Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

மரக்கட்டைகள், தோலில் இசைக்கருவிகள் செய்தேன்! -இசையமைப்பாளர் தாஜ்நூர் பேட்டி

27 செப், 2014 - 17:43 IST
எழுத்தின் அளவு:

நெடும்பாறை காடு படம், 80 வருட சினிமாவில் புதிய உலகத்துக்கு ரசிகர்களை கூட்டிச்செல்லும் படம். அதனால்தான் அந்த கதைக்கேற்ப புதிய இசை வடிவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக மரக்கட்டைகள், தோல் சம்பந்தப்பட்ட இசைக்கருவிகளை செய்து இசையமைத்திருக்கிறேன். வித்தியாசமான படத்தில் வித்தியாசமான இசையை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியை செய்திருக்கிறேன் என்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி இதோ...


* நெடும்பாறைக்காடு படத்துக்கு நீங்கள் வித்தியாசமான முறையில் இசையமைத்திருப்பதாக கூறப்படுகிறதே?


ஆமாம். வெங்காயம் பட டைரக்டர் சங்ககிரி ராஜ்குமார் இயக்கியுள்ள நெடும்பாறை காடு படத்தில் காற்றையும், மரக்கட்டைகளையும் இணைத்து இசை அமைத்திருக்கிறேன். தோல் சம்பந்தப்பட்ட இசைக்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறேன். அதோடு, மூங்கிலில் செய்துள்ள இசைக்கருவிகளை பயன்படுத்தி புது மாதிரியான இசையைக்கொடுத்துள்ளேன். இந்த படத்துக்கு ஆர் ஆர் பெரிய பலமாக இருக்கும், முக்கியமாக பேசப்படும்.


மேலும், இன்றைய சூழலில் இந்த மாதிரி இசைக்கருவிகளை பயன்படுத்துவது ஈசியான வேலை இல்லை. காரணம் அதற்கான பிளேயர் இல்லை. அதனால் வழக்கமான ரிதம் சம்பந்தப்படட பிளேயர்களை அழைத்து பயிற்சி கொடுத்து இசையமைத்துள்ளேன். இன்னும் ஒரு பாடல் பெண்டிங் உள்ளது. இந்த படத்தில் நடித்திருப்பது எல்லாமே புதுமுகம்தான். யாரையும் நடிகர்களாக பார்க்க முடியாது. கேரக்டர்களாக இருப்பார்கள். மேக்கிங் வித்தியாசமாக இருக்கும். ஜோதிடம் பார்ப்பதினால் என்ன நடக்கும் என்பதுதான் கதை.. அதோடு 200 வருடமாக சிட்டி மற்றும் இந்த நாட்டையே பார்க்காமல் காட்டுக்குள்ளேயே வாழ்ந்த மக்களில் ஒருவர் சிட்டிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் கதை. அவன் பார்ப்பது எல்லாமே புதிதாக இருக்கும். வேறு உலகத்தில் இருந்து வந்துள்ளான். அதனால்தான் இசையும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இசைக்கருவிகளை நானே புதிதாக டிசைன் பண்ணினேன்.


காட்டுப்பகுதிகளில் செட் போட்டு படமாக்கப்பட்டுள்ள இந்த படம் உண்மையான புதிய ட்ரெண்ட். இதுவரை காட்டாத 80 வருட சினிமாவில் இதுதான் புதுமை. புது உலகத்துக்கே ரசிகர்களை கூட்டிச்செல்லும் படமாக இருக்கும். அதனால் இந்த படத்தை நான் எதிர்பார்க்கிறேன்.


* நம்முடைய கலாச்சார இசையில் இருந்து மாறி வெஸ்டன் பக்கம் போய்கொண்டிருக்கிறார்களே? உங்கள் பாணியில் என்ன செய்கிறீர்கள்?


