Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சினிமாவில் கவர்ச்சி மீறவும் கூடாது, குறையவும் கூடாது! இது இனியா பாலிஸி!!

06 ஜன, 2013 - 13:34 IST
எழுத்தின் அளவு:

முதல் படத்திலேயே "வாகை சூடிய நாயகி; "மாடலிங் வருகை என்றாலும், அழுக்கு சுமந்த அவரது பாத்திரம், முழு"மதியாய் ரசிகர் மனதில் பதிந்தது. தமிழ் பாரம்பரியம் பளிச்சிடும் முகம் என்றாலும்,  இறக்குமதியானது கேரளாவிலிருந்து. இவ்வளவு கூறிய பின், "சஸ்பென்ஸ் எதற்கு? "சரசர சாரக் காத்து வீசும் போதும்... சாரை பார்த்து பேசும் போதும்... வரிகளுக்கு, வாய்க்கால், வயல்களில் புரண்டு, விழுந்தவர்; சாரி, நடித்தவர், நடிகை இனியா.

சுருதி சாவந்த் என்ற பெயரை, இனியாவாக மாற்றியது தமிழ் சினிமா. 2005ல் "மிஸ் திருவனந்தபுரம், "டிவி சீரியல்கள், குறும்படங்களில் கலக்கிய இனியா, 2010ல் தமிழில் தலை காட்டினார். "வாகை சூடவா, மவுனகுரு, அம்மாவின் கைபேசி, என, யதார்த்த பாத்திரங்களில் அடைக்கப்பட்டார். அதன் பிறகே, அவர் பிறந்த கேரளாவில், இனியாவிற்கான கதவு திறந்தது. தமிழ், மலையாளத்தில் "பிஸி ஆன இனியா, மாசாணி படப்பிடிப்பிற்கு காரைக்குடி வந்த போது, சிறிது நேரம் மடக்கினோம்; இதோ தன்  இனிமையைப் பகிர்கிறார் இனியா:

* முதல் படத்தில் "டீ மாஸ்டர்; முன் அனுபவம் உண்டோ?


அய்யோ... கிச்சன் பக்கம் யார் போனது? படத்திற்காக மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்டவர், கற்றுத்தந்தார். 50 படத்தில் நடித்த அனுபவத்தை, அந்த கதாபாத்திரம் தந்தது. அப்படம் தேசிய விருது வாங்கியதும், அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

*  "தமிழ், மலையாளம் இருபடங்களை வேறுபடுத்தும் விஷயம்?


பிரமாண்டம். தமிழ் படங்களில் எதிர்பார்ப்பை கடந்த பிரமாண்டம் உள்ளது.

*  "மாடர்ன் பொண்ணு, அழுக்காய் நடித்துவிட்டீர்களே?

அழகை விட, கதை தான் முக்கியம். அந்த கதாபாத்திரம் தான், என்னை நிலைக்க வைத்தது.

*  "யதார்த்த நாயகிகள் நீடித்ததில்லை தெரியுமா?

அனைத்து கதாபாத்திரத்திலும், நடிப்பேன். சேலையில் வந்த என்னை, இனிவரும் படங்களில் பாருங்கள்!

*  கேரள நடிகைகளுக்கு தமிழ் சினிமா தான் அறிமுக களமா?

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கேரள நடிகைகளின் "தமிழ் படையெடுப்பு தொடர்கிறது. தமிழ் வாய்ப்புக்கு பிறகே, கேரளக் கதவு திறக்கிறது.

*  "கிளாமர் உங்கள் நிலைப்பாடு என்ன?

சினிமா,ஒரு பொழுது போக்கு; அதில் அனைத்தும் வேண்டும். கவர்ச்சி மீறவும் கூடாது, குறையவும் கூடாது.

*  "ஹீரோ-டைரக்டர், இனியா யாருக்கு கதாநாயகி?

டைரக்டருக்குத்தான். கதையைப் பொறுத்து, அது மாறுபடலாம், என்றவர், மகிழ்ச்சியுடன், படபிடிப்பிற்குத் தயாரானார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

selvarajan - Paris,பிரான்ஸ்
06 ஜன, 2013 - 14:54 Report Abuse
 selvarajan அழகும், திறமையும் நிறைந்த நடிகை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in