‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
திருமணத்திற்கு பின்னும், நடிகையரால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தி வரும், சமந்தா, ஜோதிகா வரிசையில், நமீதாவும் களமிறங்கி உள்ளார். அவருடன் பேசியதிலிருந்து:
திருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ளது குறித்து...
தமிழ் திரையுலகில் நடிகையரின் வாழ்க்கை, பழைய காலம் மாதிரி இல்லை. தற்போது மாறி விட்டது. திருமணத்துக்கு பின்னும், பலர் வெற்றிகரமான நடிகையர்களாக வலம் வருகின்றனர். நான், தொடர்ந்து சினிமாவில் பணியாற்ற, என் கணவர், ஆதரவாக உள்ளார். நடிக்க முடிவு எடுத்த போது, கிளாமர் கதைகள் தான் அதிகமாக வந்தன. அகம்பாவம் கதை மிகவும் பிடித்திருந்தது. நான் நினைத்த மாதிரியான பாத்திரம், எனக்கு கிடைத்துள்ளது.
இதில், உங்கள் கேரக்டர் என்ன?
பத்திரிகையாளராக நடிக்கிறேன். நமீதாவை இந்த மாதிரி, இதற்கு முன் பார்த்திருக்க மாட்டீர்கள். படப்பிடிப்பின் முதல் காட்சியிலேயே, 20 பக்க வசனம் பேச வேண்டியிருந்தது.
கணவருடன் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா?
மியா என்ற மலையாள படத்தில், இருவரும் ஜோடியாக நடித்தோம். இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால், கண்டிப்பாக நடிப்போம்.
இதுவரை நீங்கள் நடித்த படங்களிலேயே, உங்களுக்கு பிடித்தது?
பார்த்திபனுடன் நடித்த பச்சக்குதிர படத்தை, இன்றும் நான் நடித்த படங்களிலேயே நல்ல படமாக கருதுகிறேன்.
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
எப்போதுமே, எனக்கு பிடித்த நடிகர் விக்ரம். தற்போது, விஜய்சேதுபதியின் நடிப்பும், என்னை கவர்ந்துள்ளது.
பிக்பாஸ் அனுபவம் எப்படி இருந்தது?
ரொம்ப இனிமையான அனுபவம். நிறைய கற்றுக் கொண்டேன். அங்கிருந்து வெளியே வந்ததும், என்னுள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
சுத்த சைவமாக மாறி விட்டீர்களாமே?
ஆம்; சுத்த சைவமாக மாறி ஐந்து மாதங்கள் கடந்து விட்டது. முட்டை கூட சாப்பிடுவது இல்லை. தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படும் காட்சிகளை பார்த்த பின், இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்தேன்.
ரஜினி, கமல் அரசியலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அரசியலைப்பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. அரசியல் நிறைய மாறி உள்ளது. எனக்கு மிகவும் பிடித்தவர் ஜெயலலிதா. நான் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க அழைத்தால், நடிப்பீர்களா?
கண்டிப்பாக, அந்த மாதிரி வாய்ப்பு வந்தால், நடிக்க தயாராக இருக்கிறேன்; அதுவே என் திரை வாழ்க்கையில் மைல்கல்லாக இருக்கும்.