Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நான் பாதம் பதிக்காத இடமே கிடையாது! மனம் திறக்கும் நடிகை சுகன்யா!!

03 மார், 2013 - 14:17 IST
எழுத்தின் அளவு:

"கருத்த மச்சான்... கஞ்சத் தனம் எதுக்கு வெச்சான்... என,  கருப்பு காளைகளை, கலர் கனவு காண வைத்த கனவுக்கன்னி.  "ராசாவே... சித்தெறும்பு என்னை கடிக்குது, என, ஆட்டம் போட்டு,  பிறரை தன் வசம் மொய்க்க வைத்தவர். "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே... என, கிழிந்த ஆடையில் ஆடி, இளைஞர் மனதில் புத்தாடை சூடிய  புதுமலர். இதற்கு மேல் சுகமான வரிகள் தேவையில்லை,  அவர் "சுகன்யா என்பதை தெரிவிக்க!

கனவு கன்னிகள் பட்டியலில் தன் பெயரையும் பதித்து, ஒரு காலத்தில் இளைஞர் பட்டாளத்தின் இதயத்தில் விளையாடிய நடிகை சுகன்யா, மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்த போது, உங்களுக்காக சந்தித்த பேட்டி இதோ:

* நாட்டியம் தான் நடிகை சுகன்யாவை தந்ததாமே?


என் நடனத்தை பார்த்து பாரதிராஜா அணுகினார். "லண்டனில் இருப்பதாக, கூறி, முதலில் என் தந்தை மறுத்தார். சமரசங்களுக்கு பின், பாரதிராஜாவின் "புதுநெல்லு, புது நாத்து என்னை நாயகி ஆக்கியது.

* சலங்கை கால்கள், கேமரா முன் நின்ற போது என்ன தோன்றியது?

"யூத் பெஸ்டிவல் கூட்டிச் செல்வதாக என் தந்தை அழைத்துச் சென்றார்; அங்கே போய் பார்த்தால், "சூட்டிங். முதல் படமே, 9 விருதுகளை வென்றது.

* "பம்பரம் தானே... சுகன்யாவை பிரபலமாக்கியது?

மூன்றாவது படமாக, "சின்ன கவுண்டர் வாய்ப்பு வந்தது. படம் பெரிய ஹிட். அதன் பின், வாய்ப்புகள் குவிந்துவிட்டன.

* கவர்ச்சி, நடிப்பு என பல பரிமாணங்கள் எப்படி சாத்தியமானது?

என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த பின், நல்ல கதாபாத்திரம், நல்ல கதையை தேர்வு செய்யத் தொடங்கினேன். அதில் என் பெற்றோருக்கு முழுப்பங்கு உண்டு. மூன்றில் ஒரு பங்கு நடிப்பைத்தான் வெளிப்படுத்தினேன்.

* "மார்க்கெட் நடிகைளுக்கு நெருக்கடி இருக்குமாமே?


வரும் அனைத்து வாய்ப்பையும் ஏற்க முடியாது. சிலவற்றை மறுக்கும் போது, பலர் கோபம் அடைந்தனர். அவற்றையும் கடந்து தான், நடிப்பில் சாதிக்க முடிந்தது.

* "சினிமாக்காரர்கள்-விமர்சனம் பிரிக்க முடியாதோ?


சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். அதில் வரும் நல்ல கருத்துக்களை பின்பற்றுவதில் தவறில்லை. சமுதாயத்தை உயர்வடையச் செய்வதில் நடிகர்களுக்கும் பங்குண்டு.

* மதுரை ரசிகர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவராமே நீங்கள்?

உங்களுக்கும் தெரிந்து விட்டதா... என் பெற்றோருக்கு பூர்வீகம் மதுரை தான். நான் நடித்த படங்களில் இருந்த கிராமிய தோற்றம், மதுரை தந்தது. எனக்கான கதாபாத்திரத்தை தேர்வு செய்ய தூண்டுகோலாய் இருந்ததும், மதுரை ரசிகர்கள்.

* நடிப்பு, நடனம் போதாதென, "டப்பிங் துறைக்கும் போனீங்க?

ஹி..ஹி... அதுவும் எப்படி இருக்கு என பார்த்தேன். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில், நந்திதா தாஸிற்கு "டப்பிங் பேசியதை மறக்கவே முடியாது. அழுத்தமான அந்த பாத்திரத்திற்கு, அழுத்தம் தந்தது, என் குரல். வசனம் எழுதிய சுஜாதாவின் பாராட்டை பெற்றுத்தந்தது. "டெலி பிலிம் இயக்குனர், ஆன்மிக பாடல் எழுதி, இசையமைத்து, பாடி, பல துறையையும் பார்த்துவிட்டேன்.

* சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டாரா சுகன்யா?

தமிழில் "என்னமோ நடக்குது, மலையாளத்தில் "மாணிக்க தம்புராட்டி உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறேன். சினிமா தவிர, 10 பாடல்களை கொண்ட "அழகு என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளேன்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
04 மார், 2013 - 15:57 Report Abuse
T.C.MAHENDRAN அம்மணி அப்படியே கொஞ்சம் ராஜ கண்ணப்பனைப்பற்றியும் சொல்லியிருக்கலாம் .
Rate this:
selva - neyveli,இந்தியா
04 மார், 2013 - 21:46Report Abuse
selvaயார் அந்த ராஜகன்னபன்...
Rate this:
R.Saminathan - mumbai,இந்தியா
04 மார், 2013 - 13:42 Report Abuse
R.Saminathan நீங்க நலமுடன் வாழ்க ..,
Rate this:
S. Authi Bhagavan - Jubail,சவுதி அரேபியா
04 மார், 2013 - 10:10 Report Abuse
S. Authi Bhagavan ஹாட் Aunty
Rate this:
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
04 மார், 2013 - 00:02 Report Abuse
Sivakumar Manikandan super ஆன்ட்டி................
Rate this:
Govind - Delhi,இந்தியா
03 மார், 2013 - 23:11 Report Abuse
Govind சுகன்யா மிக சிறந்த ஒரோ நாட்டிய கலைஞர். இவர் கலாஷேத்ராவில் 8ஆம் வகுப்பு படிக்கும் போதே மாஸ்கோவில் நடந்த இந்திய கலை விழாவில் சென்று ஆடியவர். மேலும் கலாஷேத்ராவில் நடக்கும் பல நாட்டிய நாடங்களில் நடித்து தனகென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டவர். இவரை நான் பள்ளி காலத்திலிருந்தே அறிவேன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in