Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சினிமா நூற்றாண்டு விழா கமிட்டிக்கு சிவாஜி ரசிகனின் கண்ணீர் கடிதம் - ஸ்பெஷல் ஸ்டோரி!

27 ஆக, 2013 - 12:20 IST
எழுத்தின் அளவு:

   அன்புள்ள சினிமா நூற்றாண்டு விழா அமைப்பாளர்களுக்கு  அடியேன் சிவாஜி ரசிகனின் அன்பு வணக்கம்...

நம்ம பாரத தேசத்துக்குள்ள சினிமா வந்து 100 வருஷம் ஆகிப்போச்சுங்களாம். நம்ம தமிழ்நாட்டுக்குள்ள சினிமா வந்து 75 வருஷம் ஆகிப்போச்சுங்களாம். அந்த விபரமெல்லாம் எனக்கு தெரியாதுங்க. நான் வணங்குற தெய்வம், என் அன்பு அண்ணன் சிவாஜி பத்திதான் எனக்கு தெரியுமுங்க. விழுப்புரம் கணேசனா இருந்தவரு சிவாஜி கணேசனா மாறின கதைதான் தெரியுமுங்க. பராசக்திலேருந்து பூப்பறிக்க வருகிறோம் வரைக்கும் 300க்கும் கூடுதலா அவர் நடிச்ச படங்கதான் தெரியுமுங்க. சிவபெருமான், சிவத் தொண்டர், வீரபாகு, கிருஷ்ணன், இப்படியாப்பட்ட கடவுள்கள நாங்க அவர் உருவத்துலதாங்க பார்த்திருக்கோம். கப்பலோட்டிய தமிழன், பாரதி, வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜசோழன் இவுங்களையும் அவர் உருவத்துலதாங்க பார்த்திருக்கோம். இன்னிக்கு நாலு வேடத்துல நடிக்கிறோம் அஞ்சு வேடத்துல நடிக்கிறோம்னு பீத்திக்கிறாங்களே அன்னிக்கே 9 வேஷத்துல நடிச்ச மனுஷன் அவரு. சஸ்பென்ஸ் திரில்லர் படம் எடுக்குறோம்னு பெருமையா சொல்றாங்களே. புதிய பறவையை விடவாய்யா ஒரு சக்சஸ் த்ரில்லர் வேணும்.

அவரு பண்றதெல்லாம் ஓவர் ஆக்டிங்குன்னு அவருக்கு பிடிக்காதவங்க சிலபேரு சொல்லுவாங்க. அந்த காலத்துல அதுதான்யா நடிப்பு. அவரும் தேவர் மகன், முதல் மரியாதையில நீங்க சொல்ற யதார்த்த நடிப்ப காட்டலியா. சிலபேரு அவரு ரொம்ப சிக்கனவாதி, யாருக்கும் எதுவும் செய்றதில்லேன்னு நாக்குல பல்லுபடாம சொல்லுவாங்க. மற்றவங்க மாதிரி உதவி பண்ணிக்கிட்டு அதை பப்ளிசிட்டி பண்ணிக்க தெரியாது அவருக்கு. வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை இருக்கே பாஞ்சாலங்குறிச்சியில அதுக்கு இடமும் வாங்கி கொடுத்து சிலைய அமைச்சும் கொடுத்தது யாரு... இது ஒரு சோறு பதம்தான் இன்னும் நிறைய இருக்கு.

மக்களுக்காக கட்சி ஆரம்பிச்சு சொத்துல பாதிய இழந்தது யாருக்காவது தெரியுமாய்யா?, பொய் சொல்லத் தெரியாம, துரோகம் பண்ணத் தெரியாம வேளைக்கு ஒண்ண பேசத்தெரியாம அரசியலுக்கு நாம லாயக்கில்லேண்ணு ஒதுங்கினவருய்யா அவரு. காமராசர் ஒருத்தரை மட்டும்தான் கடைசி வரைக்கும் தலைவரா நினைச்சு வாழ்ந்தவரு. இன்னிக்கு புதுசா நடிக்க வர்றவங்க ரெண்டு படத்துலயே நாலு  பங்களா கட்டிக்கிறாங்களே. ஆனா என் தலைவனுக்கு இப்பவும் அன்னை இல்லமும், ராயப்பேட்டை சிவாஜி பிலிம்ஸ், சூரக்கோட்டை பண்ணையும்தான்ய்யா சொந்தம்.

