Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஏழை, பணக்காரன்னு பார்த்து காதல் வரக்கூடாது! வாசகர்களின் கேள்விக்கு த்ரிஷா பதில்!!

Trisha replies viewrs comments
தினமலர் வாசகர்களுக்கு என் வணக்கம், நான் உங்கள் த்ரிஷா. இந்த காதலர் தின நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தற்போது நான் மஸ்கட்டில் ரம் படப்பிடிப்பில் இருக்கேன். உங்கள் கேள்விகளை இமெயில் மூலம் படித்தேன். என்னிடம் கேள்வி கேட்ட அத்தனை வாசகர்களுக்கும் என் அன்பும், நன்றியும். 100க்கும் மேற்பட்ட கேள்விகள், பதில் சொல்லவே கஷ்டமான கேள்விகள் இருந்தாலும், சில கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் சொல்கிறேன். எல்லாரும் அம்மா, அப்பா, அக்கா, தங்கை, தம்பி என்று அத்தனை பேரும் ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும். இந்த உலகில் காதல் இல்லாத உறவும், உணர்வும் இல்லை என்றே நினைக்கிறேன். ஆத‌லால் காதல் செய்வீர். வாழ்த்துக்கள் என்றார்.

சரி, இனி வாசகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார் த்ரிஷா. இதோ...

* கேள்வி : பிரபு, சென்ட் ஆப்ரிக்கா ரிபப்ளிக். த்ரிஷா - தாங்கள் கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்வதற்கு நன்றி, அதற்கு என்னால் ஆன உதவிகளை செய்யலாமா...?

த்ரிஷா : உங்களுக்கு முதலில் நன்றி, த்ரிஷா பவுண்டேஷன் என்ற பெயரில் தான் நான் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். நீங்கள் அதை தொடர்பு கொள்ளலாம். அல்லது கேன்சர் இன்ஸ்டியூட்டை தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை தாரளமாக செய்யலாம்.

* கேள்வி : அம்மு, மதுரை.
ஹாய் த்ரிஷா, அசின், த்ரிஷா - விஜய்க்கு மேட்சிங்கான ஜோடி யாருனு நினைக்கிறீங்க. நீங்க நடித்ததில் கில்லி படம் தான் சூப்பர். மறுபடியும் விஜய் கூட நீங்க ஜோடி சேரணும்.

த்ரிஷா : நான் நிறைய ஹீரோக்கள் கூட நடிச்சிருக்கேன், விஜய்யும் நிறைய ஹீரோயின்கள் கூட நடிச்சிருக்கார். யார் சரியான ஜோடியா இருப்பாங்கனு ரசிகர்கள் தான் சொல்லணும். விஜய் கூட திரும்ப கில்லி மாதிரி ஒரு கதை அமைந்து, நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பா நடிப்பேன்.

* கேள்வி : கார்த்தி, திருவாரூர். உங்க சொந்த ஊர் எது? கேமரா முன் நடித்த முதல் அனுபவம் எப்படி?

த்ரிஷா : தாத்தா, பாட்டி எல்லாரும் இருப்பது பாலக்காடு. முதலில் நான் 14 வயசில் மெடிமிக்ஸ் விளம்பரத்தில் நடிச்சேன். அப்ப 10வது படிச்சிட்டு இருந்தேன். இன்னும் அது என் நினைவில் இருக்கு. கேமராமேன் ரத்னவேலு அந்த முதல் அனுபவம் எப்பவும் மறக்க முடியாது.

* கேள்வி : ராம், சென்னை. நீங்கள் ஏன் என்னை கல்யாணம் பண்ண கூடாது?

த்ரிஷா : பழகி ஒருவரை ஒருவர் புரிஞ்சிகிட்டா கண்டிப்பா கல்யாணம் பற்றி யோசிக்கலாம். எனக்கு ஏற்ற மாதிரி கணவரா இருக்கணும், கல்யாணம் ஒருநாள் முடிவு அல்ல, விளையாட்டும் அல்ல, வாழ்க்கை ராம் வாழ்க்கை.

* கேள்வி : இந்து, சென்னை.
வாட் இஸ் யுவர் லைப்டைம் கோல்?

