Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

எனக்கு ஏற்ற நபரை இன்னும் சந்திக்கவில்லை!: சதா

30 ஆக, 2018 - 23:38 IST
எழுத்தின் அளவு:
I-have-not-met-my-life-partner-yet:-sadha

ஜெயம் படத்தின் மூலம், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், சதா. அஜித், விக்ரம் என முன்னணி நாயகர்களுடன் நடித்தவர். சில ஆண்டுகளாக போதிய வாய்ப்பில்லாமல் இருந்த இவர், தற்போது டார்ச்லைட் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஒரு சந்திப்பு:

டார்ச்லைட் எந்த மாதிரியான படம்?


கடந்த, 1980களில் நடப்பது போன்ற சம்பவங்கள், கதையாக சித்தரிக்கப்பட்டுள்ளன. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் குறித்த கதை. நான் இதுவரை, இந்தமாதிரி துணிச்சலான பாத்திரத்தில் நடிக்கவில்லை. ஆரம்பத்தில் சாதாரணமாக தான் நினைத்தேன். ஆனால், விருப்பமில்லாத தொழிலில் ஈடுபடும் பெண்களின் நிலையை படத்தில் பிரதிபலித்தது கஷ்டமாக இருந்தது.


அந்த மாதிரி தொழிலில் ஈடுபடும் பெண்கள் குறித்து?


அந்த மாதிரி தொழிலில் பெண்கள் ஈடுபடுவதற்கு காரணமே, ஆண்கள் தான். பெண்கள் யாருமே விரும்பி அதில் ஈடுபடுவதில்லை.


பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கலாமா?


அரசு இத்தொழிலை சட்டப்பூர்வமாக்குவதை விட, இத்தொழிலுக்கான தேவையை குறைத்தாலே போதுமே... ஒவ்வொருவரும் இவ்விஷயத்தில், தங்கள் பொறுப்பை உணர வேண்டும்.


சினிமாவில் இடையில் காணாமல் போனது ஏன்?


படங்களில் நடிக்காமல் இருந்த போது, மனதுக்கு பிடித்த மாதிரியான கதைகள் எதுவும் அமையவில்லை. நாயகிக்கு முன்னுரிமை தரும் படங்கள் நிறைய வந்தன. ஆனால், நீண்ட இடைவெளிக்கு பின் வந்தால், நல்ல படமாக தர வேண்டும், மக்கள் மனதில் நிற்கும் வகையிலான படத்தில் நடிக்க வேண்டும் என, விரும்பினேன்.


படத்தில் நடித்த போது வருத்தப்பட்டீர்களா?
பொதுவாகவே நான் கொஞ்சம் அமைதியான கூச்சசுபாவம் உள்ள பெண். இந்த படத்தில் நடித்த போது வருத்தப்படவில்லை. ஆனால் ஒரு சில காட்சிகளில் நடிக்கும் போது கொஞ்சம் வருத்தப்பட்டேன்.

படத்தில் உங்கள் எல்லையை தாண்டி நடித்திருக்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை. படத்திற்கு என்ன தேவையோ அந்தளவு மட்டுமே கிளாமராக நடித்திருக்கிறேன். மற்றபடி படத்தில் முகம்சுழிக்கும்படியான ஆபாச காட்சிகள் இருக்காது. என்னோட லிமிட் எனக்கு தெரியும், ரசிகர்கள் எப்படி நடித்தால் பார்ப்பார்கள், பெண்கள் படத்தை பார்த்தால் என்ன மாதிரி உணர்வார்கள் என்று தெரியும். அதை மனதில் கொண்டே நடித்திருக்கிறேன், எல்லை மீறவில்லை. படத்தில் நல்ல மெஸேஜ் உள்ளது.

திருமணம் எப்போது?


எனக்கு ஏற்ற மாதிரி, நான் விரும்பும் வகையிலான நபர்கள் யாரும், என் வாழ்வில் வரவில்லை. அந்த மாதிரி நபரை சந்திக்கும் போது திருமணம் குறித்து யோசிக்கலாம்.


அடுத்து நடிக்கும் படம்?


இரண்டு கதைகள் வந்துள்ளன. நானே தயாரிக்கலாமா அல்லது வேறு யாராவது தயாரிப்பில் நடிக்கலாமா என, யோசித்து வருகிறேன்.


அழகின் ரகசியம்?


விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், இறைச்சி என எதுவும் சாப்பிட மாட்டேன். பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்காக மருந்துகள் அதிகம் கலக்குகின்றனர். காய்கறி, சப்பாத்தி போன்றவை தான் என் உணவு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - சிலிர்க்கிறார் மகேந்திரன் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in