Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

அவர் சொன்ன ஐ லவ் யூ! உஷ்... இது நடிகை நஸ்ரியாவின் ரகசியம்!!

01 நவ, 2013 - 16:28 IST
எழுத்தின் அளவு:

"நேரம் நன்றாக இருந்தால், கதாநாயகிகள் கனவுக் கன்னியாவதை தடுக்க முடியாது. நாயகியே நன்றாக இருந்தால், கனவுக் கன்னியாக "நேரம் தடையிருக்காது. அப்படி ஒரு நாயகி தான், "நேரம் படத்தில் அறிமுகமான நஸ்ரியா. "காஷ்மீர் ஆப்பிளுக்கு கால் முளைத்தால், கருப்புத் திராட்சை கண் விழித்தால், ஆரஞ்சுப்பழத்திற்கு உதடு அசைந்தால், "ஸ்ட்ராபெரி சிரிக்க முயன்றால் எப்படி இருக்கும்? அது நஸ்ரியா, என்கிறது, இன்றைய இளைஞர் பட்டாளம்.

இளைஞர் மட்டுமின்றி, இளம்பெண்களின் "பேஸ்புக் பக்கத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் நாயகிகளில், நஸ்ரியாவுக்கு தான் முதலிடம். ஒரே படத்தில், எந்த நடிகைக்கும் இந்த "ஈர்ப்பு இருந்ததில்லை. அந்த வரவேற்பு தான், அடுத்தடுத்து நஸ்ரியாவின் "கால்ஷீட்டை "பிசி ஆக்கிவிட்டது. இருப்பினும், "தினமலர் வாசகர்களின் தீபாவளியை மேலும் தித்திப்பாக்க, நஸ்ரியாவின் "நச் பேட்டி

* எங்கே இருந்தீங்க இத்தனை நாள்...?

வளர்ந்தது, படித்தது துபாய்; இப்போ இருப்பது திருவனந்தபுரம். அம்மா, அப்பா, நான், தம்பி என, குட்டியான "க்யூட் குடும்பம். நம்புங்க, நான் இப்போ "பி.காம்., படிக்கிறேன்!

* "பேமஸ் ஹீரோக்களின் "டிக் நீங்க தானாமே?

"நேரம் நல்லா இருந்ததால, ஆர்யா, தனுஷ் படங்களில் நடக்க வாய்ப்பு கிடைத்தது, என்னோட "லக். அதே நேரத்தில் என்னுடைய உழைப்பும் இருக்கு. நிறைய பேருக்கு கதாநாயகி ஆக வேண்டியிருக்கு, பார்க்கலாம்.

* உங்கள் அழகிற்கும், பெயருக்கும் தொடர்பிருக்காமே?

நஸ்ரியா என்பது உருது வார்த்தை. "நம் கண்ணை விட்டு அகலாத விஷயம் என்று, அதற்கு பொருள். இதற்கும், என் பெயருக்கும் தொடர்பிருக்கா?(உண்மை தானே, கண்ணை விட்டு அகலுமா உங்கள் முகம்?)

* கவனம் செலுத்த விரும்பும் விஷயம்?

நடிப்புக்கு புதுசு என்பதால், எனக்கு எதுவும் தெரியலே. நடிப்பு, நடனம், அலங்காரம் என, அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

* தமிழ் சினிமாவில் போட்டி பலமா இருக்குமே?

போட்டி இருக்கணும்; அப்போ தான், நல்லா நடிக்கணும் என்ற எண்ணம் வரும். நமக்கு கிடைக்கும்னு எழுதியது, கண்டிப்பா கிடைக்கும்.

* கேரள வரவு என்றாலே, தமிழில் தனி முத்திரை கிடைக்குதே?

இது ஆரம்பத்தில் இருந்தே இருக்கு; கேரள நடிகைகள் நிறைய @பர் தமிழுக்கு வர்றாங்க. முத்திரை ஏன் கிடைக்கிறது என்பதை ரசிகர்களிடம் தான் கேட்க வேண்டும்.

* நீங்க பார்த்து, பொறாமைப்பட்ட நடிகைகள்?

நதியா, ரேவதி, ஷாலினி படங்களை பார்த்து, அசந்து போயிருக்கேன்; பொறாமை பட்டிருக்கேன். இப்படியும் நடிக்க முடியுமான்னு, யோசிக்க வெச்சவங்க, அவங்க தான்.

