்கள் மாறுபடுகின்றன. லைலா தன் தந்தை யார் என்று 12 வருடங்களுக்கு பிறகு அறிந்ததும், கொஞ்சமும் எமோஷனலாகவில்லை. உணர்ச்சி வசப்படவில்லை. இந்த நிகழ்ச்சி இங்கு நடந்தால் அழுது, சிரித்து, கட்டிப்பிடித்து உணர்ச்சிகளை கொட்டியிருப்பார்கள். இரண்டாவது எங்களுடன் வர வேண்டும், அம்மாவுடன் சேர வேண்டும் என்றெல்லாம் லைலா கேட்கவில்லை. இவ்வளவு தூரம் வந்து தனக்கு உதவி செய்த ஜெர்மியை லைலா கட்டித்தழுவுகிறார். தங்களின் கிராமத்திற்கு திரும்பியதும் லைலா, குன்றின் மீது ஒரு இடத்தில் பாறைகளை வைத்து அந்த திசை காட்டும் உபகரணத்தை பத்திரமாக பதிக்கிறாள்.


லைலாவாக பவுலா ஹெர்ட்ஜாக்கும், ஜெர்மியாக பயோலா பாரியண்டோஸூம் நடித்திருக்கிறார்கள். மடியாஸ் லூச்சஸி என்ற 34வயது இளைஞர் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.


ஆரம்ப காட்சியில் ஒரு குதிரை மீது தனியாக சவாரி செய்து மலைப்பாங்கான பாதையில் லைலா சவாரி செய்து பள்ளிக்கு வருகிறாள், வித்தியாசமான காட்சி அது. அதுப்போன்ற காட்சி இங்கு நடக்குமா.?


- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in