Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

விக்ரம்-50: ஒரு சிறப்பு பார்வை!!

16 பிப்,2013 - 10:14 IST
எழுத்தின் அளவு:

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் "ஐ". இது அவருக்கு 50வது படம். இந்த படம்தான் விக்ரமின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கி வைக்கப்போகிறது. சினிமாவில் போராடி ஜெயித்தவர்களுக்கு விக்ரம்தான் வழிகாட்டி, போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் விக்ரம்தான் ரோல் மாடல். அந்த அளவிற்கு எந்தவித சினிமா பேக்ரவுண்டும் இல்லாமல் சினிமாவில் போராடி ஜெயித்தவர் விக்ரம்.

1990ம் ஆண்டு வெளிவந்த "என் காதல் கண்மணி" விக்ரமிற்கு முதல் படம். அந்த படத்திலிருந்து தொடங்கியது விக்ரமின் தோல்விப் பயணம். கிட்டத்தட்ட "சேது"க்கு முன்பு வரையில் அவர் நடித்த 22 படங்களுமே அவரது போராட்ட வாழ்க்கையைச் சொல்லும். நடிப்பு திறமையின் முழு வடிவமான விக்ரம் அவை எல்லாவற்றையும் அடக்கி வைத்துக் கொண்டு சூழ்நிலைக்கும், படத்துக்கும் ஏற்றவாறு நடித்து போராடிய காலம் அவை. சில மலையாள படங்களில் இரண்டாவது, முன்றாவது ஹீரோவாககூட நடித்திருக்கிறார். அவர் நடித்த காதல் கீதம், மீரா, புதிய மன்னர்கள், உல்லாசம், கண்களின் வார்த்தைகள் போன்ற படத்தை பார்த்தால் விக்ரமா இது என்று ஆச்சர்யப்பட வைக்கும்.

9 வருட போராட்டத்துக்கு பிறகு 1999ம் ஆண்டு வெளிவந்த "சேது" விக்ரமின் சினிமா வாழ்க்கைக்கு டர்னிங் பாயிட்டாக அமைந்தது. அந்தப் படத்தில் முரளி நடிக்க வேண்டியது. கடைசி நேர மாற்றத்தில்தான் விக்ரம் நடித்தார். தனக்குள் தேக்கி வைத்திருந்த நடிப்பு திறமை அனைத்தையும் அதில் கொட்டித் தீர்த்தார். சினிமா உலகம் அவரை திரும்பிப் பார்த்தது. ஆனால் பெரிய வாய்ப்புகளை கொடுக்கவில்லை. சேதுவுக்கு பிறகும் அவருக்கு சினிமா கதவை திறந்து விடவில்லை. சில படங்களில் நடித்த பிறகு "விண்ணுக்கும் மண்ணுக்கும்" படம் அவரை முழுமையாக அடையாளம் காட்டியது.

தில், தூள், சாமி, ஜெமினி, படங்கள் ஆக்ஷன் ஹீரோவாக்கியது. ஆக்ஷனில் வெற்றி பெற்றாலும், காசி, அந்நியன், பிதாமகன், ராவணன், தெய்வத்திருமகள் படங்களில் நடிப்பின் புதிய பரிமாணங்களை தந்தார். பிதாமகன் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. அந்நியனும், தெய்வ திருமகளும் விருதுக்கு அருகில் அழைத்துச் சென்றது. இந்த இரண்டுக்கும் இடையில் சாமுராய், கந்தசாமி, மஜா, பீமா, ராஜபாட்டை, தாண்டவம், டேவிட் படங்கள் அவருக்கு பெரிய ஸ்பீட் பிரேக்குகளாக அமைந்தது.

