ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் நாட்டில் சிம்புவும், தனுசும் மாறி மாறி பாடி ரசிகர்களின் கொலைவெறியை தூண்டி வருவது வேகமாக நடந்து வருகிறது. இப்போது சிம்பு தெலுங்கிலும் தன் பாட்டை ஆரம்பித்திருக்கிறார். தெலுங்கில் மதுரா ஸ்ரீதர் இயக்கி வரும் படம் "பேக் பென்ஞ் ஸ்டூடண்ட்". மஹத் ராகவேந்திரா நடிக்கிறார். இந்தப் படத்தில் சிம்பு ஒரு தெலுங்கு பாடலை பாடியிருக்கிறார். அதோடு இதே பாடலின் வீடியோ ஆல்பத்திலும் நடிக்க இருக்கிறாராம். மலையூர் மம்பட்டியான் படத்துக்கு சிம்பு பாடி ஆடி நடித்துக் கொடுத்த புரமோஷன் ஆல்பம் மாதிரியாம் இது. பாடல் பதிவு முடிந்து விட்டது. விரைவில் வீடியோ படப்பிடிப்பு நடக்க இருக்கிறது என்று சொல்கிறார் இயக்குனர்.
சிம்புவின் அம்மா தெலுங்கு என்பதால் சிம்புவுக்கு தெலுங்கு சரளமாகத் தெரியும். தனுஷ் வீட்டில் எல்லோருமே தெலுங்கு பேசுகிறவர்கள். தெலுங்கு ரசிகர்களை யாரும் காப்பாற்ற முடியாது என்றுதான் தோன்றுகிறது...