பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இப்போதெல்லாம் முன்னணி நடிகர்கள் தம் அடிப்பது போன்று எங்காவது போஸ்டர்களைப்பார்த்தாலே சில அரசியல் கட்சிகள் போராட்டத்தில் எகிறி குதித்து விடுகின்றன. துப்பாக்கி படத்தில்கூட விஜய் தம் அடிப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டபோது பலத்த எதிர்ப்பு எழுந்தது. அதையடுத்து படத்திலிருந்தும் அந்த காட்சியை நீக்கினர். இதனால் இப்போது தம் அடிக்கும் காட்சிகளில் நடிப்பதற்கு பல நடிகர்கள் தயங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், சில்க் ஸ்மிதாவின் கதையில் உருவாகி வரும் நடிகையின் டைரி படத்தில் நடித்துள்ள சனாகான், ஒரு காட்சியில் தம் அடிப்பது போல் நடித்துள்ளாராம். ஆனால் இந்த காட்சியை போஸ்டராக்கினால் படத்திற்கு பெரிய பப்ளிசிட்டி கிடைக்கும் என்று படக்குழு திட்டம் தீட்ட, அலறி விட்டாராம் சனாகான். ஏற்கனவே சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறேன் நான். இந்த நேரத்தில் இந்த மாதிரி போஸ்டர்களை ஒட்டினால் எனக்கு எதிராகவே பெண்கள் அமைப்புகள் வரிந்து கட்டி நிற்கும் என்றும் தனது அச்சத்தை தெரிவித்தாராம்.
அதோடு, இதே படத்தில் சனாகான் சரக்கு அடிப்பது போன்றும் ஒரு காட்சி உள்ளதாம். ஆனால் அந்த விவகாரத்தை ரொம்ப சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்களாம்