விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
நடிகை நிக்கி கல்ரானியின் அக்கா, சஞ்சனா கல்ரானி. தமிழில், ஒரு காதல் செய்வீர் என்ற ஒரே ஒரு படத்தில் நடித்தவர், அதன் பின், தெலுங்கு, கன்னடம் என, 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, முடித்து விட்டார். தற்போது தமிழில், இளைய தளபதி என்ற, டிவி தொடர் மூலம், மீண்டும் நடிக்க வந்துள்ளார்; அவருடன் பேசியதிலிருந்து:
கன்னடம், தெலுங்கு போல், தமிழில் அதிக படங்களில் நடிக்காதது ஏன்?
கன்னடத்தில் சிவராஜ் குமார், சுதீப் உடன் பிக்பாஸ், தெலுங்கில் பவன் கல்யாண், பிரபாஸ், மலையாளத்தில் மம்முட்டி ஆகியோருடன், 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். தமிழில், சவாலான ஒரு கேரக்டரில் நடிப்பதற்காக காத்திருக்கிறேன்.
சின்னத்திரை தொடருக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஏன்?
சினிமாவில் நடிப்பதால், குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களை தான் சென்றடைய முடியும். ஆனால், இளைய தளபதி தொடர், இந்தியாவில், 10 மொழிகளில் ஒளிபரப்பாகிறது. மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்த தொடர் தயாராகிறது. இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய பட்ஜெட்டில், ஒரு தொடர் உருவாவது இதுவே முதல் முறை. இத்தொடர் மூலம், ஒவ்வொரு வீட்டிலும், என்னை அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்.
தமிழில் எந்த மாதிரி வேடத்திற்கு காத்திருக்கிறீர்கள்?
தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அருந்ததீ படத்தில் அனுஷ்கா
நடித்தது போல், நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தது போல், ஒரு வரலாற்று படத்தில், நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. விஜய் உடன் நடிக்க ஆவலாக இருக்கிறேன்.
சகோதரி நிக்கி கல்ரானி குறித்து?
அவருக்கு முன்பே, நான் சினிமாவுக்கு வந்து விட்டேன். நிக்கிக்கு, நான் தான் பாதுகாவலர். எது வந்தாலும், நான் பார்த்துக் கொள்வேன். சினிமாவில், நிக்கி வளர்ந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
இளைய தளபதி தொடர் குறித்து?
ஒரு வாளின் உரிமைக்காக நடக்கும் யுத்தம்; இதில் பல கிளை கதைகள் உண்டு. பாகுபலி படத்தை தயாரித்த அர்கா மீடியா, பிரமாண்ட பொருட்செலவில் இத்தொடரை தயாரித்துள்ளனர். லேடி பாகுபலி போன்றதொரு கனமான, மகாராணி மக்தாத்ரி என்ற பாத்திரத்தில் நடிக்கிறேன். இதற்காக குதிரையேற்றம், வாள் சண்டை அனைத்தையும் முறைப்படி கற்றேன். இளைய தளபதி தொடரில் நடிக்கும் நான், விரைவில் இளைய தளபதி உடனும் நடிப்பேன்.