Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

தமிழ் சினிமாவை ஆளக்கூடிய முகம் எனக்கு : யோகி பாபு

04 மே, 2018 - 00:37 IST
எழுத்தின் அளவு:
I-face-the-Tamil-cinema!

தமிழ் திரையுலகில், 2009ல் வெளியான, யோகி படம் மூலம் நடிகரானவர், யோகி பாபு. தொடர்ந்து, பல படங்களில் நடித்து, தற்போது, குறுகிய காலத்தில், 100 படங்களை எட்டிப் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்துள்ள, யோகியுடன் ஒரு சந்திப்பு:

எந்தெந்த படங்களில் நடிக்கிறீர்கள்?
அஜித்துடன் விஸ்வாசம், விஜயின், 62வது படம், விஜய் சேதுபதியுடன், ஜுங்கா ஆகிய படங்களில் நடிக்கிறேன். இதுதவிர, சிவகார்த்திகேயனுடனும், சித்தார்த்துடனும் நடிக்கிறேன்.

விஜய் சேதுபதியுடன் நடித்தது குறித்து?
ஆண்டவன் கட்டளை படத்தில், அவருடன் நடித்தேன். இருவரும், அந்த படத்தில் சீரியசாக நடித்திருப்போம். இதற்கு நேர்மாறாக, ஜுங்காவில், இருவரும் படம் முழுக்க காமெடி டிராக்கில் நடித்துள்ளோம். இந்த படத்திற்காக இருவரும் வெளிநாட்டுக்கு எல்லாம் சென்று வந்தோம்.

குறுகிய காலத்தில், 100 படத்தில் நடித்தது எப்படி?
இது எதிர்பார்க்காத ஒரு விஷயம். 100 படத்தில் நடித்தது, ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இப்படியெல்லாம் நடக்குமா என்பதை என்னாலேயே நம்பமுடியவில்லை. இதற்கு காரணம், இயக்குனர்களும், நான் வணங்கும் முருகனும் தான். சினிமாவிலேயே மேலும் சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

ரசிகர்களின் வரவேற்பு எப்படி உள்ளது?
ரசிகர்கள் இல்லையென்றால், எந்த நடிகரும் இல்லை. இந்த கேரக்டர் தான் என்றில்லாமல், எந்த கேரக்டரில் நான் வந்தாலும், மக்கள் கைதட்டி சிரிக்கின்றனர் என்றால், அதற்கு, நான் என் பெற்றோருக்கு நன்றி கூறுகிறேன்.

உங்கள் ரோல்மாடல் யார்?
அப்படியெல்லாம் யாருமில்லை. கவுண்டமணி, செந்தில், எம்.ஆர்.ராதா ஆகியோரை ரொம்ப பிடிக்கும். எம்.ஆர்.ராதா ஆரம்ப காலத்தில் கூறியது எல்லாம், இப்போது நடக்கிறது. கவுண்டமணியின், டைமிங் வசனமெல்லாம், நெத்தியடியாக இருக்கும். அது வேற லெவல். இந்திய சினிமாவிலேயே, ரியாக் ஷனுக்கு சொந்தக்காரர் யார் என்றால், செந்தில் சார் தான். அவரது ரியாக் ஷனை யாரும் தொட்டதில்லை. இப்போது உள்ள நடிகர்களும் பிடிக்கும். எல்லாரும் நன்றாக ஒத்துழைப்பு தருகின்றனர்.

சுந்தர்.சி உடன் பணியாற்றியது பற்றி?
எனக்கு, காட்பாதராக இருப்பவர், சுந்தர்.சி. ஒன்பது ஆண்டுக்கு முன், கலகலப்பு படத்தில் கடைசி நாள் ஷூட்டிங், இயக்குனரை சந்தித்து, நன்றி சொல்லிவிட்டு செல்லலாம் என்று இருந்தேன். அவரை பார்த்து, வேறு ஏதாவது படம் இருந்தால் சொல்லுங்கள்; வருகிறேன் சார்
எனக் கூறிவிட்டு, இரண்டு அடி எடுத்து வைத்தேன்.

சுந்தர்.சி கூப்பிட்டார். நீ நடந்து வரும் போது உன் தலைக்கு பின் சக்கரம் சுற்றுது பாபு என்றார். கலாய்க்காதீங்க சார் என்றேன். அவர் சொன்னார், தமிழ் சினிமாவை ஆளக் கூடிய முகம். நீ பெரிய ஆளா வருவாய் என்றார். அவரை தேடிச் சென்றேன். நிறைய நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்துள்ளார். யோகி பாபுவிடம் எந்த கேரக்டர் கொடுத்தாலும், செய்வான் என்பதை சுந்தர்.சி நிரூபித்துள்ளார்.

Advertisement
ப்ரியா வாரியருக்கு இது நல்ல நேரம்! : மஞ்சிமா மோகன்ப்ரியா வாரியருக்கு இது நல்ல நேரம்! : ... புதுமுகங்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன்! - சமந்தா புதுமுகங்களுக்கு வழிகாட்டியாக ...


வாசகர் கருத்து (3)

HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
09 மே, 2018 - 01:23 Report Abuse
HoustonRaja ஷானு - சற்று தெளிவாக சொல்லவும். மற்றவர்கள் - வறுத்தெடுக்க தயாராகவும்.
Rate this:
Shanu - Mumbai ,இந்தியா
04 மே, 2018 - 12:12 Report Abuse
Shanu தமிழ் ரசிகர்களின் நிலை இப்படி ஆகி விட்டது என்று இளம் தலைமுறையினரை நினைத்தால் கேவலமாக இருக்கிறது
Rate this:
SURA.G -  ( Posted via: Dinamalar Android App )
04 மே, 2018 - 07:11 Report Abuse
SURA.G வாழ்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Seemathurai
  • சீமத்துரை
  • நடிகை : வர்ஷா பொல்லம்மா
  • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
  Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
  Tamil New Film Kaaviyan
  • காவியன்
  • நடிகர் : ஷாம்
  • நடிகை : ஸ்ரீதேவி குமார்
  • இயக்குனர் :பார்த்தசாரதி
  Tamil New Film Aan Devathai
  • ஆண் தேவதை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ரம்யா பாண்டியன்
  • இயக்குனர் :தாமிரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in