Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு சபதம்...!

01 ஜன, 2013 - 10:50 IST
எழுத்தின் அளவு:

ஒவ்வொரு ஆண்டும் புதுவருடம் பிறக்கும்போது பெரும்பாலானவர்கள் சபதமேற்று அந்த லட்சியத்தை நோக்கி அந்த வருடம் முழுவதும் பயணிப்பார்கள். அந்த லட்சியம் நிறைவேறுகிறதோ இல்லையோ... நாட்கள் மட்டும் கடந்து கொண்‌டே போகும். தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் சிலரது புத்தாண்டு லட்சியங்கள் என்‌‌னென்ன என்பது பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட் இது:-

ஹன்சிகா : 2012 ஒரு நல்ல வருஷமா இருந்தது. நிறைய படங்களில் நடித்தேன். 2013 இன்னும் நிறைய நல்ல படங்களில் நடிக்கணும், இப்போது கைவசம் தமிழ், தெலுங்கில் 9 படங்கள் இருக்கு, ரசிகர்கள் எப்பவும் என்னை கொண்டாடுற மாதிரி நிறைய நல்ல படங்கள் செய்யணும். மேலும் எல்லார்கிட்டயும் அன்பு செலுத்தி, விலங்கினமா இருந்தா கூட, கருணை காட்டி, மனிதர்கள், மனிதர்களை துன்புறுத்தாத நிலைய வரணும். இந்த 2013 ஒரு நல்ல வருஷமா எல்லார்க்கும் அமையணும்.

திரிஷா:
பெரும்பாலும் புதுவருஷத்தில நான் எந்த கொள்கையும் எடுத்துக்கிறதில்லை. ஏன்னா என்னால் கடைபிடிக்க முடியாது. இந்த 2012 என் அப்பா இறப்பு எனக்கு ஒரு பேரிடி, இன்னும் என்னால் வெளில வரமுடியல. இந்த வருஷம் நான் எந்த தமிழ் படத்திலும் நடிக்கல. ஆனா, இப்ப நான் 4 தமிழ் படங்கள் ஒத்துட்டிருக்கேன். முதலில் சமர் வெளிவர போகுது. ஜீவா படம், ரவி படம் இப்படி நிறைய இருக்கு. நிறைய கதைகள் ரோல்கள் செய்துட்டேன், இனி கொஞ்சம் வித்தியாசமான கதையா இருந்தா நல்லா இருக்கும்னு நம்புறேன். எனக்காக ஒரு இடம் தமிழ் சினிமாவில் எப்பவும் இருக்கும். அதற்கான உழைப்பை கொடுக்க நான் தயார் தான்.

பானு : இதுவரையில் எனக்குனு எந்த திட்டமும் வைத்துக் கொள்வது இல்லை. இன்வால்வ்மென்ட் இல்லாமலே இருந்தேன். உடம்பை பற்றியோ, காஸ்ட்யூம், மேக்கப் இப்படி எதிலம் கவனம் செலுத்த மாட்டேன். ஒரு நடிகையா என்னை எப்பவுமே உணர்ந்தது இல்லை. எது நடத்தாலும் அது நல்லதுனே நினைப்பேன். ஆனா 2013ல் என்னை முழுவதுமா மாற்றிக்கனும்னு முடிவு பண்ணிருக்கேன். ரொம்ப கோவம் வரும், அதான் என் மைனஸ், இது எல்லாம் மாற்றி சிறந்த நடிகையா, ரசிகர்கள் எப்பவும் பேசுற மாதிரி படங்கள் பண்ணனும் என்பது தான் இப்போதைக்கு என் ஆசை.

கஸ்தூரி :
இந்த வருஷம் நான் ரொம்ப பிரச்சனைகளை சந்திச்சிட்டேன். மறதி, அஜாக்ரதை, இப்படி கவனக்குறைவா இருந்ததால் பல பிரச்னைகளை சந்திச்சேன். ஆனா, 2013 இதெல்லாம் மாற்றி, புது தொடக்கமா இருக்கும்னு நம்புறேன். ஒரு பொறுப்பான பெண்ணா இருக்கனும்னு நினைக்கிறேன். கன்னாபின்னானு வெயிட் போட்டுட்டேன், மொத்தத்தில் என்னை நான் மாற்றிக் கொள்ளும் வருஷம் 2013.

கார்த்திகா : பெண்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற சூழலில் தான் நாம் இருக்கோம், இந்த 2012 நமக்கு பல பாடங்களை உணர்த்தியிருக்கு. ஒரு சோகமான நிலையில் தான் நான் தள்ளப்பட்டு இருக்கேன். இனி நாம் ஒவ்வொரு பெண்களும் சுதந்திரமாக பாதுகாப்பான நிலையில் வாழ சபதம் எடுப்போம். இந்த வருஷம் எல்லோருக்கும் நல்லபடியாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

வேதிகா : ஒவ்வொரு வருஷமும் ஆரம்பத்தில் புது வருஷடத்திற்கு சபதம் எடுப்போம். அப்புறம் அதை மறந்திடுவோம். எனக்கு ஒவ்வொரு நாளும் புதிய நாளாக எடுத்து கொண்டு இன்று நாம் இந்த உலகத்தில் இருக்கோம் அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லி என் வேலைகளை தொடங்குவேன். எதிர்காலத்தில் நிச்சயம் எனக்கான வருஷமா பிளான் பண்ணி வேலை பார்க்கணும். 2013 நல்லபடி அமைய வேண்டும் என்கிறார் வேதிகா.

அனுயா : இந்த வருஷம் நிறைய சாதிக்கணும், நிறைய படங்கள் பண்ணனும். எனக்கான வேலைகளையும் கொஞ்சம் பிளான் பண்ணி வெற்றி பெற வேண்டும் என்கிறார் அனுயா.

பூஜா : போன வருஷம் நான் ரொம்ப கடினமாக வேலை பார்த்திருக்கேன், ஓடிட்டே இருந்தேன். கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்கல. இந்த வருஷம் கொஞ்சம் வொர்க்  பிளான் பண்ணி ரெஸ்ட் கிடைக்கும் போது எடுக்கணும். 2012-ஐ விட 2013 இன்னும் நல்ல நல்ல வருஷமா அமைய விரும்புகிறேன் என்கிறார் பூஜா.

பிரசாந்த் : 2012 கொஞ்சம் நல்ல வருஷமா அமைந்தது. 2013 இன்னும் அடுத்த ஸ்டெப்பா இருக்கும், தமிழில் வந்த நான் படத்தை, இந்தியில் ஆரம்பிக்கிறோம். இதற்காக நிறைய மெனக்கெடலில் உள்ளேன். மொத்தத்தில் 2013, எல்லாருக்கும் அமைதியும், சந்தோஷமும், வெற்றியும் கிடைக்கும் வருடமா அமையனும்னு கடவுளை வேண்டுகிறேன்.

ஆதி : இதுவரை வித்தியாசமான வேடங்களில் ஏற்று நடித்ததில்லை, அதனால் இந்தாண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசை உள்ளது. அதுதவிர சினிமாவில் இன்னும் நிறைய ‌கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. கூடவே இந்த 2013ம் ஆண்டில் எனக்கான ‌வாழ்க்கை துணையையும் தேடப்போகிறேன் என்கிறார் ஆதி.

ஸ்ரீகாந்த் : கடந்த 2 வருடமாக ஜிம்க்கே போகாமல் எனது உடல்எடை கண்ணாபின்னாவென்று கூடிவிட்டது. இந்தாண்டு முக்கிய கொள்கையாக ஜிம்முக்கு போய் உடம்பை குறைக்க போகிறேன் என்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in