Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஆயிரம் விளக்கு - ஸ்பெஷல் ‌ஹைலைட்ஸ்!

14 ஜூலை, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

எச்.எம்.ஐ. பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ஆயிரம்விளக்கு. சுமன், ரேணிகுண்டா தீப்பெட்டி கணேசன், சுஜா, கஞ்சாகருப்பு, டெல்லிகணேஷ், பிதாமகன் மகாதேவன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்தின் ஸ்பெஷல் ‌ஹைலைட்ஸ் வருமாறு:

* தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான உன்னத உறவை சொல்வதுதான் படத்தின் மொத்த கதையும். அதனை ஆக்ஷனுடன் சொல்லுவது ‌‌ஹைலைட்.

* படத்தில்‌ இடம்பெறும் அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார்.

* என்ன தவம் செய்தேன்... என்‌னப்பெத்த மவனே... என்ற மனதை உருக்கும் பாடலை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். அவர் பாடியிருக்கும் அப்பா - மகன் உறவைச் சொல்லும் முதல் பாடல் இதுதான் என்பது இப்பாடலின் இன்னொரு சிறப்பு. உறவுகளின உன்னதத்தை விளக்கும் வகையில் யதார்த்தமான பின்னணியில் இப்பாடலை நடன இயக்குனர் சுசித்ரா வடிவமைத்துள்ளார்.

* இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் படத்தின் பலமாக அமைவதுடன், அதிநவீன தொழில்நுட்பத்தத பயன்படுத்தி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை 3 கேரமாக்கள் மூலம் படமாக்கியிருக்கிறார்கள்.

* படத்தின் கலகலப்பான இன்னொரு செய்தி, நடிகை சுஜா... அவர் கஞ்சா கருப்பு தங்கையாகவும், மதுரை பெண்ணாகவும் நடித்திருப்பது. அவர் வரும் காட்சிகள் கலகலப்பாகவும் காமெடி கலந்தும் அமைக்கப்பட்டுள்ளது.

* போறாளே... என்ற காதல் பாடலையும், ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா என்ற அறிமுகப்பாடலையும் பாடகர் கார்த்திக் பாடியுள்ளார். இப்பாடலை நடன இயக்குனர் பாபா பாஸ்கர் வடிவமைத்துள்ளார்.

* போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கும் இப்படத்தின் ஆடியோ ரீலிஸ் விரைவில் நடைபெறவிருக்கிறது.

* தனது முதல் படமான பிப்ரவரி 14ல் இயக்குனர் எஸ்.பி.ஹோசிமின் வில்லனாக அறிமுகம் செய்து வைத்து, இன்று ஹீரோவாக வலம் வரும் அஜ்மலைத் தொடர்ந்து ஆயிரம்விளக்கு படத்திலும் கமல் என்பவரை வில்லனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். இவர் தெலுங்கில் பிரபல இயக்குனர் சேகர் கம்லா தயாரிப்பில் உருவான ஆவக்காய் பிரியாணி படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in