Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

60 வது தேசிய விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி; தமிழ் படங்களுக்கு 5 விருதுகள் கிடைத்தது

04 மே, 2013 - 13:02 IST
எழுத்தின் அளவு:

ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் இந்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறது. அதன்படி 60 வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்திற்கு 2 விருதுகள், வழக்கு எண் 18/9 படத்திற்கு இரு விருதும், பாலாவின் பரதேசி படத்திற்கு ஒரு விருதும் அறிவிக்கப்பட்டன. மேலும் பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் பிரானுக்கு மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதும் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டில்லியில் வழங்கினார். அதன்படி...

* 93 வயது மூத்த நடிகர் பிரானுக்கு தாதா சாகேப் பால்கே விருதும், ரூ.10 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இந்த விழாவில் பிரான் கலந்து கொள்ளவில்லை.

* பான் சிங் தோமர் படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருதுடன் ரூ.2.50 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இந்த படத்தின் டைரக்டர் திக்மான்சு துலியா, பிரணாப்பிடம் பரிசை பெற்றுக் கொண்டார்.

* சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாலிவுட் நடிகர் இர்பான் கானும், மராத்தி நடிகர் விக்ரம் கோக்லேவும் பெற்றனர். இவர்களுக்கு விருதோடு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

* சிறந்த நடிகைக்கான தேசிய விரு‌து, தக் என்ற மராத்தி மொழி படத்தில் நடித்த நடிகை உஷா ஜாதவுக்கு கிடைத்தது. விருதோடு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசும் பெற்றார்.

* சிறந்த டைரக்டருக்கான விருது, மராத்தி மொழி படமான தக்கிற்கு கிடைத்தது. படத்தின் டைரக்டர் சிவாஜி லோட்டன் பாட்டீல் சுவர்ண கமல் விருதுடன் ரூ.2.50 லட்சம் ரொக்க பரிசும் பெற்றார்.

* சிறந்த பொழுதுபோக்கு படமாக பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரஹாம் தயாரித்த, விக்கி டோனர் படமும், மலையாள படமான உஸ்தாத் ஹோட்டல் படங்கள் தேர்வு செய்யப்பட்டு அப்படங்களுக்கு ரூ.2 லட்சம் ரொக்க பரிசும் அளிக்கப்பட்டன.

* சிறந்த குழந்தைகள் படத்திற்கான விருதுக்கு ,தேக் இந்தியன் சர்க்கஸ் படம் தேர்வு செய்யப்பட்டு, அப்படத்திற்குவிருதுடன் ரூ.1.5 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

* சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது விக்கி டோனர்  படத்தில் நடித்த அனுப் கபூருக்கு, விருதுடன் ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

* சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது, விக்கி டோனரில் நடித்த டோலி அலுவாலியாவுக்கும், தணிச்சலா நஜான் என்ற மலையாள படத்தில் நடித்த நடிகை கல்பனாவுக்கும் கிடைத்தது. விருதோடு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

* சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை தேக் இந்தியன் சர்க்கஸ் படத்தில் நடித்த விரேந்திர சிங் ரத்தோரும், 101 சோடியாங்கல் படத்தில் நடித்த மின்னும் பகிர்ந்து கொண்டனர். விருதோடு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

* சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது, சிட்டாங் படத்திற்காக பாடகர் சங்கர் மகாதேவனுக்கு வழங்கப்பட்டது. விருதோடு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

* சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது சுதீர் பல்சானேவுக்கு வழங்கப்பட்டது. விருதோடு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

* சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது கஹானி படத்திற்காக சுஜாய் கோஸ்க்குக்கு வழங்கப்பட்டது. விருதோடு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

* சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருது, கஹானி படத்திற்காக நம்ரதா ராவுக்கு வழங்கப்பட்டது. விருதோடு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

தமிழ் படங்களுக்கு ஐந்து விருதுகள்:

* கமல்ஹாசன் இயக்கி, நடித்து தயாரித்த விஸ்வரூபம் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடன அமைப்புக்காக பிரபல நடன கலைஞர் பிர்ஜூ மகாராஜூக்கும், சிறந்த கலை அமைப்புக்காக லால்குடி என்.இளையராஜாவுக்கும் வழங்கப்பட்டது. விருதோடு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

* வழக்கு எண் 18/9 படத்திற்கு சிறந்த மாநில விருது வழங்கப்பட்டது.இவ்விருதை படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் பெற்றார். விருதோடு ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.சிறந்த சிகை அலங்காரத்திற்கான விருது ராஜாவுக்கு வழங்கப்பட்டது. விருதோடு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

* பரதேசி படத்திற்கு சிறந்த ஆடை அலங்காரத்திற்கான விருது வழங்கப்பட்டது. இவ்விருதை இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி பெற்றார். விருதோடு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

தேர்வு குழுவின் சிறப்பு விருது :  பெங்காலி படமான சித்ராங்கா, இந்தி படங்களான கஹானி, ஹேங்கஸ் ஆப் வசிப்பூர்-2, தேக் இந்தியன் சர்க்கஸ், தலாஸ் போன்ற படங்களுக்கு சிறப்பு விருதுகள் கிடைத்தது.

சிறப்பு விருது : இதேப்போல் மலையாள நடிகர் லால், இந்தி நடிகை ப்ரணீதா சோப்ரா, மறைந்த மலையாள நடிகர் திலகன், அசாம் நடிகர் பிஸ்ணு கர்கோரியா, இந்தி நடிகை தனிஷ்தா சாட்டர்ஜி, மராத்தி மொழி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஹன்ஸ்ராஜ் ஜக்தாப் ஆகியோருக்கு சிறப்பு விருதுகளையும் பிரணாப் வழங்கினார்.

இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியோடு மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், மனீஷ் திவாரி ஆ‌கியேரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை நடிகை ஹூமா குரேசி, நடிகர் மாதவன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in