Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

ப்ரியா வாரியருக்கு இது நல்ல நேரம்! : மஞ்சிமா மோகன்

27 ஏப், 2018 - 01:28 IST
எழுத்தின் அளவு:
priya-varriers-good-time:-manjima-mohan

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில், 'பிசி'யாக நடிப்பவர், மஞ்சிமா மோகன். அச்சம் என்பது மடமையடா படம் மூலம், தமிழில் நடிக்கத் துவங்கிய இவர், இன்னும் பெயரிடப்படாத மூன்று தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்; அவரிடம் பேசியதிலிருந்து:


வடக்கன் செல்பி முதல், இப்படை வெல்லும் வரை, உங்களது திரைப்பயணம் குறித்து?


வடக்கன் செல்பிக்கும், இப்படை வெல்லும் படத்துக்குமான கால அளவு, மூன்று ஆண்டுகள். இதுவரை, ஐந்து படங்களில் நடித்துள்ளேன். இந்த ஐந்தாண்டு பயணம், மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஒவ்வொரு படத்திலும் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.


சிம்பு உடன் நடித்த பின், நிறைய இளம் ரசிகர்கள் உங்களுக்கு கிடைத்துள்ளது குறித்து?


இளைஞர்கள் மட்டுமில்லை; குழந்தைகளும் ரசித்து, அவர்கள் வீட்டில் என்னை ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த பெருமை, அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கிய இயக்குனரையே சாரும்.


தமிழில் அதிகமாக நடிப்பது இல்லையே?


தற்போது மூன்று தமிழ் படங்களில் நடிக்கிறேன். தாய்மொழியான மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியில், தலா ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இதன்படி பார்த்தால், தமிழில் தானே அதிகம் நடிக்கிறேன். நான் நடிக்கும் படங்கள், எப்போதுமே ரசிகர்களால் பாராட்டப்படும் வகையில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எனக்கு பொருத்தமான கேரக்டர்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தமிழில் அதிகம் நடிக்காதது போல், உங்களுக்கு தோன்றியிருக்கலாம்.


உடல் எடையை கணிசமாக குறைத்து விட்டீர்கள் போல் தெரிகிறதே?


படங்களில் பார்க்கும்போது, சற்று குண்டாக தோன்றுவதாக, சிலர் கூறினர். இதை சீரியசாக எடுத்துக் கொண்டு, சில உடற்பயிற்சிகளை செய்து, உடல் எடையை சற்று குறைத்துள்ளேன். நடிப்பு, தோற்றம் போன்ற விஷயங்களில், எனக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்கள், சில ஆலோசனையை கூறும்போது, அதை ஏற்றுக் கொள்வேன்.


பிடித்த தமிழ் நடிகர்கள் யார்?


அப்படி, யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. எல்லா நடிகர்களையும் பிடிக்கும். தற்போது முன்னணியில் உள்ள அனைத்து நடிகர்களுடனும், ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும்.


மீண்டும் சிம்பு உடன் நடிப்பீர்களா?


சிம்பு மட்டுமல்ல, அனைவருடனும் மீண்டும் நடிக்க ஆசை தான். அதற்கான வாய்ப்பு வரும்போது கண்டிப்பாக அதை பயன்படுத்துவேன். தமிழில் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான், என் ஆசை.


தற்போது நடித்து வரும் படம் குறித்து?


குயின் மலையாள ரீமேக்கில் நடித்து வருகிறேன். இன்னும் ஒரு கட்ட படப்பிடிப்பு மீதம் உள்ளது. விரைவில் முடிந்து விடும். அந்த படம் வெளியானதும், கேரளாவில் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த படத்துக்காக காத்திருக்கிறேன்.


கண்களால் காதல் பேசிய, கேரள அழகி, ப்ரியா வாரியர் குறித்து?


அவருக்கு நல்ல நேரம் என்று தான் சொல்ல வேண்டும். ரசிகர்கள் அவரை ஏற்றுக் கொண்டுள்ளனர். குறிப்பாக, தமிழ் ரசிகர்கள் அவருக்கு பெரிதும் வரவேற்பு கொடுத்துள்ளனர். ப்ரியாவும், கேரளா; நானும் கேரளா என்பதால், அவருக்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்காக, அவர் சார்பில் நானும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


Advertisement
சாவித்திரி வேடத்தில் நடித்தது சிரமமாக இருந்தது : கீர்த்தி சுரேஷ்சாவித்திரி வேடத்தில் நடித்தது ... தமிழ் சினிமாவை ஆளக்கூடிய முகம் எனக்கு : யோகி பாபு தமிழ் சினிமாவை ஆளக்கூடிய முகம் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film Rajabheema
    • ராஜபீமா
    • நடிகர் : ஆரவ்
    • இயக்குனர் :நரேஷ் சம்பத்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in