Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

திரைப்படத்துறை திருநங்கைகளை அங்கீகரிக்கவில்லை: ரோஸ் சிறப்பு பேட்டி

Rose Special interviewதொலைக்காட்சி தொகுப்பாளினி, எழுத்தாளர், நடிகை என்ற பன்முகங்களை கொண்ட திருநங்கை ரோஸ். தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் இயக்கும் "கிரிக்கெட் ஸ்கேண்டல்" படத்தின் ஹீரோயினும் அவர்தான். அவர் தினமலர் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி:

* படம் இயக்குவது ஏன்?

திருநங்கைகளால் படம் இயக்க முடியும் என்பதை நிரூபிக்கத்தான் படம் இயக்குகிறேன்.

* கிரிக்கெட் பற்றி படம் இயக்குவது ஏன்?

இந்தியாவில் இன்று மிகப்பெரிய சூதாட்டமாகிவிட்டது கிரிக்கெட். அது விளையாட்டு என்கிற நிலை மாறி சூதாட்டமாகி விட்டது. வீரர்களை ஏலம் விடுகிறார்கள். கோடிக் கணக்கில் பெட்டிங் கட்டுகிறார்கள். விளையாட்டு விளையாட்டாகத்தான் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கிரிக்கெட்டை மையமாக வைத்து படம் இயக்குகிறேன். கிரிக்கெட் ஊழல்களை இதன் மூலம் அம்பலப்படுத்துவேன்.

* திருநங்கைகள் பிரச்னை பற்றி படம் பேசுகிறதா?

நிச்சயமாக பேசுகிறது. கிரிக்கெட் வீரரும், கிளப்பில் நடனமாடும் திருநங்கையும் காதலிக்கிறார்கள். ஹீரோ கிரிக்கெட்டில் உள்ள ஊழலைச் சொல்வார், திருநங்கை தன் பிரச்னைகளை பேசுவார். அந்த திருநங்கையாக நான் நடிக்கிறேன்.

* சினிமாவில் திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் இருக்கிறதா?

திரையில் முன்பு திருநங்கைகளை கேலி செய்து வந்தார்கள், அவர்களை செக்சின் சின்னமாக காட்டி வந்தார்கள். அந்த நிலை கொஞ்சம் மாறியிருக்கிறது. ஆனால் திரைக்கு வெளியே இன்னும் கிண்டலும், கேலியுமாகத்தான் பார்க்கிறார்கள். நான் சில காலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அப்போது அந்த அவமானங்களை நான் சந்தித்தேன்.

* ஆங்கிலத்தில் படம்  இயக்குவது ஏன்?

கிரிக்கெட் பிரச்னை இந்தியா முழுமைக்கும் தெரிய வேண்டியது அதனால் ஆங்கிலத்தில் இயக்குகிறேன். தமிழ், தெலுங்கில் டப் செய்து வெளியிடுவேன்.

* சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா?

திருநங்கையாக நடிக்கத்தான் கூப்பிடுவார்கள். அப்படி கூப்பிட்டால் நடிக்க மாட்டேன். பொதுவான கேரக்டர்களில் நடிக்க கூப்பிட்டால் நடிப்பேன். குரலுக்கு மட்டும் டப்பிங் கொடுத்தால் என்னால் ஹீரோயினாககூட நடிக்க முடியும்.

* அடுத்த திட்டம்?


பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை விட ஆயிரம் மடங்கு திருநங்கைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதை மையமாக வைத்து ஒரு படம் இயக்கும் திட்டம் வைத்திருக்கிறேன். இந்தப் படம் முடிந்ததும் அதை இயக்குவேன்.

Tags »
Rose, Special interview, ரோஸ், சிறப்பு பேட்டி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

Rakks Poovizhi - Gingee,இந்தியா
2013-03-07 19:16:27 Report Abuse
Rakks Poovizhi திரு நங்கைகளுக்கு ஒரு எடுத்துக்கட்டா இருக்கீங்க....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rakks Poovizhi - Gingee,இந்தியா
2013-03-07 19:13:09 Report Abuse
Rakks Poovizhi வாழ்த்துக்கள் ரோஸ்,,,,,,,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
geethu - SouthAfrica  ( Posted via: Dinamalar Android App )
2013-01-08 19:51:07 Report Abuse
geethu Congrats Rose
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
durai - bangalore,இந்தியா
2013-01-08 14:11:24 Report Abuse
 durai வாழ்த்துக்கள் ரோஸ், வெல்க உங்களுடைய கலை பயணம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தினேஷ் - dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
2013-01-08 13:35:40 Report Abuse
 தினேஷ் ரோஸ்.....................? இந்த படம் கண்டிப்பாக கிட் படம் தான்.இந்த முயற்சிக்கு நன்றி .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in