வெற்றியும், தோல்வியும் ஒரு கலைஞனுக்கு சகஜம்தான் என்றாலும், விக்ரமின் சமீபத்திய தோல்விகள் கவலையோடு கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. தெய்வதிருமகள், ராவணன், டேவிட் படங்களில் அவர் நடிப்பையும், உழைப்பையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனாலும் வணிகரீதியாக அந்த படங்கள் ஏன் வெற்றிபெற வில்லை என்பதை விக்ரம் கவனத்தில் கொள்ள வேண்டும். மஜா, ராஜபாட்டை பீமா, கந்தசாமி போன்றவை விக்ரமே விரும்பி ஏற்படுத்திக் கொண்ட தோல்விகள்.

விக்ரம் கடந்து வந்திருக்கும் 49 படங்களும் அவருக்கு பல்வேறு படிப்பினைகளை கொடுத்திருக்கும். தொடர்ந்து வரும் தோல்விகள் அடுத்து அவர் ஒரு வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு அவரை தள்ளியிருக்கிறது. ஒரு கலைஞனுக்கு இது ஆபத்தான சூழ்நிலை என்பதை விக்ரம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் தற்போது நடித்து வரும் "ஐ" ஷங்கர் இயக்கும் படம். ஹிட்டுக்கு மினிமம் கியாரண்டி உண்டு. அவரது 50 வது படம் அசுரத்தனமான வெற்றி பெற அனைவரும் வாழ்த்துவோம்.

ஆனால் அதே நேரத்தில் கடந்து வந்த பாதைகள் தந்த அனுபவத்தில் இனி வரும் படங்களை விக்ரம் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த 50 படங்களும் அவர் புகழைப் பாடும் படங்களாக அமையும். விக்ரம் 100 வது படம் நடிக்கும்போது தேசிய விருதுகள் அவர் கழுத்து தாங்க முடியாத அளவுக்கு நிறைந்திருக்கும்.

Advertisement
ஏழை, பணக்காரன்னு பார்த்து காதல் வரக்கூடாது! வாசகர்களின் கேள்விக்கு த்ரிஷா பதில்!!ஏழை, பணக்காரன்னு பார்த்து காதல் ... சமரசம் செய்வதா...? சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி சிறப்பு பேட்டி!! சமரசம் செய்வதா...? சினிமாவை விட்டு ...

