Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

என் ஆசை நிறைவேறி விட்டது! : ப்ரியா லால்

26 அக், 2018 - 06:46 IST
எழுத்தின் அளவு:
என்-ஆசை-நிறைவேறி-விட்டது!

ஜீனியஸ் படத்தில் நாயகியாக நடித்துள்ள ப்ரியா லால், தன் முதல் தமிழ் பட அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்த போது:


உங்களது முதல் படம்?


மலையாளத்தில் ஜனகன் என்ற படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்தேன். அதன் பின், நிறைய காதல் மற்றும் காமெடி படங்களில் நடித்துள்ளேன். தமிழில் ஜீனியஸ் தான், என் முதல் படம்.


ஜீனியஸ் படத்தில், என்ன பாத்திரத்தில் நடித்துள்ளீர்கள்?


ஜாஸ்மின் என்ற நர்ஸ் பாத்திரத்தில் நடித்து உள்ளேன். என் கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும். நான் நடித்த முதல் காட்சியே கிளைமாக்ஸ் தான். நீளமான காட்சி என்பதால், சிரமமாக இருந்தது. ஒரு சிறிய பாவனை கூட அந்த பாத்திரத்தை கெடுத்து விடக்கூடாது, என்பதில் கவனமாக இருந்தேன்.


'மீ டூ' புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், சினிமாவில் நடிக்க பெற்றோர் சம்மதித்தனரா?


ஒரு தமிழ் படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் கனவு. பாட்டு, நடனம், நடிப்பு என, அனைத்திலும் எனக்கு ஆர்வம். ஆனால், என் குடும்பம் சினிமா பின்னணியில் இல்லாததால், அம்மாவிடம் சொல்ல தயங்கினேன். ஆனாலும், என் ஆசையை, என் பெற்றோர் நிறைவேற்றி வைத்துள்ளனர்.


படத்தின் நாயகனை பற்றி கூறுங்கள்?


இந்தப்படத்தில், ரோஷனும், நானும் புது வரவு. அவர் எப்போதும் நேர்மறையான எண்ணம் உடையவர். அவரைச்சுற்றி நேர்மறையான அதிர்வு இருந்து கொண்டே இருக்கும்.


பிடித்த நடிகை?


ரேவதியை ரொம்ப பிடிக்கும். இப்போது நித்யாமேனன்.


பிடித்த நடிகர்?


விஜய், விஜய்சேதுபதி, தனுஷ் ரொம்ப பிடிக்கும்.


இயக்குனராக திட்டமிட்டுள்ளீர்களா?


இப்போதைக்கு நடிப்பு மட்டும் போதும். எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இயக்கும் வாய்ப்பும் கிடைக்கலாம்.


இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு வர்ணனையாளராக இருந்தீர்களா?


ஐந்தாண்டுகளுக்கு முன் கொச்சியில் நடந்த, இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு, விளம்பர துாதராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, சிறிது நேரம் போட்டியை பற்றி வர்ணனை செய்தேன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - சிலிர்க்கிறார் மகேந்திரன் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in