Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நான் ஜெயிக்க வரல ; இண்டஸ்ட்ரிய மாத்த வந்துருக்கேன் : நடிகர் கஜேஷ் பேட்டி

24 நவ, 2014 - 11:11 IST
எழுத்தின் அளவு:

எங்கப்பா ஆனந்த்பாபு, நல்லா இருக்கும்போது சேர்ந்து இருந்தவங்க. நல்லா இலலாதபோது கண்டுக்கல. நான் ஜெயிக்கணுங்கறதுக்காக வரல. நான் ஏற்கனவே ஜெயிச்சாச்சு. இந்த இண்டஸ்ட்ரிய மாத்தணும். அதுக்காக ஏதாவது செயயணும் என்று வெளிப்படையாக பேசுகிறார் நடிகர் கஜேஷ்.


தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு...




நடிக்க வேண்டும் என்பது சின்ன வயது கனவா?


அபபடியெல்லாம் இல்லை. கேட்டரிங் படித்து விட்டு வெளிநாடு செல்ல வேண்டியது. தாத்தா நாகேஷ், அப்பா ஆனந்த பாபு ரெண்டு பேருமே நடிகர்கள் என்பதால் என்னையும் நடிகராக்கிட்டாங்க. நான் சின்ன பையனா இருககும்போது தாத்தா-அப்பா ரெண்டு பேருமே தினசரி ஷீட்டிங் போவாங்க, வருவாங்க. அப்ப எல்லாம் எனக்கு நடிப்ப பத்தி எதுவும் தெரியாது. தெரிஞ்சிக்கவும் நான் நினைக்கல. ஆனால் தாத்தா ரொம்ப பெரிய நடிகருன்னு தெரியும். அதேமாதிரி அப்பாவும் ஒரு கட்டத்துல பெரிய நடிகராகியிட்டாரு. ஆனா நான் ஸ்கூல் போறது, நண்பர்களோட சுத்துறதுன்னு ஜாலியா இருநதேன.


ஆனால் இப்ப என்னையும் நடிகராக்கிட்ட பிறகுதான், ஒரு சீரியஸ்னஸ் தெரியுது. தாத்தா-அப்பா மாதிரி ஒரு நல்ல நடிகரா வரணும்னு நெனச்சு, என்னை ஒரு முழு நடிகனா மாத்திக்கிட்டு வர்றேன். கண்டிபபாக ஜெயிப்பேங்கிற நம்பிக்கை இருக்கு.


கல்கண்டு படத்தில் உங்கள் நடிப்புக்கு எந்த மாதிரி ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது?


படம் பார்த்தவங்க நல்லா நடிசசிக்கிறதா சொல்றாங்க. படம் பெரிய ஹிட் இல்லேன்னாலும் சில ஏரியாக்கள்ல நல்லாதான் ஓடியிருக்கு. அந்த படத்துல நான் எப்படி நடிச்சிருக்கேன்னு கேட்டா, எமோஷன்ஸ் காட்சிகள்ல இன்னும் நல்லா நடிச்சிருக்கனும்னு எனக்கு தோணுது. மேலும் எனக்கு பெரிய திருப்தி இல்லை. இனனும் நல்லா பண்ணனும். அதேமாதிரி அடுத்த படத்துல நடிக்கப்போறேன். ஆனா இப்பவும் என்னை நான் புது நடிகருன்னுதான் நெனைக்கிறேன். இந்த படம் மட்டுமில்லாம நான் நடிக்கிற ஒவ்வொரு படமுமே எனக்கு முதல் படம் மாதிரிதான். இன்னும் நல்லா பண்ணனும் அப்படிங்கிறதுதான் எங்கிட்ட இருந்துக்கிட்டே இருக்கும். எப்பவும் எனக்கு திருப்தியே ஆகாது.


கஜேஷ் காமெடி ஹீரோவா? ஆக்சன் ஹீரோவா?


