Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

சென்னை மக்கள் அன்பானவர்கள் : ஷாலினி பாண்டே

08 ஜூன், 2018 - 01:10 IST
எழுத்தின் அளவு:
Chennai-people-are-loveable-persons-says-Shalini-Pandey

தமிழில் முன்னணி நாயகியாக வலம் வர காத்திருக்கும், ஷாலினி பாண்டே, தற்போது, 100 சதவீதம் காதல், கொரில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவருடன் பேசியதிலிருந்து:

* அர்ஜுன் ரெட்டி முதல் படமே சவாலாக இருந்திருக்குமே?
இயக்குனர் சந்தீப் கதை கூறியபோது, என்னால் நடிக்க முடியுமா என சந்தேகம் இருந்தது. எனக்குள் ஏற்பட்ட சந்தேகத்தை இயக்குனர் தெளிவுப்படுத்தினார். முதல் படமே இப்படி எல்லாருக்கும் அமைவது இல்லை. முதல் படத்தில் கிடைத்த வரவேற்பை எதிர்பார்க்கவே இல்லை.

* தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதில் என்ன வித்தியாசம்?

நடிப்பை பொறுத்தவரை மொழி பிரச்னையே இல்லை. நான் மும்பையில் இருந்து வந்ததால், முதலில் தெலுங்கு கூட கடினமாக தான் இருந்தது. இப்போது தெலுங்கு பேசுகிறேன். தமிழும் அப்படித்தான்; விரைவில் தமிழிலும் பேசுவேன்.

* அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பின் நிறைய வாய்ப்பு வந்ததா?

நிறைய படங்கள் வந்தன. ஆனால், வழக்கமான படங்களில் நடிக்க விருப்பம் இல்லை. ரசிக்கிற மாதிரி கதை இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

* தியேட்டர் அனுபவம்?

ஐந்து ஆண்டுகள் அங்கு இருந்தேன். நடிப்பு பயிற்சியையும் தாண்டி கதை கொடுப்பாங்க, அதை நம் ஸ்டைலில் நடிக்கணும். பல ஊர்களில் நாடகங்களில் நடித்துள்ளேன். தியேட்டர் அனுபவம் படங்களில் நடிக்க உதவியாக இருந்தது.

* முதல் படத்தில் கர்ப்பிணியாக நடித்த அனுபவம்?
படத்தில் மிகவும் கஷ்டமான பகுதி இது தான். இதற்காக ஐந்து கிலோ உடல் எடையை அதிகரித்தேன். கர்ப்பிணி பெண் எப்படி நடப்பார், உட்காருவார் என்று பார்த்து பார்த்து நடித்தேன். எனக்கே ஒரு தாய்மை அனுபவத்தை கொடுத்தது

* விளையாட்டு தொடர்பாக நிறைய படங்கள் வருகிறதே உங்கள் விருப்பம்?
பாட்மின்டன், நீச்சல், கைபந்து நன்றாக விளையாடுவேன். பள்ளி நாட்களில் விளையாட்டில் தான் ஆர்வமாக இருந்தேன். சினிமாவுக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. வீட்டில் இருக்கும்போது பசங்க போன்று விளையாட்டு மைதானம் போய்டுவேன். என் ஆர்வம் விளையாட்டில் தான் இருந்தது. விளையாட்டு தொடர்பான படங்கள் வந்தாலும் நடிக்க தயார்.

* திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் நடைமுறை பற்றி...?
ஆண், பெண் நண்பர்களாக இருப்பது சகஜமாகிவிட்டது. இந்த விஷயத்தை, எடுத்துக் கொள்ளும் விதமும், நடந்து கொள்ளும் விதமும் அவரவர் பார்வையை பொறுத்தது.

* 100 சதவீதம் காதல் படம் பற்றி?

இந்த படம் இன்னொரு குஷி என எல்லாரும் சொல்கின்றனர். எனக்கும், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும் இடையே நடக்கும் காதல்,ஈகோ, சண்டை என எல்லாமாக சேர்ந்து, கலகலவென படமாக்கி உள்ளோம்.

* பாடகி ஆக விருப்பமா?
நான் தெலுங்கில் ஒரு ஆல்பம் பாடி இருக்கிறேன். எனக்கு பாடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். தமிழில் பாட ஆர்வமாக இருக்கிறேன்.

* தமிழில் யாருடன் சேர்ந்து நடிக்க ஆசை?
எனக்கு கமல் சாரை ரொம்ப பிடிக்கும். அவருடன் சேர்ந்து நடித்தால், மகள் போல இருப்பேன் என கிண்டல் செய்வர்; தனுஷின் யதார்த்தமான நடிப்பு, டான்ஸ் ரொம்ப பிடிக்கும்.

* கொரில்லா படம் பற்றி?
நகைச்சுவையுடன் அமைந்த கதை. பாங்காக் முடித்து, சென்னையில் பெரும்பாலான பகுதி எடுக்கபட்டது. படம் ரொம்ப ஜாலியாக இருக்கும்.

* சென்னை மக்கள் பற்றி?
மும்பை போனால் கூட, இட்லி தான் கேட்பேன். என் பேச்சு கூட, வாடா, போடா, மச்சான் என்றாகி விட்டது. வீட்டில் தமிழ், தெலுங்கு என கலந்து பேசுவேன். அந்தளவுக்கு சென்னை என்னுள் கலந்து விட்டது. சென்னை மக்கள் ரொம்ப அன்பானவர்கள். சென்னை சாப்பாடு ரொம்ப பிடித்து விட்டது.

Advertisement
ரஜினி நல்லது செய்தால் அவருக்காக பிரசாரம் செய்வேன்!: ஈஸ்வரி ராவ்ரஜினி நல்லது செய்தால் அவருக்காக ... சினிமா வாய்ப்பு தேடி அலைந்தது இல்லை : நிவேதா பெத்துராஜ் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தது இல்லை : ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in