த்ரிஷா : எதுவுமே இல்ல, நான் சினிமாவுக்கு வரணும்னு நினைச்சு பார்த்தது இல்லை, வந்தேன். இதுவரையில் நான் எதையும் பிளான் பண்ணி பண்ல. அந்தந்த வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்துகிறேன். அதை சரியா செய்யணும்னு முயற்சி எடுப்பேன்.

* கேள்வி : மொகிதீன், திருநெல்வேலி.
த்ரிஷா, காதல் பற்றி உங்கள் கருத்து...?

த்ரிஷா : எல்லாருக்கும் காதல் வரும், காதல் இல்லவே இல்லைனு யாரும் சொல்ல முடியாது. நான் காதல் திருமணம் தான் செய்வேன். அது உங்களுக்கு தெரியும். காதல் மேல் எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கேன் தெரியுமா...?

* கேள்வி : அஜ்மல் கான், துபாய்.
ப்ளீஸ் சொல்லுங்க, யார் அடுத்த சூப்பர் ஸ்டார். தல அஜீத்தா இல்ல தளபதி விஜய்யா...?

த்ரிஷா :
அய்யோ, அஜ்மல் என்னை ரசிகர்களிடம் மாட்டி விடப் பார்க்கிறீங்களே, யாரா இருக்கும், யார் வரணும்னு, உங்களை மாதிரி ரசிகர்கள் தான் முடிவு பண்ணனும்.

* கேள்வி : விருமாண்டி, மதுரை.
நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு சிறிய தொகையை விவசாயிகளுக்கு கொடுக்கும் எண்ணம் உண்டா...?

த்ரிஷா : நான் அதை செய்தேன், இதை செய்தேனு சுய விளம்பரம் பண்றதில்லை. இதுவரை என்னால் முடிந்த உதவிகளை செய்துட்டு தான் இருக்கேன். விவசாயிகளுக்குனு இல்லை. மற்றவர்களுக்கு ‌என்னால் முடிந்ததை செய்கிறேன்.

* கேள்வி :  அருண்குமார், சென்ட் ஆப்ரிக்கா ரிபப்ளிக்.
வணக்கம் த்ரிஷா, கிசுகிசு எழுதுபவர்களுக்கு தாங்கள் கூற நினைக்கும் பதில் என்ன? எவ்வாறு அதை எடுத்து கெள்வீர்கள்?

த்ரிஷா : முதலில் வாய்விட்டு சிரிச்சிட்டு, சீரியஸா இல்லாம லைட்டா எடுத்துப்பேன். உங்க ஜாப், நீங்க எழுதுறீங்கனு படிச்சிட்டு, சிரிச்சிப்பேன், பெரிய அளவு எல்லாம் பாதிப்பு ஆக மாட்டேன்.

* கேள்வி : மஞ்சுளா, கோவை. விண்ணைத்தாண்டி வருவாயா பட அனுபவம்?

த்ரிஷா :
த்ரிஷாவால நடிக்க முடியும்னு நிரூபித்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. என்னை அடுத்த அந்தஸ்துக்கு எடுத்து போனபடம். நான் படத்தில் அணிந்த டிரஸ், ஹேர் ஸ்டைல் எல்லாமே பேசப்பட்டது. ஜெஸி என்ற கேரக்டராகவே, என்னை மாற்றியது கவுதம் தான். அந்தப்பட வெற்றி எனக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்தது.

* கேள்வி: சதீஷ்குமார், மதுரை. இப்பொழுது உள்ள காதலில் உண்மை இல்லை என்பதை பற்றி என்ன சொல்றீங்க?

த்ரிஷா : அப்படி நான் சொல்லவே மாட்டேன். உண்மை பொய் நம்ம கையில் தான் இருக்கு. நாம எப்படி நடந்துகிறோம் என்பதில் தான் இருக்கு. 2பேர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவங்கவங்க நம்பிக்கையை பொருத்தது.

* கேள்வி : மோகன்ராஜ், திண்டுக்கல். நீங்க ஷங்கர் படத்துல, நடிக்க ஆசை இருக்கா...?

த்ரிஷா : ஷங்கர் படத்தில் நடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. கண்டிப்பா எனக்கும் இருக்கு. எனக்கு ‌பொருத்தமான கதை, என்னை தேடி வரும்போது கண்டிப்பா நடிப்பேன் மோகன்.