இதையல்லாம் நான் ஏன் உங்களுக்கு எழுதுறேன்னா. சினிமாவோட 100வது பிறந்த வருஷத்தை கொண்டாடப்போறீங்க. ரொம்ப சந்தோஷம். அம்பது வருஷம் சினிமா நடிப்புன்னு வாழ்ந்தானே என் தலைவன் அவனுக்கு என்னய்யா செய்யப்போறீங்க. இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்கீங்க. அவரு செத்த அன்னிக்கு சினிமா உலகமே கூடி அழுததோட சரி, அதுக்குபிறகு அவரை மறந்துட்டு அவுங்கவுங்க வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த நடிகர் சங்கம் என்னிக்காவது அந்த மனுஷனோட பிறந்த நாளை நினைவு நாளை கொண்டாடி இருக்கா. ஆளுயரத்துக்கு அவரோட படத்தை மாட்டி வச்சிருக்காங்களே அதுக்காவது ஒரு மாலைய வாங்கிப் போட்டிருப்பாங்களா. ஆனா மேடையில  பேசுறப்போ மட்டும் சிவாஜியை பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்தேன்னு நாக்கூசாம சொல்லுவாங்க.

அடையார் சத்யா ஸ்டூடியோவுக்கு எதிர்ல  2005ம் வருஷம் ஏப்ரல் 22ந் தேதி சிவாஜி மணிமண்டபம் கட்டப்போறோம்னு பூமி பூஜை போட்டப்ப அம்புட்டு சந்தோஷப்பட்டோம். இன்னிக்கு 8 வருஷம் தாண்டிப்போச்சு யாராவது அதை எட்டிப்பார்த்திருக்கீங்களாய்யா. அரசாங்கம் ஒதுக்கின 12 கிரவுண்டு இடமும் சும்மா கிடக்குது. அரசு ஒதுக்கின இடத்தை பயன்படுத்தலேன்னா குறிப்பிட்ட வருஷத்துக்கு பிறகு அரசாங்கம் அதை எடுத்துக்கும் அந்த வருஷத்தையும் நெருங்குது தெரியுமாய்யா? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ரெண்டு நடிகராவது ஆட்சிக்கு வேண்டியவங்களா இருக்கீங்க. யாராவது இதை அரசாங்கத்தோட கவனத்துக்கு கொண்டு போயிருக்கீங்களா?

சிவாஜி மணிமண்டபத்துல தியேட்டர் வரப்போவுது, நாடக கொட்டகை வரப்போவுது, நடிப்பு கல்லூரி வரப்போவுது, சிவாஜி மியூசியம் அமைச்சு அதுல அவரோட போட்டோ அவர் அணிந்த உடைகள் எல்லாத்தையும் வைக்கபோறோம்னு கதை கதையா சொன்னீங்க; எல்லாம் எங்கேய்யா போச்சு. சினிமால காட்டுற மாதிரியே சிவாஜி ரசிகனுக்கும் சீன் காட்டிட்டீங்கல்ல. அன்னிக்கு ஒரு கோடி ரூபாய்ல கட்டப்போறதா திட்டம் சொன்னீங்க. இன்னிக்கு ஒரு கோடி ரூபாய்ல காம்பவுண்டு சுவர்கூட கட்ட முடியாதுங்களே.

சரி அதுபோகட்டும் விடுங்க, அம்மா மணிமண்டபத்துக்கு இடம் கொடுத்தாங்க. அதை கட்டினா பேரு அம்மாவுக்கு போயிடும்னு, அய்யா அதை அப்படியே போட்டுட்டு நாற்பதாண்டுகால நண்பனுக்கு சிலை வைக்கறேன்னு பீச் ரோட்டுல சிலை வச்சாரு. அதுக்கு இன்னய வரைக்கும் தினமும் மாலைபோடுறது சிவாஜி குடும்பந்தான்யா. அட அதுக்குகூடவா நடிகர் சங்கத்தால முடியாம போச்சு. அரசாங்கம் சார்புல பிறந்த நாள் நினைவு நாளுக்கு அமைச்சருங்க மாலை போட்டு மரியாதை செய்வாங்க. அந்த லிஸ்ட்டுலகூட என் தலைவன் இல்லய்யா. அட நீங்களாவது அவரது பிறந்த நாள், நினைவு நாளுக்கு அவரது சிலைக்கு மாலை போட்டிருக்கீங்களா. கர்நாடகாவுல போயி பாருங்க ராஜ்குமாரோட பிறந்த நாளை தீபாவளி மாதிரி கொண்டாடுறாங்க. தெலுங்கு பக்கம் போயி பாருங்க என்.டி.ஆரை தெய்வமா கொண்டாடுறாங்க. நீங்க அந்த அளவுக்கு செய்யவேணாம்யா. அந்த மனுஷனை நினைச்சாவது பார்க்கலாமுல்ல.