என்னைப்பொறுத்தவரை கதைக்கு என்ன தேவையோ அதை புதிய பாணியில் புதிய டோன்களை கொடுக்க முயற்சிக்கிறேன். எனது முதல் படமான வம்சம் படத்துக்காக கிராமங்களுக்கு சென்று சூழலைப்பார்த்து வித்தியாசமான ஆர் ஆர் செய்தேன். சினிமாவில் வராத நிறைய இசை அதில் இருக்கும். புதுமையான முயற்சி. ஒவ்வொரு படங்களிலும் சவுண்ட் சம்பந்தமாக புதுமைகளை கையாளுகிறேன். மெனக்கெடுகிறேன். வழக்கமான இசைக்கருவியை வேறு விதமாக எப்படி பயன்படுத்தலாம். ட்ரம்ஸை வேறு மாதிரியாக எப்படி கையாளலாம் என்பதை ஆராய்நது செய்கிறேன். வேறு டோன்களை கொண்டு வர முயற்சிக்கிறேன். நான் வாங்கும் அதே இசைக்கருவியை 100 பேர் வாங்குவார்கள். எல்லோரும் அதில் இருக்கும் டோனைத்தான் வெளிப்படுத்துவார்கள். ஆனால் நான் அதிலிருந்து வித்தியாசமான டோனை எப்படி வெளிக்கொண்டு வரலாம் என்று முயற்சிப்பேன். அதனால்தான் எனது படங்களில் பின்னணி இசை வித்தியாசமாக உள்ளது.


மேலும், எனது முதல் படம் வில்லேஜ் என்றதும் பின்னர் வந்தது எல்லாமே வில்லேஜ் படமாகவே இருந்தது. அதனால் வில்லேஜ் படங்கள் பண்ணி எக்ஸ்பீரியன்ஸ் ஆகி விட்டது. அதனால்தான் பாரதிராஜா முதல்மரியாதை சீரியல் பண்ணியபோது அதற்கு ஆர்ஆர் பண்ண என்னை அழைத்தார். அதில் இம்ப்ரசாகி அடுத்த அவர் இயக்கும் படத்துக்கு என்னைதான் இசையமைக்க சொல்லியிருக்கிறார்.


* இன்னொரு இசையமைப்பாளர் பாடலுக்கு இசையமைத்த மறுமுனை படத்திற்கு நீங்கள் பின்னணி இசையமைத்தது பற்றி?


அதுக்கு காரணம் படம் நன்றாக வந்திருக்கிறது என்றதும், சிறப்பான ஆர்ஆர் வேண்டும் என்று நினைத்தபோது, புதுமுக இசையைப்பாளர் என்ன பண்ணுவார் என்பது அவர்களுக்கு கேள்வியாக இருந்திருக்கிறது. அதனால் என்னிடம் வந்தனர். படம் பார்த்துவிட்டு அதன்பிறகு சொல்கிறேன் என்றேன். படத்தை பார்த்தேன் பின்னணி இசைக்கோர்ப்புக்கு பெரிய ஸ்கோப் இருந்தது. அதனால் அந்த படத்துக்கு பின்னணி இசையமைத்துக்கொடுத்தேன்.


* அப்படியென்றால் பாடல்களுக்கு இசையமைப்பதை விட ஆர்ஆர் பண்ணுவதுதான் கடினமா?


ஆர்ஆர் பண்ணும்போது கதையை உள்வாங்கி பண்ணணும் முக்கியமாக கதையை டெவலப் பண்ற மாதிரி பண்ணனும். அதுக்கு அனுபவம் வேண்டும். இப்போதுதான் கதைக்கேற்ற பின்னணி இசையை கொடுக்க முடியும். அப்படி இல்லாமல் ஆர் ஆர் இசை அமைத்தால் அதுவே படத்துக்கு பெரிய மைனசாகி விடும்.


* இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானுப்பிறகு வந்த இசையமைப்பாளர்களிடம் தனித்துவம் இல்லையே?


அவர்கள் காலத்தில் மியூசிக் டைரக்டர்கள் அதிகபட்சம் 5 பேர்தான் இருப்பார்கள். அதனால் அவர்களின் தனித்துவம் எளிதில் தெரிந்தது. இப்போது அப்படியில்லை மியூசிக் டைரக்டர் அதிகமாகி விட்டார்கள். 20 படம் பண்ணினால்தான் ஒருவரது ஸ்டைல் தெரியும். ஒவ்வொரு படத்தோடு போய் விட்டால் எதுவும் தெரியாது. ஆனால் என் படங்களைப் பொறுத்தவரை தனித்துவத்திற்காக முயற்சி எடுக்கிறேன் ரிதம் அதிகமாக இருக்கிற பாடலாக இருக்கும். ரிதம் ஓரியண்டட் பாடல்கள். பீட்டை கேட்டாலே ஒரு புதுமையாக இருக்கும். ஒவ்வொரு பாடலிலும் ஒரு புதுமை இருக்கும். இதைதான் எனது பாணியாக கொண்டு இசையமைத்து வருகிறேன்.


