Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஹிட் ராசி... ரசிகர்கள் ஆசி...! மதுரையை நோக்கி கோடம்பாக்கம்

27 ஜன, 2013 - 12:50 IST
எழுத்தின் அளவு:

ஹெலிகாப்டர் சகிதமாய் சண்டையிடும் அளவிற்கு, தமிழ் சினிமா வளர்ச்சி கண்டாலும், மதுரையின் மண் மனம் சார்ந்த கதைகள், என்றுமே சோடை போனதில்லை. தமிழகத்தில் மட்டுமின்றி, உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளிலும், மதுரையை மையமாக வைத்த கதைகளுக்கு, பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. கதைகளுக்கும், படப்பிடிப்புகளுக்கும் மட்டுமே மதுரையை பயன்படுத்தி வந்த கோடம்பாக்கம், தற்போது சினிமாவின் முக்கிய நிகழ்வுகளை, மதுரையில் அரங்கேற்றி வருகிறது. இத்தனைக்கும், சம்மந்தப்பட்ட படங்கள் அனைத்துமே, மெகா ஸ்டார்களை உள்ளடக்கியது, என்பது தான், "ஹைலைட்.  "பிரமாண்டமான இசை வெளியீட்டின் மூலம், வெளிவரவிருக்கும் படத்தின் எதிர்பார்பை அதிகரிக்க முடியும், என்ற எண்ணம், தயாரிப்பாளருக்கு இருப்பதால் தான்; லண்டன், மலேசியா, சென்னையின் ஸ்டார் ஓட்டல்களில் "ஆடியோ வெளியீடு நடக்கிறது.  தற்போதைய அந்த நடைமுறை, மதுரை பக்கம் திரும்பி இருக்கிறது. "சினிமாவை ரசிப்பதிலும், தீர்மானிப்பதிலும், மதுரைக்காரன் தான் தேர்ச்சி பெற்றவன், என்பது, "பாக்ஸ் ஆபீஸ் விதிகளில் எழுதப்படாத சட்டம். அதனால் தான், மதுரையில் சினிமாவை பிரபலப்படுத்த தயாராகிவிட்டது, கோடம்பாக்கம்.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், "வெப்சைட் மூலம் தான் பெரும்பாலானோர்,  பாடல்களை "டவுன் லோடு செய்கின்றனர். மதுரையில் தான், அன்றும், இன்றும், பணம் கொடுத்து ஆடியோ "சிடிகள் வாங்குவோர் அதிகம். மதுரைக்காரர்களுக்கு தொழில்நுட்பம் தெரியாமல் இல்லை; விலை கொடுத்து வாங்கும் "சிடியில் "குவாலிட்டி இருக்கும் என்பது, நம்மவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. கோடம்பாக்கம், மதுரைக்கு திசை மாற, இதுவும் ஒரு காரணம்.

மதுரையை மையமாக கொண்ட படம் என்பதால், விருமாண்டியின் ஆடியோ வெளியீடு இங்கு நடந்தது. அதன் பின், விஜய் நடித்த வேலாயுதம், சட்டம் ஒரு இருட்டறை, கமல் நடித்த விஸ்வரூபம், பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடியும் கொடி வீரனும், என, ரசிகர்களின் உச்ச எதிர்பார்ப்பு கொண்ட படங்களின் ஆடியோ வெளியீடுகள், மதுரையில் நடத்தப்பட்டுள்ளது.

இதில் பிரம்மாண்டம் என்னவென்றால், சென்னையில் நடக்கும் விழாவில் பங்கேற்பதை போலவே, மதுரையிலும் சினிமா நட்சத்திரங்களின் படையெடுப்பு நடக்கிறது. விழாவை காண சென்னையை விட, இருமடங்கு கூடும் ரசிகர் கூட்டம், கோடம்பாக்கத்தை திகைக்க வைத்துள்ளது. "மதுரைக்கு வந்தால், "ஹிட் ராசியும், ரசிகர்களின்  ஏகோபித்த "ஆசியும் இருப்பதால், கோடம்பாக்கம், மதுரை நோக்கி வருவதில் ஆச்சரியமில்லை.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

SONAI MUTHU - Madurai,இந்தியா
11 ஏப், 2013 - 17:45 Report Abuse
SONAI MUTHU மதுரை தான் என்றும் டாப் by மதுரைக்காரன்
Rate this:
loki - Chennai,இந்தியா
22 பிப், 2013 - 09:10 Report Abuse
loki மதுரை பெரிய பட்டி காடு
Rate this:
madasamy - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06 மே, 2013 - 13:48Report Abuse
madasamyடேய் சென்னைய விட மதுரை நல்லாதாண்டா இருக்கு...
Rate this:
28 ஜன, 2013 - 08:40 Report Abuse
பால்பாண்டியன மாமதுரை போற்றுவோம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in