* கேள்வி : குமரேசன், ஹாசிமின் சிட்டி. உங்களின் ‌எதிர்கால லட்சியம் என்ன? கஷ்டப்பட்டு நடித்த கதாபாத்திரம், தேசிய விருது எண்ணம், பாலியல் தொல்லைப்பற்றி...?

த்ரிஷா :
(இத்தனை கேள்விக்கும் நான் எப்படி பதில் சொல்வது) எனக்கு எதிர்கால லட்சியம்னா, வாயில்லா ஜீவன்களுக்காக நல்ல அமைப்பை தொடங்குவேன். பாதுகாக்கணும், காப்பாத்தணும். அப்புறம் கஷ்டப்பட்டு நடித்த கதாபாத்திரம், நான் முதன்முதலில் நடித்த தெலுங்கு படம் வர்ஷம். முதல் படமே ரொம்ப சவாலா இருந்தது.

* கேள்வி : அனிதா, சென்னை.
ஹாய் த்ரிஷா உங்க பர்த்டே எப்போன்னு தெரியல இருந்தாலும் உங்களுக்கு விஷ் பண்றேன். விஷ் யு ஹாப்பி பர்த்டே. இப்போ கேள்வி கேக்குறேன். நீங்க தமிழ் மொழிய எத்தனை நாள்ல கத்துகிட்டிங்க. தமிழ் மொழிய கத்துக்குறது ஈசியா இருந்துச்சா இல்ல ரொம்ப கஷ்டபட்டிங்களா. அப்புறம் ஒரு முக்கியமான கேள்வி உங்களோட ஒவ்வொரு பர்த்டேக்கும் நீங்க கேன்சர் பசங்களோடவே ஒருநாள் முழுக்க இருந்து, அவங்களுக்கு சாப்பாடு எல்லாம் குடுத்து அவங்களோட ரொம்ப சந்தோஷமா இருந்துட்டு வற்ரீங்க. அது ரொம்ப நல்ல விஷயம். அதுக்கு பதிலா ஒரு கேன்சர் பசங்கள தத்து எடுத்து வளர்க்கலாம் இல்லையா. இந்த கேள்விக்கு நீங்க கண்டிப்பா எனக்கு பதில் சொல்லணும். இப்படி ஒரு சான்ஸ் கொடுத்ததுக்கு தேங்க்ஸ் த்ரிஷா. உங்க பதிலை எதிர்பாக்குறேன்.

த்ரிஷா : மே 4 என்னுடைய பிறந்தநாள். நான் தமிழ் கத்துகிட்டது ரொம்ப கொடுமையான விஷயம். நான் படிச்சது எல்லாமே சென்னையில் ஒரு கான்வேண்ட்டல தான். ஒரு வேர்டு கூட தமிழ் பேச முடியாது. வீட்டுக்கு வந்தா கூட ஆங்கிலத்தில் தான் பேசுவாங்க. தமிழ்ல சரளமாக பேசி பழகவில்லை. சினிமா இண்டஸ்ட்ரீக்கு வந்தபிறகு கொஞ்சம் பேச ஆரம்பித்தேன். கமல் சார் படத்தில்(மன்மதன் அம்பு) நடித்தபோது, தமிழ் பொண்ணு இப்படியெல்லாம் இருக்க கூடாது, கண்டிப்பா தமிழ் பேசணும்னு அறிவுரை சொன்னாரு, படத்துல ஒரு கவிதையை பாடலா கூட வச்சிருந்தாரு. நீதான் அதை பாடணும்னு சொன்னாரு. சிங்கப்பூர்ல நடந்த ஆடியோ ரிலீஸ் பண்ணும்போது இந்த கவிதையை கமல் சாரோடு சேர்ந்து படிச்சேன். இப்ப ஓரளவு நல்ல தமிழ் பேச ஆரம்பிச்சுட்டேன். இப்போது நான் இவ்வளவு தூரம் தமிழ்ல பேசுகிறேன் என்றால், அதற்கு கமல் சார் தான் முக்கிய காரணம்.