* இப்போதெல்லாம் குறிப்பிட்ட நாட்களிலேயே பெரிய ஹிட் பாடல்கள்கூட காணாமல் போய் விடுகிறதே?


முன்பெல்லாம் ஒரு நேரத்தில் 5 பாடல்கள் வெளிவரும். ஆனால் இன்றைக்கு ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பாடல்கள் வெளிவருகிறது. பாடல்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. முன்பு எதற்கு எடுத்தாலும் அதே பாடலைத்தான் கேட்க வேண்டியதிருக்கும். இப்போது அப்படியில்லை. ஆயிரக்கணக்கான பாடல்கள் வந்து கொண்டேயிருக்கிறது. எதை கேட்பது என்பது குழப்பமாகி விடுகிறது. அடுத்தடுத்து போய்க்கொண்டேயிருக்கிறார்கள். திரும்பத்திரும்ப கேட்பதற்கான வாய்ப்புகள் இப்போது இல்லை. இதுதான் காரணம். மற்றபடி அதே முயற்சிகள்தான் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், அப்போது ஒரு மியூசிக் டைரக்டர் என்றால் இப்போது 100 பேர் இருக்கிறார்கள். அத்தனை பாடல்கள் வருகிறது. வெளியாகிற 500 பாடல்களுமே நன்றாக இருந்தாலும் அதை கேட்க முடியாத சூழ்நிலைதான் உள்ளது.


* சமீபகாலமாக இசை தெரியாத நடிகர்-நடிகைகளே பாடுகிறார்களே இது ஆரோக்யமான விசயமா?


இசை தெரியாதவர்களை பாட வைப்பது தப்பான விசயம். அந்த பாடலும் கொடுமையாகத்தான் இருக்கும். எனது இசையில் கதம் கதம் என்ற படத்தில் நடிகை ரம்யா நம்பீசனை பாட வைத்தேன். ஒரு அழகான பாடல், ஒரு பாட்டி வடைய சுட்டு அதை காக்கா தூக்கிப்போச்சு அந்த வித்தியாசமான பாடலை பாடினார். அவர் முறையாக இசை கற்றவர். அவரைப்பற்றி தெரிந்து கொண்டுதான் பாட வைத்தேன். மேலும், ரம்யா நம்பீசன் நன்றாக இசை தெரிந்தவர். 2 நாளைக்கு முன்னாடியே டியூனை வாங்கி பயிற்சி எடுத்து வந்து, ஒரே ப்ளோவில் பாடினார். எந்த நோட்டில் தனக்கு செட்டாகும் என கேட்டு பாடுகிறார். தன்னால் முடியாத விசயங்களை கேட்டு மாற்றி வாங்கிக்கொண்டு பாடுகிறார்.


நான் இசையமைத்த வம்சம் படத்தில் நடிகர் சசிகுமாரை பாட வைத்தேன். சுவடு சுவடு என்று தொடங்கும் சிலம்பம் சம்பந்தப்பட்ட பாடல். ஒருநாள் முன்னாடியே வந்தார். ஒருநாள் முழுக்க பயிற்சி எடுத்தார். வந்து பாடிட்டு என்ன குறைன்னு கேட்டார். நான் சொன்னேன். உடனே 50 தடவை பாடிப்பார்த்தார். தெளிவு ஆகிற வரைக்கும் பயிற்சி எடுத்தார். இசையை முறையாக பயிற்சி எடுக்காதபோதும் பாடலை அழகாக பாடினார். அதை பயிற்சி பெற்றவர் பாடினதுபோல் இருக்கும். அந்த பாடலை ஒரு நாள் முழுக்க டிரையினிங் எடுத்தார். அந்த வகையில் முயற்சி இருந்தா யாரு வேனும்னாலும் பாடலாம் என்பதை சசிகுமார் நிரூபித்தார்.


* சில இசையமைப்பாளர்கள் ஹீரோ ஆகிக்கொண்டிருக்கிறார்களே? உங்களுக்கு நடிக்கும் ஆர்வம் உள்ளதா?


இந்த ஒரு வேலையை ஒழுங்காக செய்தாலே போதுமென்று நினைக்கிறேன். நடிக்க போய்ட்டாலே அவர் கவனம் சிதறி விட்டது என்று மற்ற இசையமைப்பாளர்களிடம் மாறிப்போய விடுவார்கள். மேலும், என்னையும் நடிக்க 3 படத்தில் கேட்டார்கள். எனக்கு உண்மையாவே நடிக்கத் தெரியாது. அதனால் தெரியாத வேலையை எப்படி செய்வது என மறுத்து விட்டேன்.