எந்த கதையா இருந்தாலும் நடிப்பேன். ஆக்சன், காமெடி, திரில்லர், மர்டர், ரொமான்ஸ் எல்லாவிதமான கதைகளிலும் நடிப்பேன். அதோடு, ஒரு கதையை ஓகே பண்ணுமபோது அது எனக்கு பொருந்தக்கூடியதா இருக்குதான்னு பார்பபேன். எனக்கு கதை பிடிக்கிறத விட அந்த கதைக்கு, என்னை பிடிக்கணும். அதோட இப்போதைககு நான் ஹை-ரேஞ்சுக்கு பண்ணினா செட்டாகாது. அதனால் எனக்கு இந்த அப்கம்மிங் ஸ்டேஜ்ல எந்த மாதிரியான கதைகள்ல நடிச்சா சரியா வரும்னு தோணுகின்ற கதைகள்ல நடிப்பேன்.


நீங்கள் எந்த மாதிரியான படங்களை அதிகமாக பார்ப்பதுண்டு?


ஆங்கில படங்கள் நிறைய பார்ப்பேன். அதற்கடுத்தபடியாக எங்க தாத்தா நாகேஷ் நடிச்ச படங்கள், கமல் சார் படங்களை ரொம்ப ரசித்து பார்ப்பேன். பிரபுதேவாவோட டான்ஸ் பிடிக்கும். முக்கியமாக எங்க தாத்தா காமெடியனா நடிச்சது மட்டுமின்றி, ஹீரோவா, வில்லனா நடித்த எல்லா படங்களுமே எனக்கு பிடிக்கும்., அந்த படங்களுக்கு நான் பெரிய ரசிகன். அதேபோல் என் தாத்தா- அப்பா ஆனந்தபாபு இருவரும் நடித்த பாடும் வானம்பாடி படமும் எனது பேவரிட் படம்தான்.


மேலும், தாத்தா நடிச்சதுல சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், மகளிர் மட்டும் படங்கள குறிப்பிட்டு சொல்லணும. இதில் மகளிர் மட்டும் படத்தில் பிணமாக நடிததிருப்பார். அது ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி யாரும் நடிக்க முடியாது. ஒரு பிணம் போல அழகாக நடித்திருப்பார். நம்மவர், தசாவதாரம், பஞ்சதந்திரம் ஆகிய படங்களில் ரொம்ப அருமையா நடித்திருப்பார்.


உங்கள் தந்தை ஆனந்தபாபு நடனத்தில் வித்தியாசம் காடடினார். கஜேஷ் என்ன வித்தியாசம் காட்டப்போகிறார்?


கல்கண்டு படத்துல ஒரு சின்ன ஸ்டெப் போட்டிருக்கேன். அது அப்பா சொன்னதுதான் அப்பா வந்து ஒரு படத்துல அஞ்சு பாட்டு பண்ணினாருன்னா அஞ்சுமே ஹெவியா பண்ணியிருப்பாரு. ஆனால் என்னைப்பொறுத்தவரை படததுக்குப்படம் ஒரு வித்தியாசத்தை காட்ட நினைக்கிறேன். ஒரே படத்துல அதிகமாக கொடுத்துட்டா அப்புறம் நிறைய எதிர்பார்க்க ஆரம்பிச்சிடுவங்க. அதனால் அப்பப்ப ஒரு வித்தியாசத்தை காட்ட முடிவு செய்திருக்கேன்.


நாகேஷின் பேரனாக சினிமாவில் வரவேற்பு எப்படி உள்ளது?


என்னை ஒரு செல்லப்பிள்ளை போல் வரவேற்கிறார்கள். அதேசமயம், சிலர் வளரக்கூடாது என்றும் நினைக்கிறார்கள். இந்த ரெண்டையும் பேலன்ஸ் பண்ணித்தான் வரணும். இப்போது சினிமாவில் வளர்ந்து நிற்கிற ஒவ்வொருத்தரும் எவ்ளோ பிரச்சினைகளை சமாளித்து வந்திருப்பார்கள் என்பது உள்ளேவந்த பிறகுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.


