Advertisement

சிறப்புச்செய்திகள்

கஹானி ரீமேக்கில் நடிக்கிறார் பசுபதி! | சித்தார்த் க்யூட்டான நடிகர்! ஹன்சிகா | சிலக் வேடத்தில் நடித்தால் கவர்ச்சி நடிகை என்று முத்திரை குத்துவதா? சனாகான் சாடல் | சிங்கம்-2 ஆடியோ விழாவில் மேலும் மூன்று சிங்கங்கள்! | அஜீத், சூர்யா படங்களுக்கு ரூட் விடும் அமலாபால்! | பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்! ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி! | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! |

சினிமா முதல் பக்கம் » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2013-ல் ஜொலிக்க போகும் 2012-அறிமுகங்கள்! புதுமுகங்கள்!!

Who will stand in 2013...?எந்த வருடமும் இல்லாத வகையில், கடந்த 2012-ல் ஏராளமான புதுமுகங்கள் தமிழ் திரையுலகில் அறிமுகமாகினர். நடிப்பு, இயக்கம், இசையமைப்பு, தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளிலும் தமிழ்த்திரையுலகில் புதுமுக வரவுகள் கடந்தாண்டு சற்றே அதிகம் என்றாலும், அதில் திரும்பி பார்க்க வைத்த சிலரை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

2012-ல் 79 கதாநாயகர்கள் அறிமுகமானார்கள். அவர்களில் உதயநிதி ஸ்டாலின் (ஒரு கல் ஒரு கண்ணாடி), விஜய் ஆண்டனி (நான்), விக்ரம் பிரபு (கும்கி) ஆகியோர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் (மெரினா,  மனம் கொத்தி பறவை), லகுபரன் (ராட்டினம்), தினேஷ் (அட்டக்கத்தி), ராஜேஷ் யாதவ் (புதுமுகங்கள் தேவை) ஆகியோர் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.

2012-ல் 78 கதாநாயகிகள் அறிமுகமானார்கள். அவர்களில் லட்சுமி மேனன் (சுந்தர பாண்டியன், கும்கி), வரலெட்சுமி (போடா போடி),  ஸ்வாதி (ராட்டினம்), நந்திதா (அட்டக்கத்தி), மனீஷா யாதவ், ஊர்மிளா (வழக்கு எண் 18/9), காயத்ரி (18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்) ஆகியோர் திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.

2012-ல் 97 இயக்குனர்கள் தங்கள் முதல் படைப்பை தமிழ் திரையுலகிற்கு தந்திருக்கிறார்கள். அவர்களில் ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் (3), பாலாஜி மோகன் (காதலில் சொதப்புவது எப்படி), கார்த்திக் சுப்ராஜ் (பீட்சா), அன்பழகன் (சாட்டை), எஸ்.ஆர்.பிரபாகர் (சுந்தர பாண்டியன்), ரஞ்சித் (அட்டகத்தி), பாலாஜி பரணிதரன் (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்), ஜீவா சங்கர் (நான்), ராஜமவுலி (நான் ஈ), சந்தோஷ் சிவன் (உருமி), கே.எஸ்.தங்கசாமி (ராட்டினம்), சத்யசிவா (கழுகு) உள்ளிட்டவர்கள் தங்களது படைப்பை பாராட்டும்படி தந்தார்கள்.

இசையமைப்பாளர்களை பொறுத்தமட்டில் 2012-ல் 70க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் அறிமுகாகி இருக்கிறார்கள். அவர்களில் அனிருத் (3), கிரிஷ் (மெரினா), கார்த்திக் (அரவான்), பிரசன்னா (வழக்கு எண் 18/9), மனுமோகன் (ராட்டினம்) உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

நம்பிக்கை வரவுகளான மேற்படி நாயகர்கள், நாயகிகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்களில் 2013-ல் தமிழ் திரையுலக வானில் யார் யார் பெரும் நட்சத்திரங்களாக ஜொலி ஜொலிப்பார்கள் என்பதை பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுவரை மேற்படி அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட் சொல்லுவோம்!

Tags »
2013, cinema Artist, 2013, சினிமா நட்சத்திரங்கள்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

தமிழ்குமரன் - vandavasi,இந்தியா
2013-02-01 20:47:23 Report Abuse
 தமிழ்குமரன் உதியநிதி பெஸ்ட் actor இன் 2012.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
srinivasan - minjur  ( Posted via: Dinamalar Android App )
2013-01-03 07:32:49 Report Abuse
srinivasan nalla kalam porakuthu!!!!!!!!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
dmk - chennai  ( Posted via: Dinamalar Windows App )
2013-01-02 09:04:10 Report Abuse
dmk வருங்கால முதல்வர் உதயநிதி வாழ்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
thala - karaikal,இந்தியா
2013-01-02 01:53:42 Report Abuse
thala ஆமாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 0 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in