வாசகர் கருத்து

av.ravaratharajamanikandan - kalpakkam,இந்தியா
22 செப்,2014 - 14:00
av.ravaratharajamanikandan விக்ரம் அண்ணன் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரிடம் இருந்து பல அனுபவங்களை கற்றுக்கொண்டேன் என்னுடைய ரோல் மாடல் அண்ணன் விக்ரம் நானும் நான்கு வருடம் போராடி ஜெயித்தேன். இன்னும் பல வெற்றிகள் நான் வெல்வேன் ,, எல்லாம் புகழும் இறைவனுக்கே ,,
suku - sivakasi,இந்தியா
20 ஆக்,2014 - 18:11
suku all the best
Dhil Sen - Kochi,இந்தியா
23 ஆக்,2013 - 11:47
Dhil Sen My Dear Vikram your are a india's phenomenal actor and good human being there is no doubt and no one can refuse it. you shouldn't agree to doing ordinary films which is not up to your level of potential. please make a right ion in all your future projects. we wish & support you for great successes ahead in your life & your film journey . all the very best for all your upcoming films...By CVF....
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
28 மார்,2013 - 00:02
Neelaa விக்ரமுக்கு வயது 50, படமும் 50 சரியான கணக்கு
m.s.marees - thmilnadu,இந்தியா
23 பிப்,2013 - 04:14
m.s.marees dear vikram wishe u all the best for future life
dhasarathan - chennai,இந்தியா
22 பிப்,2013 - 14:44
dhasarathan விக்ரம் ஒரு சிறந்த நடிகர் , அவருடைய படங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் .................
Nallathambi Krishnan - deport road,சிங்கப்பூர்
21 பிப்,2013 - 06:17
Nallathambi Krishnan விக்ரம் நடிப்பின் ஒரு சிகரம் 50 தாவது படம் வெற்றி பெரி என் வாழ்த்துகள்
Senthil - Chennai,இந்தியா
21 பிப்,2013 - 00:17
Senthil All the best for your big victory of "I".
Iqbal - chennai,இந்தியா
17 பிப்,2013 - 06:01
Iqbal விக்ரம் ஒரு நல்ல நடிகர், அவர் ஜெயிபதட்கு வாழ்த்துகிறேன்.
selva - brazilya,பிரேசில்
17 பிப்,2013 - 05:06
selva you r a great actor..........
mohanasundaram - pudukottai,இந்தியா
17 பிப்,2013 - 00:16
mohanasundaram hai vikky already wrote our story so that is become right but don't left confident
cheeyanguys - madurai,இந்தியா
16 பிப்,2013 - 22:06
cheeyanguys ஒரு சைலென்ட் , சிம்பிள்,ஹர்ட் வொர்கெர்,தங்க யு vikram சார்
Ganesh G - Nagappattinam,இந்தியா
16 பிப்,2013 - 19:40
Ganesh G விக்ரம் ஒரு மிகச்சிறந்த நடிகர் மட்டும் அல்லாது, நல்ல சமூக சேவகரும் சிந்தனையாளர் கூட அவர் சிறந்த படங்களை தந்து மக்களை மகிழ்விக்க மக்களின் ஆதரவு அவருக்கு எப்பவும் உண்டு வாழ்த்துக்கள்
Arumugam - Paris,பிரான்ஸ்
16 பிப்,2013 - 17:49
Arumugam திறமை மிக்க நடிகர். இயற்கையான நடிப்பு. எம்.ஜி.ஆரை போலவே சினிமா இவரை தாமதமாகவே ஏற்று கொண்டது. அவரை போலவே இவரும் வெற்றி அடைந்தார். அவர் கட்சி மூலம் புகழ் பெற்றார். இவருக்கு அந்த வாய்ப்பு இல்லை. மற்றபடி நல்ல மனிதர் என்றே நினைக்கிறேன்.
renjith - chennai  ( Posted via: Dinamalar Android App )
16 பிப்,2013 - 13:06
renjith choose ur story carefully..dnt waste too much time 4 a single time.As a fan we r expecting good movies frm u.
renjith - chennai  ( Posted via: Dinamalar Android App )
16 பிப்,2013 - 13:03
renjith plz choose subject up to ur level.u r a great actor,but ur way of choosing stories is worst sometimes.we want more good films from u.all d best!!
chilamparasan - Dubai  ( Posted via: Dinamalar Android App )
16 பிப்,2013 - 11:39
chilamparasan Dear vikram wish u all the very best for your future endeavours.... u r deserve to win.
ajay - trichy  ( Posted via: Dinamalar Android App )
16 பிப்,2013 - 11:29
ajay விக்ரம் ஒரு மாபெரும் தி்றமைசாலி கதை தேர்வு செய்வதி்ல் கோட்டை விடுகிறார் நிச்சயமாக ஒரு நாள் அவர் கைவசம் எண்ணில் அடங்கா தேசிய விருதுகள் இருக்கும் அதற்கு எனது வாழ்த்துக்கள்
chandru - tamilnadu,இந்தியா
16 பிப்,2013 - 11:18
chandru சிறந்த நடிகர் விக்ரம் -வாழ்த்துகள்
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Trisha illainna Nayanthara
  Tamil New Film Saghasam
  • சாஹசம்
  • நடிகர் : பிரஷாந்த்
  • நடிகை : ,நர்கீஸ் பக்ரி
  • இயக்குனர் :அருண் ராஜ் வர்மா
  Tamil New Film Thani oruvan
  • தனி ஒருவன்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Urumeen
  • உறுமீன்
  • நடிகர் : சிம்ஹா
  • நடிகை : அதிதி செங்கப்பா
  • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in