Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

வெற்றிப்பட இயக்குனர்களுடன் பணியாற்ற ஆசை : ஜெயம் ரவி

16 நவ, 2018 - 01:33 IST
எழுத்தின் அளவு:
Wishing-to-work-with-film-directors!

டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவி நடித்த, அடங்கமறு படம் விரைவில் வெளியாகிறது. இந்த படம் குறித்து, ஜெயம் ரவி கூறியதிலிருந்து...


அடங்கமறு எந்த மாதிரியான படம்?


போலீசாக பணியில் சேர்ந்த ஒருவனுக்கு, ஏற்படுகிற சம்பவங்கள் தான், இந்த படத்தின் கதை.


படப்பிடிப்பு , பாடல் காட்சி எல்லாம் எங்கு எடுத்தீர்கள்?


இது, நம்ம ஊர் கதை. நம்ம ஊரிலேயே படப்பிடிப்பு வைக்கலாம் என முடிவு செய்து, முழு படப்பிடிப்பும் சென்னையில் தான் எடுத்தோம். திரைக்கதைப்படி எந்தெந்த இடம் இருந்ததோ, அந்தந்த இடத்திலேயே படப்பிடிப்பை நடத்தினோம்.


படத்திற்காக உடல் மொழி மாற்றம் ஏதாவது செய்தீர்களா?


ஏற்கனவே போலீசாக நடித்துள்ளேன். போலீஸ் துறையில் நிறைய நண்பர்கள் உள்ளனர்.
அவர்களிடம் கற்றுக் கொண்டதை பயன்படுத்திஉள்ளேன். இதில், தாடி வைத்து நடித்துள்ளேன்.


உடன் நடித்தவர்கள் குறித்து?


பொன்வண்ணன் உடன் நான்காவது படம் இது. அவருடன் நடிப்பது ஜாலியாக இருந்தது.
அவரிடம் கற்றுக் கொண்ட விஷயம் அதிகம். முனீஸ்காந்த் பேசுகிற விதமே சிறப்பாக
இருக்கும். வெகுளியான நபர்.


படத்தின் நாயகி ரஷி கண்ணா பற்றி கூறுங்கள்?

ரஷி கண்ணா, தமிழில் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படம், அவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தரும். மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில், நல்ல முக அமைப்பு உள்ளவர்.


அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமா?


செலவை பற்றி கவலைப்பட வேண்டாம் என, தயாரிப்பாளர் கூறி விட்டார். அதனால்,
படத்திற்கேற்ற வகையில் எடுத்துள்ளோம்.


ஆக் ஷன் காட்சிகள் எப்படி?


படத்திற்கு என்ன தேவையோ, அதை செய்துள்ளோம். நிமிர்ந்து நில் படம் போலவே, இந்தப்படத்திலும் ஆக் ஷன் பேசப்படும். ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆக் ஷன், படத்தில் இருக்கும்.


அடுத்த படம் யாருடன், எந்தஇயக்குனருடன் பணியாற்ற ஆசை?


எனக்கு, ஹிட் கொடுத்த இயக்குனர்களுடன் மீண்டும் பணியாற்ற வேண்டும் என ஆசை. எந்த இயக்குனர் ஆனாலும், நல்ல கதை இருந்தால் ஓகே. தனி ஒருவன் - 2 படம் அடுத்தாண்டு ஆரம்பமாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - சிலிர்க்கிறார் மகேந்திரன் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in