விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் |
மதுரையின் "ஹார்ட் ஆப் த சிட்டியான டவுன்ஹால்ரோடு அருகே "மண்டையன் ஆசாரி தெருவை சேர்ந்தவர் மண்டையன் ஆசாரி. பொதுச்சேவையில் பாங்குடன் ஈடுபட்ட மண்டையன் ஆசாரியை கவுரப்படுத்துவதற்காக, இவரது பெயரை, அவர் வசித்த வந்த தெருவிற்கு வைத்து அழகு பார்த்தது பிரிட்டிஷ் அரசு. இவரது மகளுக்கு ஆறு மகன்கள், இரண்டு மகள்கள். இவர்களில், ராமன், லட்சுமணன் இரட்டையர்.
""மாயியண்ணன் வந்திருக்காக... தம்பி மொக்கச்சாமி வந்திருக்காக... மற்றும் நம் உறவினர்களெல்லாம் வந்திருக்காக... வாம்மா... மின்னல்..., என காமெடி நடிகர் வடிவேல் நடித்த மாயி சினிமாவில், காமெடி நடிகர் லட்சுமணனின் இந்த வசனத்தை உச்சரித்து ரசிக்காதவர் இல்லை. சினிமா வாய்ப்பு தேடி சென்னையில் தஞ்சமடைந்த லட்சுமணனுக்கு மிகுந்த சிரமத்தின் பேரிலேயே வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், அவரது அண்ணன் ராமனுக்கு, அவர் இருக்கும் இடம் தேடி, சினிமா வாய்ப்புகள் வரத்துவங்கியுள்ளன. தற்போது சினிமாவில் காமெடி வேடங்களில் ராமன் படுபிசி. மதுரை மண்ணுக்கு சொந்தக்காரரான ராமன், மிகவும் யதார்த்தவாதி. பெருமாள் தெப்பக்குளத்தில் "வெள்ளை ரோஜா என்ற பெயரில் "மியூசிக் ட்ரூப் நடத்தி வரும் ராமனை தேடிப்பிடித்தோம். அவரிடம் உரையாடியதில் இருந்து...
* பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்து சினிமா துறைக்கு வந்தது எப்படி?
தாத்தன் மண்டையன் ஆசாரி, வெறும் ரெண்டாயிரம் ரூபாய்க்கு மண்டையன் ஆசாரி தெருவை வித்துப்புட்டு போயிட்டார். நாங்க இப்போ ரோட்டுக்கு வந்திருக்கோம். ஒரு சமயம் லட்சுமணனை பார்க்க சென்னை சென்றேன். லட்சுமணனுக்கு உடல் நிலை சரியில்லை. என்னை டூப்பாக நடிக்க சொன்னான். வடிவேல் நடித்த படம் அது. சம்மதித்து நடித்தேன். அதுமுதல் சினிமாவில் நானும் காமெடி நடிகனாகி விட்டேன்.
* நீங்கள் நடித்த முதல் சினிமா?
நாகரீக கோமாளி. அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது. மாசிவீதி, 18ம் குடி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளேன். சென்னையில் லட்சுமணனையும், தென்மாவட்டங்களில் என்னையும் சினிமாவில் பயன்படுத்துகின்றனர். டவுன்ஹால் ரோட்டில் கண்ணாடிக்கடை வைத்திருப்பவர் ஜின்னா பாய். அவர், கடைக்கு வருவோரை ""வா...ங்க... உக்காரு...ங்க... என்பார். அவர், "ங்க என்பதற்கு அழுத்தம் கொடுப்பார். அவர், பேசியதைத்தான் லட்சுமணன், மாயி படத்தில் ""மாயியண்ணன் வந்திருக்காக... எனப் பேசி பிரபலமானார்.
* நடிப்பில் உங்களுக்கு தனி ஸ்டைல் உள்ளதா?
தனி ஸ்டைல் வேண்டாம். லட்சுமணன் போல் நடி என்கின்றனர். இதனால், வடிவேல், சந்தானம் போல் தனி இமேஜை கிரியேட் பண்ண முடியவில்லை.
* உங்களுக்கு பிடித்த காமெடி நடிகர்?
அப்போ நாகேஷ். இப்போ வடிவேலு.
* மறக்க முடியாத சம்பவம்?
எனது இசை நிகழ்ச்சியை பார்த்து விட்டு, தொழிலதிபர்கள் சிவகாசி தீனதயாளன், ரஜினியம்மாள் ஆகியோர் எனக்கு கார் அன்பளிப்பாக வழங்கியது.
* தம்பிக்கு அண்ணன் போட்டியா?
சினிமா உலகில் லட்சுமணனும், இசையுலகில் நானும் கலக்குகிறோம். கலையுலகில் இரட்டையர் என்று கூட சொல்லலாம். சில நேரங்களில் எனக்கும் சினிமா வாய்ப்பு கிடைக்கிறது. முன்பு நடிகர் கமல்ஹாசன் போல் இருப்பேன். இப்போது இப்படி (குண்டாக) ஆகி விட்டேன். இப்படி கூறியவரிடம், இப்படி ஆனதால் தான் உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. கமல் போல் இன்னமும் இளமையுடன் இருந்திருந்தால் சினிமா வாய்ப்பு கிடைத்திருக்காது அல்லவா? என அவரை நாம் கலாய்க்க... ""நீங்க... சொல்றதும் சரிதான், எனக்கூறி விடைபெற்றார்.