Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் நடிகைகளை கொண்டாடுவார்கள்: நஸ்ரியா நசிம்

09 மே, 2013 - 02:02 IST
எழுத்தின் அளவு:

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் கேரள புதுவரவு நஸ்ரியா நசிம். தமிழில் இவர் நடித்துள்ள முதல்படம் நேரம். தமிழ், மலையாளம் என இரண்டு மொழியிலும் இப்படம் உருவாகியுள்ளது. இன்னும் இந்தப்படம் வெளியாகவில்லை, ஆனால் அதற்குள் அம்மணிக்கு கோலிவுட்டில் ஏகப்பட்ட வரவேற்பு. தற்போது ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கா, தனுஷ் உடன் நய்யாண்டி, ஆர்யாவுடன் ராஜா ராணி என மூன்று படங்களில் நடித்து வருகிறார். நஸ்ரியா தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி...

* உங்களைப் பற்றி?

என் பெயர், நஸ்ரியா நசிம். கேரளா தான், சொந்த ஊர். அம்மா, அப்பா ஒரு தம்பி. சிறிய குடும்பம். இப்போது தான், பிளஸ் 2 தேர்வை எழுதி முடித்திருக்கிறேன்.

* நடிக்க வருவதற்குமுன்?


மலையாள, "டிவி சேனலில், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தேன். கொஞ்சம் பாடவும் தெரியும். தமிழ், மலையாள மொழிகளில் தயாரான, சில இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளேன். சினிமா பிரபலங்களின் தொடர்பு கிடைத்ததை அடுத்து, நடிப்பு சேவையாற்ற வந்து விட்டேன்.

* தமிழ் சினிமா பற்றி?


தமிழில், இப்போது, நல்ல கதைகள் படமாகின்றன.  சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இப்போதெல்லாம், அதிகமான, தமிழ் படங்களை பார்க்கிறேன். படத்தின் கதை குறித்து, குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஆலோசித்து தான், நடிக்க சம்மதிக்கிறேன்.

* பெரிய ஹீரோக்களுடன் நடிக்கிறீர்களே?


நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே, பெரிய ஹீரோக்களுடன் நடிக்க, வாய்ப்பு கிடைத்ததை, எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன். நினைக்கும்போதே, மனதுக்குள், பட்டாம்பூச்சி பறக்கிறது. ஜெய்யுடன், "திருமணம் என்னும் நிக்காஹ் என்ற படத்திலும், தனுசுடன் "நையாண்டி என்ற படத்திலும் நடிக்கிறேன். ஆர்யாவுடன் "ராஜா ராணி படத்தில் நடிக்கிறேன். ஒவ்வொரு படத்திலும், எனக்கு வித்தியாசமான ரோல்.

* தமிழ் சினிமாவில், கேரள நடிகைகளுக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து?


ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களுக்கு பிடித்தது போன்ற படங்களில் நடித்தால் போதும், அவர்கள், நம்மை கொண்டாடுவார்கள். அசின், நயன்தாரா ஆகியோர் நடித்த படங்களை எல்லாம், பார்த்திருக்கிறேன். கண்டிப்பாக,  தமிழ் சினிமாவிலும், தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Sivakumar - Permbalur,இந்தியா
11 மே, 2013 - 21:35 Report Abuse
Sivakumar சரி மேடம் உங்க ஆல்பம் ஓகே தான். பார்த்தேன் நல்லா இருக்கு,,
Rate this:
Kannan Appadurai - Al Buraidh,சவுதி அரேபியா
10 மே, 2013 - 11:56 Report Abuse
Kannan Appadurai தமிழில் மானம் உள்ளவர்கள் அதிகமா,,,,? தமிழ் நடிகைகளை ஆந்திராவில் போய் பாருங்க அப்பு தெரியும்....
Rate this:
10 மே, 2013 - 09:21 Report Abuse
நாசிர் உசைன் - தமிழன்டா இதற்கு அர்த்தம் தமிழில் அழகான நடிகைகள் இல்லை என்பதில்லை. தமிழில் மானம் உள்ளவர்கள் அதிகம். அதனால் தான் தமிழ் நடிகைகள் கிடைப்பதில்லை.
Rate this:
Chenduraan - kayalpattanam,இந்தியா
09 மே, 2013 - 21:27 Report Abuse
Chenduraan நடிப்பு சேவையாற்ற வந்து விட்டேன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in