உங்களுக்கு காமெடி சென்ஸ் எப்படி?


நாகஷின் பேரன், எனக்கு எப்படி காமெடி சென்ஸ் இல்லாமல் இருக்கும். எனக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப ஜாஸ்தி. அதனால் என்னால் ஆடியன்சை கண்டிப்பா சிரிக்க வைக்க முடியும. கலகணடு படத்தை பார்த்தவர்கள்கூட தாத்தா மாதிரி, அப்பா மாதிரி எனது நடிப்பு வெளிப்பட்டிருப்பதாக சொன்னார்கள். இதெல்லாம் நான் செய்ய வேண்டும் என்று செய்யவில்லை. அது என்னையுமறியாமல் தானாக வெளிப்பட்டிருக்கிறது.


மேலும், சந்திரபாபு, சோ, நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு, விவேக் ஆகியோர் காமெடியன்களாக நடித்தனர். அவர்களையெல்லாம் திரையில் பார்த்தாலே சிரிப்பு வரும்.ஆனால் இப்போது அது இல்லை. காமெடியன்கள் பேசினால்தான் சிரிப்பு வருகிறது. அதுவும் டபுள் மீனிங்காக உள்ளது. இப்போது உள்ள காமெடியன்களுககு பாடிலாங்குவேஜ் கிடையாது. டயலாக்தான், அதை வைத்துதான் காமெடி செய்கிறார்கள். மேலும் சமீபத்தில் காமெடியன்களில் எனக்கு தெரிந்து வரைக்கும் வடிவேலுதான் ஒரு சிறநத காமெடி நடிகர்.


சினிமாவுல நடிப்பு தவிர வேறு என்னென்ன துறைகளில் ஆர்வம்?


டைரக்ஷன்ல எனக்கு ஆர்வம் இருக்கு. இப்ப பண்ண மாட்டேன. ஒரு மூணு, நாலு படம் நடிச்ச பிறகு டைரக்ஷன்ல இறங்குவேன். அப்ப என்ன ட்ரெண்டு என்பதை பொறுத்து கதை பண்ணுவேன். கமர்சியல் மட்டுமில்லாம ஏதாவது நல்ல கருத்துக்களும் சொல்வேன். எனக்கு ஒரு அர்ததமுள்ள கதையாக தரணும் என்ற ஆசைதான் உள்ளது. எனக்கு ரோல் மாடல் யார்ன்னா கமல் சார்தான். அவர் பண்றது மாதிரியான படங்கள் பண்ணத்தான் ஆசை. மசாலா இல்லாம ஒரு நல்ல படம் காண்பிப்பார்.


மேலும, இப்போதைய ஆடியன்ஸ்க்கு காலையிலே இருந்து ஒரே டென்சன், அந்த வேலை, இந்த வேலைன்னு செஞ்சிட்டு தியேட்டருக்கு ஒரு ரிலாக்சுக்காக வர்றாங்க.அவங்களோட டென்சனை குறைக்கிற மாதிரி படம் பண்ணுவேன். முககியமாக எண்டர்டெய்ன்மென்ட் படஙகளா ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும்ங்கிறதுதான் என்னோட ஆசையே.


ஹீரோயினியுடன் முதல்முதலாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது.


ஹீரோயினியை முதலில் தொட்டு நடித்தபோது கொஞ்சம் நெர்வஸ்ஸாதான் இருந்தது. டான்ஸ்ல அவங்கள புடிச்சிக்கிட்டு ஆடுறப்ப ஒரு இனம்புரியாத தயக்கம் . ஆனா என்னோட நடிச்ச ஆர்ட்டிஸ்ட் ஒரே ஏஜ் குரூப்ங்கறதால நல்லா பேசிப்பழகினப்ப அந்த தயக்கம், கூச்சமெல்லாம் படிப்படியாக என்னை விட்டு விலகிப்போயிடுச்சு. எங்களுக்கிடையே நல்லதொரு புரிதல் இருநதது. அதோடு டேக்கிற்கு முன்பே சில முறை ரிகர்சல் பார்த்து விட்டுததான் நடிச்சோம்.