கேன்சர் குழந்தைகளை தத்தெடுப்பது ரொம்ப நல்ல விஷயம் தான், ஆனால் அவங்களோட தேவையை பூர்த்தி செய்ய அவங்கள பக்கத்துல வைச்சு பார்த்துக்கணும், ஆனா, நான் ஓடிக்கொண்டே இருக்கேன், எப்படி நான் பக்கத்தில் இருந்து பார்க்க முடியும். இருந்தும் சென்னையில் இருக்கும் உதவும் கரங்கள் மூலம் இரண்டு குழந்தைகளை எனது சொந்த செலவில் வளர்க்கிறேன். ஆனால் இதையெல்லாம் நான் விளம்பரம் செய்வது கிடையாது.


* கேள்வி : தினேஷ், மைசூர்.
10 வருடமாக நான் உங்கள் ரசிகன் நான் உங்களை நேரில் பார்க்க அசைப்படுகிறேன் முடியுமா ?

த்ரிஷா : நிச்சயமா, நான் யாரையும் தவிர்க்கமாட்டேன். ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை. நான் பெங்களூருக்கோ அல்லது மைசூரூக்கோ வரும் போது இ-மெயில் மூலமா உங்களை தொடர்பு கொள்கிறேன். அப்போது நீங்கள் என்னை பார்க்கலாம்.


* கேள்வி: குமார், துபாய்.
புதுமுக நடிகைகளுக்கு சினிமா வாழ்க்கை பற்றி தங்கள் கருத்து?

த்ரிஷா: அட்வைஸ் பண்ற அளவு இன்னும் நான் வளரலைனு நினைக்கிறேன், ஆனால் சில அனுபவத்தை இங்கே சொல்லியாகணும், நான் சினிமாவுக்கு வந்த 2 வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டேன், நடிக்கிறது ரொம்ப ஈஸியான வேலை இல்லை. நேரத்துக்கு சாப்பாடு இல்ல, தூக்கம் இல்ல, குடும்பத்தோடு இருக்க முடியாது, எந்த விசேஷ நாளையும் கொண்டாட முடியாது, ஒரு ஓப்பன் மைன்டோட இந்த துறைக்கு வரணும், இதமாதிரி நம்மள மாற்றிகிட்டு, ‌ஜெயிக்கிறவரை ஒரு போராட்டம் இருக்கு பாருங்க, அப்பா சொல்லவே முடியாது. நான் தமிழ்ல நடிக்க முடியாம மிஸ் ஆன சில படங்கள் இருக்கு, ஏன்னா தேதி பிராப்ளம், ஹிந்தில ஒரு படம் பண்ணிட்டு இருந்தேன், அப்ப சில படங்களை மிஸ் பண்ணேன், தசாவதாரம் கமல் சார் 90 நாட்கள் கேட்டாரு, அப்ப முடியல, வாரணமாயிரம் சமீரா ரெட்டி ரோல் கேட்டாங்க, அது முடியல ஆடுகளம் பட வாய்ப்பு - அந்த நாளில் என்னால் ஷூட் வர முடியல, இப்ப இதெல்லாம் கொஞ்சம் கஷ்டமா இருக்கு, ஆனா, அடுத்தடுத்த படங்களில் நடிச்சிட்டேன்.

* கேள்வி: சதீஷ், சேலம். காதலர் தினம் பற்றி உங்கள் கருத்து?

த்ரிஷா: என்னை கேட்டால் அதுக்கு தனியா ஒரு நாள் தேவை இல்லை, அன்னையர் தினம், தந்தையர் தினம், இதெல்லாமே நம்ம அன்பை வெளிப்படுத்தும் நாட்கள் தானே?

* கேள்வி: ஏந்தலன், பெங்களூர்.
உங்கள் அப்பா இறந்த செய்தியை கேட்டு உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

த்ரிஷா: எப்பவுமே ஷூட்டிங் ஷூட்டிங்னு ஓடிட்டு இருந்த நான், அன்றைய தினம் வீட்டில் அம்மாவோட இருந்தேன், அப்பா, ஹைதராபாத் ஹோட்டல ஜி.எம். ஆகி 4 மாதம் தான் ஆனது. நான் சென்னையில் வீட்டில் இருந்தபோது வந்த செய்தி, என்னை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, பெரும் வருத்தம். என்னை ஹைதராபாத் ஹோட்டலுக்கு டின்னர் வர சொன்னார், போக முடியல, இப்பவும் என்னை பாதிக்குது. ஐ லவ் மை டாடி.