* உங்களை தேடி வரும் எல்லா படங்களையுமே ஏற்றுக்கொள்கிறீர்களா?


கதை கேட்டுத்தான் செலக்ட் பண்ணுகிறேன். நிறையபேர் வர்றாங்க. அதில் நல்ல கதையா பிடித்ததாக பண்ணுகிறேன். நாளைய இயக்குனர் கதைகளில் ஆச்சர்யப்பட்டு பண்ணுகிறேன். அவர்களின் யோசனை ஆச்சர்யமாக உள்ளது. சினிமாவையே புரட்டி போடுகிற விசயங்களை நாளைய இயக்குனர்கள் பண்ணுகிறார்கள். அவர்களது 5 படங்களை பண்ணினேன். ஏழையின் சிரிப்பில், மண் போன்ற கதைகள் ஆச்சர்யமாக இருந்தது. யு டியூப்பில் 50 ஆயிரம் ஷேர் போயிருக்கு. பார்த்தா ஷேர் பண்ணாம இருக்க மாட்டாங்க. அழுகை வந்து விடும். அதில் ஏழையின் சிரிப்பிலே படத்துக்கு எனக்கு விருது கிடைத்தது. நாளைய இயக்குனரின் கதையை வேற ஆளுங்களோட கம்பேர் பண்ணவே முடியாத அவர்கள் அடுத்தபடியாக இயக்கும் சினிமா படங்களுக்கும் நானே இசையமைக்கிறேன்.


மேலும், சமீபத்தில் 50 கதையாவது கேட்டிருப்பேன். அதில் இந்த நாளைய இயக்குனர்கள் சொன்ன கதைகள் வித்தியாசமாக உள்ளது. படங்களுக்கான செலவும் கம்மி. எடுத்தா பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. அதனால் இன்னும் 4 மாதத்தில் நானே ஒரு படத்தை தயாரிக்கப்போகிறேன். சதுரங்க வேட்டை மாதிரி புதுமுகங்கள் நடிக்கும் கதைதான். வேறு எதுவுமே தேவையில்லை, அதிகபட்சம் 1.45 நிடம்தான் படம். 30 நாள்கூட படபபிடிப்பு இருக்காது. தெளிவா, பக்கா பிளானிங்கோட பண்ணப்போறேன்.


* இப்போதெல்லாம் படங்கள் வெற்றி பெறுவதே அரிதாகி வருகிறதே? இந்த நேரத்தில் படம் தயாரிப்பில் இறங்குகிறீர்களே?


1000 படம் எடுத்தா 999 படம் ஓடுறது இல்லை, காரணம் தெளிவு இல்லாமல்தான் மக்கள் மனதில் இருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தெளிவான படங்களை மக்கள் ஆதரிக்கிறார்கள். சதுரங்க வேட்டை ஓடியது. அவர்கள் அதை வாங்கியதே நல்ல படம் என்ற நம்பிக்கையில்தான். அதனால் அந்த மாதிரி எடுத்தா 100 பேரு வாங்குவாங்க. பெரிய பெரிய ஆட்களெல்லாம் நல்ல படம் பண்ணும்போது சொல்லுங்கள் என்கிறார்கள். அதனால்தான் நல்ல கதை கிடைத்திருப்பதால் 100 சதவிகித நம்பிக்கையுடன் தயாரிப்பில் இறங்கியிருக்கிறேன். அப்படி நான் தயாரிக்கிற படங்களுககும் நான்தான் இசையமைப்பேன்.


* சினிமாவை தவிர என்னென்ன ஆல்பங்கள் பண்ணியிருக்கிறீர்கள்?


கவிஞர் அறிவுமதியோட சேர்ந்து வயிற்றுல இருக்கிற குழந்தை பேசுற மாதிரி உயிர் விடும் மூச்சு என்றொரு ஆடியோ டிராக் ஆல்பம் பண்ணினேன். யு டியூப்பில் பெரிய அளவில் ரீச்சாகியுள்ளது, அதைக்கேட்டால் பேசவே முடியாது சைலண்டாக இருப்பார்கள். ஒருநாள் கலெக்டர் ஆபீசில் இருந்து போன் வந்தது. அதில் பேசிய ஒரு கிராமத்து ஆள், உங்க சிடியை கேட்டேன். எனக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. 4வது குழந்தையை கரு கலைக்க நினைத்தேன். ஆனால் உங்கள் ஆடியோ ஆல்பத்தை கேட்ட பிறகு, அந்த தவறை உணர்ந்து திருந்தி விட்டேன் என்றார். அதோடு சொல்லி முடிப்பதற்குள் அழுதுவிட்டார்.