இன்னும் நிறைய வவுத்தெரிச்சல் இருக்குது. யாருகிட்டபோயி சொல்றதுன்னுதான் தெரியல. ஏதோ நீங்க விழா கொண்டாடப்போறதால உங்ககிட்ட சொன்னா எதுனாச்சும் செய்வீங்கல்ல அதான் சொன்னேன். குறைஞ்ச பட்சம் அவரோட மணிமண்டபத்துக்காவது ஒரு வழி சொல்லாம நீங்க சினிமா 100 விழா கொண்டாடினீங்கன்னா சாமி இல்லாம தேர்திருவிழா கொண்டாடின மாதிரிதான் இருக்கும். தப்பா எதுனாச்சும் சொல்லியிருந்தா மன்னிச்சிருங்க சாமிங்களா.

அன்புள்ள

சிவாஜி ரசிகன்

Advertisement
கருத்துகள் (29) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (29)

Nagarajan - chennai,இந்தியா
17 அக், 2013 - 05:24 Report Abuse
Nagarajan பெரிய தேச தியாகி .என்ன செய்ய சினிமா மோகம் எத்தனையோ ஸ்போர்ட்ஸ் பெர்சன் கூட இருக்கிறார்கள் .
Rate this:
selvaraju - nagai,இந்தியா
28 ஆக, 2013 - 07:39 Report Abuse
selvaraju கர்நாடகாவுல போயி பாருங்க ராஜ்குமாரோட பிறந்த நாளை தீபாவளி மாதிரி கொண்டாடுறாங்க. தெலுங்கு பக்கம் போயி பாருங்க என்.டி.ஆரை தெய்வமா கொண்டாடுறாங்க. நீங்க அந்த அளவுக்கு செய்யவேணாம்யா. அந்த மனுஷனை நினைச்சாவது பார்க்கலாமுல்ல.
Rate this:
parvathy murali - melbourne,ஆஸ்திரேலியா
28 ஆக, 2013 - 05:18 Report Abuse
parvathy murali Nobody has to do anything for Shivaji One thing is true that is ''Shivaji is a Genius''No body can beat him in acting'''' There is no other shivaji in acting field nowa days'' His name and fame are tehre foreever through his great films for generations to come
Rate this:
Jananayakan - chennai,இந்தியா
28 ஆக, 2013 - 00:36 Report Abuse
Jananayakan சந்திரமுகில சம்பாதிச்சத வச்சி 5 மணி மண்டபம் கட்டலாம்
Rate this:
vallaboy - colifornia,யூ.எஸ்.ஏ
04 டிச, 2013 - 06:00Report Abuse
vallaboyகரெக்ட் எ சொன்ன...
Rate this:
G.Nandagopal - Dammaam,சவுதி அரேபியா
27 ஆக, 2013 - 19:59 Report Abuse
G.Nandagopal சிவாஜி ..50 வருசமா நடிப்புக்காக பாடுபட்டாரு ..அப்புடி இப்புடின்னு புலம்பறது முட்டாள் தனம் ..அந்தாள் என்ன நாட்டோட சுந்தந்திரதுக்கா பாடுபட்டார் .. அவர் பிழைப்புக்கு வழி அதான் நடித்தார். எனக்கு தெரிஞ்சு அவர் உருப்படியா பண்ணின விஷயம் தன் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் கர்மவீரரிடம் போயி ஆசிர்வாதம் வாங்கினதுதான் ..வேறொன்னும் உருப்படியா இல்லை..சிவாஜி ரசிகா ..போயி உன் புள்ளைங்கள படிக்க வை அப்பு...
Rate this:
srinivasan - Chennai,இந்தியா
28 ஆக, 2013 - 04:09Report Abuse
srinivasanவெளி நாட்டுலே போய் ஆணி புடுங்கற தலைவா? இப்போ இருக்கிற புத்திசாலிகள் எல்லோரும் நாட்டுக்கா உழைக்கிறாங்க. வாய் இருக்கிறதுன்னு பேச வந்துடாதீங்க? என்ன சரியா?...
Rate this:
siva - Chennai,இந்தியா
28 ஆக, 2013 - 10:19Report Abuse
sivaநந்தகோபால், சுதந்திரத்திர்க்கு போராடியவர்களுக்கு மட்டும் இந்த நாட்டில் என்ன செய்துவிட்டார்கள், எத்தனை பேரை நினைவில் வைத்திருக்குரீர்கள். ஜெய்கிந்த் செண்பகராமன், என்ற ஒரு தமிழனை பற்றி தெரியுமா? சென்னையில் சோமன்பாபுவிற்கு சிலை இருக்கலாம் சிவாஜிக்கு மணிமண்டபம் கூடாதா? இப்படி மறக்கடித்து மறக்கடித்து தானே தமிழ் இன்று தன்னை யாரெண்டு அறியாமல் இருக்கிறான். இப்படி தன்னிலை மறந்து, பெருமை இழந்து யார் யாரிடமோ கையேந்தி நிற்கிறான் அதற்கு உங்களைப் போன்றோர் தான் காரணம்...
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in