* கேள்வி: கே.பரந்தாமன், டில்லி.
ரஜினி சார் பற்றி தங்கள் கருத்து?

த்ரிஷா:
மனம் விட்டு பேசக் கூடியவர் ரஜினி சார், பெரிய ஸ்டார் என்ற எந்த மனப்போக்கும் கிடையாது. என்னுடைய பெரும்பாலான விருதுகள், அவர் கையால வாங்கிருக்கேன். கில்லி 100வது நாள் விழா ‌விருதை கூட அவர் கையாலதான் வாங்கினேன்.

* கேள்வி: விஜய், சென்னை. தமிழ் மக்கள் உங்களை கடந்த 10 வருடங்களாக கனவு கன்னியாக தங்கள் மனதில் இடம் அளித்து இருக்கிறார்கள், நீங்கள் செய்யப் போகும் கைம்மாறு என்ன?

த்ரிஷா: ரொம்ப சந்தோஷமா இருக்கு, அதெற்கெல்லாம் நன்றின்னு ஒரே வார்த்தையில சொல்ல முடியாது. அன்பைதவிர வேறு என்ன கைமாறு செய்ய முடியும் சொல்லுங்க?

* கேள்வி: செந்தில் பில்லூர், துபாய்.
என்னுடைய கேள்வி, ஒரு நடிகை, நடிகரை தான் கல்யாணம் செய்யணுமா? பணக்காரன் பணக்காரனோடு தான் சம்பந்தம் செய்யணுமா?

த்ரிஷா: எனக்கு இவரை கல்யாணம் பண்ணனும்னு மனசில தோணினா, ஏழை, பணக்காரன் பார்க்க மாட்டேன். பணம் எந்த அளவு முக்கியமோ, அதே அளவு மனமும் முக்கியம். அதைவிட சந்தர்ப்பம், சூழ்நிலை ரொம்ப முக்கியம். என்னை பொறுத்தவரை காதல் என்பது, ஏழை பணக்காரன் பார்த்து வர்றதில்லை, வரவும் கூடாது.

 * கேள்வி: கிரிதர், பெங்களூர்.
நீங்கள் கல்யாணம் பண்ண போகும் கணவர் எப்படி பட்டவராக இருக்க வேண்டும்?

த்ரிஷா: நான் எப்படி மனசுக்குள் நினைக்கிறேனோ, அப்படி இருக்கணும். என்னை கொண்டாடுபவரா இல்லனாலும், கொஞ்சமாவது புரிஞ்சுக்கிறவரா இருக்கணும், என்னை மாற்ற முயற்சி செய்யக் கூடாது. ஐ லவ் யூ, ஜஸ் த வே யூ ஆர்-னு ஒரு பாட்டு இருக்கு, அந்த மாதிரி இருக்கணும்.

* கேள்வி: சத்யா, காரைக்குடி.
உங்கள் திறமைக்கு சவால் விடும் கதாபாத்திரத்தில் நடித்த, இல்லை அப்படி ஒரு ஆசை உங்களுக்கு இருக்கா?

த்ரிஷா: சத்யா, இனி வரும் என் படங்களை பாருங்க, கண்டிபபா சவாலான ரோலா இருக்கும். இனி வரும் படங்கள்ல த்ரிஷாவை விட அந்த ரோல் பேசும்.

* கேள்வி: கே.ராஜேந்திரன், சோழவந்தான். உங்களுக்கு பிடித்த காமெடியன்?

த்ரிஷா: இப்ப சந்தானம்.

* கேள்வி: நவீன்குமார், மைசூர். ஹாலிவுட் படங்களில், நடிக்கும் எண்ணம் உண்டா?

த்ரிஷா: அந்த நாளுக்காக நானும் காத்திருக்கிறேன்.

* கேள்வி: பொன்ராஜ், சிவகாசி. உங்கள் அழகின் ரகசியம் என்ன? உங்களுக்கு எத்தனை மொழி தெரியும்?