உங்களோட ட்ரீம் ஹீரோயினி யார்?


ட்ரீம் ஹீரோயினியெல்லாம் இல்லை., ஆனா திரிஷாவ ரொம்ப பிடிக்கும். அவங்களோட நடிப்பை ரொம்ப ரசித்திருக்கேன். ரொம்ப அருமையா நடிப்பாங்க. கடினமா உழைப்பாங்க. இப்ப வளர்ந்து வர்ற நடிகைங்கள்ல ஸ்ருதிஹாசன் எனக்கு பிடித்த ஆர்ட்டிஸட்.அவங்க ஒரு ஆல்ரவுணடர்ன்னுதான் சொல்லுவேன். நடிப்பு மட்டுமில்லாம பாடுறங்க. அவங்ககிட்ட ஒரு ஸ்டைல் இருக்கு. நிறைய திறமை உள்ளவங்க.சும்மா ஏதோ மசாலாத்தனமாக நடிச்சிட்டு போகாம, ஒரு புதுமையான நடிப்பை வெளிப்படுத்துறாங்க. இப்ப இருக்கிறதுல அவங்க ஒரு நல்ல நடிகை.


உங்கள் தாத்தா நடித்த படங்களை ரீமேக் பண்ணும் ஐடியா உள்ளதா?


ரீமேக் பண்ணலாம். ஆனா என்னவொரு பிரச்சினைன்னா அதே மாதிரி இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. தாத்தா மாதிரியெல்லாம் இப்ப என்னால பண்ண முடியாது. அதேபோல எனன பாத்தவங்க, தாத்தா மாதிரி நடிச்சிருக்கீங்களா? அப்பா மாதிரி நடிச்சிருககீங்களான்னு கேட்டாங்க.அவங்களை மாதிரி பண்றதுக்கு நான் ஒன்நும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் கிடையாதே.


மேலும், அவங்கள் ஒரு நூறு பர்சண்ட் பண்ணியிருந்தா நான் ஒரு பத்து பர்சன்ட்டுதான் பண்ண முடியும. அவங்க டேலண்ட் எங்கிட்ட இருக்காது. என் டேலண்ட் அவங்ககிடட இருக்காது.


தமிழில் பிடித்த டைரக்டர்கள்?


கே.எஸ.ரவிக்குமார், ஷங்கர் , பாலா, ஏ.ஆர்.முருகதாஸ் பிடிககும். என்னதான் பிடித்த டைரக்டர்களை சந்தித்து சான்ஸ் கேட்டாலும், நமக்குன்னு ஒரு நேரம் இருக்கு. நம்மளை வச்சு படம் ப்ண்ணனுமனு அவங்க நெனச்சா அதுவும் நடக்கும். எல்லாத்துக்கும் நேரம்தான் முக்கியம்.


அப்பா சொன்ன அட்வைஸ் என்ன?


நான் பீல்டுக்கு வந்தேன். வேகமா வளர்ந்தேன். பிறகு இறங்குனதுக்கும் காரணம் இருக்கு. அந்த தவறுகளை நீ செய்யக்கூடாது. போற டயம் உள்பட அனைத்து விசயங்களையும் சரியா மெயின்டெயின் பண்ணிக்க. எப்படி நடிக்கிறியோ அது உன்னோட இஷ்டம்.என்றார்.


இன்டஸ்டரியில அவரை திரும்பிப்பார்க்காம விட்டுட்டாங்க. நல்லா இருக்கும்போது சேர்ந்து இருந்தவங்க. நல்லா இலலாதபோது கண்டுக்கல. நான் ஜெயிக்கணுங்கறதுக்காக வரல. நான் ஏற்கனவே ஜெயிச்சாச்சு. இந்த இண்டஸ்ட்ரிய மாத்தணும். அதுக்காக ஏதாவது செயயணும் என்கிறார் கஜேஷ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in