சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
கன்னட நடிகர் துனியா விஜய். "துனியா" என்ற மிகப்பெரிய ஹிட் படத்தில் நடித்ததால் துனியா விஜய் என்று அழைக்கப்படுகிறார். 2007-ம் ஆண்டு கன்னட சினிமாவில் அறிமுகமாகி இதுவரை 25 படங்கள் வரை நடித்துள்ளார். நம்ம ஊர் ஸ்ரீகாந்த், பிரசன்னா மாதிரி இரண்டாவது வரிசை நடிகர். இவருக்கு சினிமாவுக்கு வருதற்கு முன்பே 1998ம் ஆண்டே திருமணம் ஆகிவிட்டது. நகர்த்தனா என்பவரை மணந்திருந்தார். தம்பதிகளுக்கு முன்று குழந்தைகள் உள்ளனர். 2008ம் ஆண்டு தமிழ் படத்தில் அறிமுகமான சுபா புன்ஞாவுடன் "சிலம் பாலா" என்ற படத்தில் இணைந்து நடித்தார். அதிலிருந்து இருவருக்கும் காதல் என்றும் லிவிங் டு கெதர் முறையில் தாலிகட்டாமல் வாழ்கிறார்கள் என்பதும் கன்னட சினிமா அறிந்த ரகசியம்.
இந்த இடத்தில் சுபா புன்ஞசாவை பற்றி ஒரு சின்ன பிளாஷ்பேக். சுபாபுன்ஞா தமிழில் "மச்சி" படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு "திருடிய இதயத்தை" என்ப படத்தில் நடித்தார். இந்தப் படத்தை பெங்களூரைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் தயாரித்து நடித்தார். அவருடன் இவருக்கு காதல் என்று அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகும் சுபா "ஒரு பொண்ணு ஒரு பையன்", "சண்முகா" படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மைக்மோகன் நடித்த படுகவர்ச்சிப் படமான "சுட்ட பழம்" என்ற படத்தில் கடைசியாக நடித்தார். அதன் பிறகு சொந்த ஊரான பெங்களூருக்கே திரும்பிச் சென்று செட்டிலாகிவிட்டார். அதன் பிறகு அவர் தமிழ்நாட்டு பக்கம் வரவில்லை. பெங்களூர் சென்றவர் கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்து துனியா விஜய்யுடன் ஒட்டிக் கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துனியா விஜய் தன் மனைவியை தள்ளி வைத்து விட்டார். "என் பெற்றோர்களை அவர் மதிப்பதில்லை. அவர்களை துன்புறுத்துகிறாள்" என்று மனைவி மீது குற்றம் சாட்டினார். ஆனால் இதற்கு பதிலளித்த மனைவி நகர்த்தனா "அவர்களை என் பெற்றோரை போல கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவர்தான் ஒரு நடிகையுடன் இணைந்து கொண்டு என்னை வெறுக்கிறார். என் மூன்று குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு வாழ்கிறேன்" என்றார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் பெங்களூர் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். இது கன்னட சினிமா உலகில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னட பெண்கள் அமைப்பு நகர்த்தனாவுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறது. ரசிகர்களின் கோபம் சுபா புன்ஞா பக்கம் திரும்பி இருக்கிறது.
ஆனால் சுபா புன்ஞ்சாவோ "விஜய் எனக்கு நண்பர் மட்டும்தான். மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் அவரை சந்தித்தே பல மாதங்கள் ஆகிவிட்டது" என்று ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறது கன்னட திரை உலகம்.