த்ரிஷா: எந்த சாப்பாடு சாப்பிட்டாலும் அளவாக சாப்பிடுவேன். சாப்பாட்டு விஷயத்தில் கவனமாக இருப்பேன். நிறைய குடிநீர் தினமும் எடுத்துப்பேன். எப்பவும் உடல் எடை கூடாமல் பார்த்துப்பேன். தமிழ், இங்கிலீஷ், ப்ரெஞ்ச், ஹிந்தி நல்லா பேச தெரியும்.

* கேள்வி: அபுதாகிர், மதுரை. இந்த புகழ் தொடர அடுத்து என்ன பண்ண போறீங்க?

த்ரிஷா: எப்பவும் போல என் வேலையை பார்ப்பேன்.

* கேள்வி: ஸ்ரீதரன், திருவள்ளூர்.
சரித்திர கதைகளில் நடிப்பீங்களா? உண்மையில் அது உங்களுக்கு நல்லா இருக்கும்?

த்ரிஷா: நிச்சயமா நடிப்பேன். மர்மயோகி படம் நல்ல கதை, கமல் சார் கூட போட்டோ ஷூட் எல்லாம் எடுத்தாங்க, இன்னும் தொடங்கல, கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு. நல்ல ஸ்கிரிப்ட் வரும்போது அதை நான் மிஸ் பண்ண மாட்டேன்.

* கேள்வி: துரை, தென்காசி. தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகள் முன்னணி நடிகையா இருக்கிறது சாத்தியமில்லாதது. நீங்கள் மட்டும் தொடர்ந்து நம்பர் 1 நடிகையா இருக்கீங்களே அதனுடைய ரகசியம் என்ன?

த்ரிஷா: துரை, உங்களைப்போல் ரசிகர்கள் சப்போர்ட், என்னை படங்களில் நடிக்க தேர்ந்தெடுத்த இயக்குநர்கள், நடிகர்கள், எல்லாருமே தான் காரணம். இந்த நேரத்தில் என்ன‌ை இவ்வளவு தூரம் வர வைத்த கடவுளுக்கும் நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.

மீண்டும் ஒரு நல்ல நாளில் உங்களை சந்திக்கிறேன். நன்றி

Tags »
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (7)

udhayakumar - tamil nadu chennai,இந்தியா
16-பிப்-2013 17:04 Report Abuse
udhayakumar thrரிச நானும் உங்கள் போச அசைய இருகு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Navaneetha krishnan - Srivilliputtur,இந்தியா
14-பிப்-2013 21:13 Report Abuse
Navaneetha krishnan உண்மையிலேயே உங்க பேச்சு மற்றும் பதில்கள் ரொம்ப சூப்பரா இருந்தது த்ரிஷா ... இப்போ உங்கள மேலும் ரொம்ப அதிகம் பிடிக்கிறது. இந்த கேள்வி அனுப்புற செய்தி எனக்கு தெரியாது .. நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்.
Rate this:
2 members
0 members
0 members
Share this comment
Chennaiite - Chennai,இந்தியா
14-பிப்-2013 10:01 Report Abuse
Chennaiite அப்ப நீங்க எந்த மிடில் கிளாஸ் பையன கல்யாணம் பண்ண போறீங்க? இல்ல எதாவது ஆபீஸ்'ல சேல்ஸ் எசேகிடிவே கல்யாணம் பண்ண போறீங்களா? சும்மா போம்மா பெரிய இவங்கலட்டும்.
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-பிப்-2013 08:28 Report Abuse
kumaresan.m வணக்கம் திரிஷா என்னுடைய கேள்விக்கு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி மற்றும் காதலர் தின வாழ்த்துக்கள்
Rate this:
3 members
0 members
0 members
Share this comment
MRSaminathan - Thirumangalam - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-2013 00:24 Report Abuse
MRSaminathan - Thirumangalam தயவு செய்து இந்த மாதிரி பேட்டி எல்லாம் போட்டு எங்கள் நேரத்தை வீணடிக்கவேண்டாம்.
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Advertisement

தொடர்புடைய படங்கள்

 

தொடர்புடைய வீடியோ

தொடர்புடைய வால் பேப்பர்கள்

 
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2014 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in