பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கவிஞர் வைரமுத்துவின் அப்பா ராமசாமி தேவர்(87) சிறுநீரக கோளாறு காரணமாக மரணம் அடைந்தார். தேனிமாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் ராமசாமி தேவர். கவிஞர் வைரமுத்துவின் அப்பாவான ராமசாமி தேவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது, அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக போராடியும் அவரது உயிர் சிகிச்சை பலன் இன்றி இன்று(16.03.13) பிரிந்தது.
ராமசாமி தேவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், வைரமுத்து, பாண்டியன் என்ற இருமகன்களும், விஜயலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் வைரமுத்து. நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகி, கவிப்பேரரசாக உயர்ந்தவர். மறைந்த ராமசாமி தேவரின் இறுதிசடங்கு அவரது சொந்த ஊரான வடுகப்பட்டியில் நாளை(17.03.13) நடக்கிறது. வைரமுத்துவின் அப்பா மறைவுக்கு திரையுலகினர் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.