பெண் சிசு கொலை பற்றிய அந்த ஆல்பத்தில் பேசும் குழந்தையானது வயிற்றுக்கள் இருக்கும்போதே ஏம்மா டிவியைப்பார்த்து அழுதுக்கிட்டே இருக்காங்க எல்லோரும் என்று சொல்லும், அதேபோல், நான்தான் நல்லா இருக்கேனே என் டாக்டருக்கிட்ட போறீங்க என்றெல்லாம் கிண்டல் செய்யும். அப்பா மீசை கம்பளிப்புச்சி குத்துற மாதிரியே இருக்கு என்று சொல்லும். அப்போது கருவை கலத்து தன்னை கொல்ல முடிவு பண்ணி விட்டார்கள் என்பதை அறிந்து கொண்ட அந்த பெண் சிசு, என்னை கலைங்க ஆனா அம்மாவுக்கு எந்த வலியும் இல்லாம பாத்துக்கோங்க டாக்டர் என்று சொல்லும். இது 2 நிமிடம் படம்தான். டயலாக் மியூசிக்தான் போகும். இதைக்கேட்டே ஏராளமானோர் அழுது பதறியிருக்காங்க. இதை சாதனையாக கருதுகிறேன். ஒருத்தரை மாற்றினதே பெருமையான விசயம்தான்.


அதே மாதிரி, தாய்ப்பால் என்றொரு ஆல்பமும் பண்ணிக்கொண்டிருக்கிறேன். ஒரு தொகுப்பாக வெளிவரப்போகிறது. ஆடியோ ட்ரேக் இது. மியூசிக்கா சாங்க், டயலாக் என மாறி மாறி வந்து கொண்டேயிருக்கும். சமூக சிந்தனையுடன் வரும். இந்த ஆல்பத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா, சிம்பு, கார்த்திக், சத்யராஜ் ,சிவகுமார். டைரக்டர் பாரதிராஜா ஆகியோர் பாடுறாங்க. சினிமாவை தவிர நான் வேலை செய்யும் இந்த மாதிரி ஆல்பங்கள் எனக்கு பெரிய அளவில் மனதிருப்தியை தந்துள்ளன. இதுதவிர, வளைகுடா நாடுகளுக்கு செல்லும் தமிழ் மக்களின் பீலிங்ஸை சொல்லும் ஆல்பம் ஒன்றும் விரைவில் தயாராக உளளது. அதில் பெரிய கவிஞர்கள் பாடல்கள் எழுதுகிறார்கள்.


* தற்போது என்னென்ன படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?


ஞானக்கிருக்கன், 13ம் பக்கம் பார்க்க, கதம் கதம், நெடும்பாறைக்காடு உள்பட அரை டஜன் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறேன்.


* பெரிய ஹீரோக்களின் படங்கள்தான் இசையமைப்பாளர்களுக்கு பெரிய அளவிலான அங்கீகாரத்தை தருமா?


அப்படியெல்லாம் இல்லை. தெளிவான கதைகளை செலக்ட் பண்ணி இசையமைத்தாலே போதும். அந்த மாதிரி படங்களையே இப்போதைய ரசிகர்கள் வரவேற்கிறார்கள். அதனால் அந்த படங்கள் ஹிட்டாகும்போது நமக்கான அங்கீகாரமும் கிடைத்து விடும். இசையமைப்பாளர் டி.இமான் கூட நீண்டகாலமாக சினிமாவில் இருக்கிறார். ஆனால், மைனா படம் வந்தபிறகுதான் அவர் வெளியில் தெரிந்தார். அதேமாதிரி நல்ல கதையும், படங்களின் ஹிட்டும்தான் இசையமைப்பவர்களுக்கு அங்கீகாரத்தை கொடுக்கும். அதனால் என்னைப்பொறுத்தவரை பெரிய ஹீரோ படங்கள் என்றில்லாமல் நல்ல கதைகளுக்கு மட்டுமே ஆரம்பத்தில் இருந்தே முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன் என்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in