* உண்மையை சொல்லுங்க, நீங்க "மேக் அப் மேடம் தானே?

சொன்னா நம்ப மாட்டீங்க... ஜீன்ஸ், டாப், தலையில் ஒரு "கிளிப்; இது தான் நஸ்ரியா. எனக்கு பிடிக்காத விஷயம் "மேக்அப்.

* வளர்ச்சி ஒருபுறம், "கிசுகிசு மறுபுறமா?

நடிக்க வந்துட்டா, இதெல்லாம் சகஜம். நம்மை சுத்தி "கிசுகிசு வந்தா, நாம வேறு "லெவலில் இருக்கோம்னு, சந்தோஷப்படணும்.

* ஜெய்-நஸ்ரியா...?

என் முதல் படம் "திருமணம் என்னும் நிக்காஹ்; ஹீரோ ஜெய். தமிழ் கத்துக்கிட்டது, அவரிடம் தான். எங்களுக்குள் இருப்பது, "நட்பு மட்டும் தான்.

* "படிப்பு-நடிப்பு கஷ்டமில்லையா?

என் பிரண்ட்ஸ் தான், எனக்கு உதவி செய்யுறாங்க. டைம் கிடைக்கும் போது, அவங்களை சந்திச்சு, குறிப்பெடுத்துக்கொள்வேன். தேர்வுகளை "மிஸ் செய்யததில்லை.

* ஆர்யா, நடிகைகளுக்கு "டார்ச்சரா?

அய்யோ பாவம்... அவரு நல்ல பிரண்ட். எதுவா இருந்தாலும், முகத்துக்கு நேரா பேசுவார். ஜாலியான ஆள், நல்ல நடிகர்.

* தமிழ் ரசிகர்கள்?

அவங்களோட எதிர்பார்ப்பை நெனச்சா, பயமா இருக்கு; அதை பூர்த்தி செய்ய முயற்சி பண்ணனும். ஒரு நாள் அம்மா கூட போயிட்டு இருந்தேன்; ஒருவர் ஓடிவந்து, "ஐ லவ் யூ... உங்க கண்ணு ரொம்ப பிடிக்கும்னு சொல்லிட்டு, ஓடிட்டாரு. அதை இப்போ நெனச்சாலும், சிரிப்பு வரும். என் ரசிகர்கள், "தினமலர் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள், என, அவர் பேட்டியை முடிக்க, பெட்டியை கட்ட மனமின்றி, விடைபெற்றோம் அவரிடம்!

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Mohandhas - singapore,சிங்கப்பூர்
23 நவ, 2013 - 16:24 Report Abuse
Mohandhas ஏம்பா தமிழ் நாட்டுல பொண்ணுகளே இல்லையா?,, தமிழன் என்ன தசைக்கு மயங்கும் மூடனா?.... இயக்குனரும், தயாரிப்பளர்களும் சிந்தியுங்கள்... சேரன் உட்பட சில சிறந்த இயக்குனர்களும் தமிழ் பெண்களை வைத்து படம் எடுப்பதில்லை .. ஏன்?
Rate this:
Jayan - Jeddah,சவுதி அரேபியா
03 நவ, 2013 - 11:50 Report Abuse
Jayan நஸ்ரியா அது செய்ய நல்ல நடிகை.
Rate this:
Mohamed Majeed - nellai,இந்தியா
03 நவ, 2013 - 11:49 Report Abuse
Mohamed Majeed நம்ம சினிமா ரசிகர்கள் சில பேர் ஆபாசத்தை விரும்புறாங்க பல பேர் அழகு திறமை பொழுதுபோக்கு கருத்து இவற்றை விரும்புறாங்க. இயக்குனர்கள் இந்த நாலு விசயத்துக்கு மக்கியதுவம் கொடுத்தால் போதும் vaarthai வரிகளில் இல்லாத ஆபாசம் உடலில் இல்லை.
Rate this:
Natarajan Ramanathan - chennai,இந்தியா
03 நவ, 2013 - 06:02 Report Abuse
Natarajan Ramanathan இது ரொம்பநாள் தாங்காது.
Rate this:
mainarkunju16@gmail.com - india,இந்தியா
02 நவ, 2013 - 12:07 Report Abuse
mainarkunju16@gmail.com பட்டாசா இவ தொப்புளில் வைத்து வெடிப்பது போல ஒரு படம் எடுத்து இந்த தீவாளிக்கு விட்டிருந்தால் பிசிகிட்டு ஓடும் படம்..
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in