Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

சினிமா இல்லாமல் தமிழக அரசியல் இல்லை : கஸ்துாரி

06 ஏப், 2018 - 01:35 IST
எழுத்தின் அளவு:
Tamilnadu-is-not-politics-without-cinema!

மிஸ் சென்னை பட்டம் வென்றவர். தமிழ் சினிமாவில், பல வெற்றிப் படங்களை தந்தவர், நடிகை கஸ்துாரி. தற்போது சமூக வலைதளங்களில், அரசியல், சினிமா சார்ந்து, பல தடாலடி கருத்துகளை கூறி வருகிறார். அவருடன் பேசியதிலிருந்து:

உங்கள், டுவிட்டர் பதிவில், அதிக உள்குத்து, நையாண்டி ஏன்?
நையாண்டி, நக்கல் எல்லாம், என்னை வைத்தே, அதிகம் பதிவு செய்துள்ளேன். கருத்து சுதந்திரத்தை ஆணிவேராக மதிக்கும் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக இருந்ததால், என் பதிவுகள் நையாண்டியாக இருக்கலாம்.

நம் நாட்டில், மற்றவரை கேலி செய்தால், சேர்ந்து சிரிப்பர். ஆனால், தன்னைத் தானே ஒருவர், கேலி செய்தால் சிரிப்பே வராது; இது மாற வேண்டும். அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்து விடைபெற்று செல்பவர்கள், அவரைப் பற்றி, அவரது ஆட்சிப்பற்றி, தனிப்பட்ட குணத்தை பற்றி, அவரே கிண்டல் செய்ய வேண்டும். ஆனால், இங்கு கருத்து சுதந்திரத்தையும், காமெடியையும் கவனமாக கையாள வேண்டியதாக உள்ளது. அரசியல் கலாய்ப்பு தமிழகத்திற்கு புதிதாக உள்ளது. என் கலாய்ப்பில், வன்மம் இருக்காது. சில எதிர்ப்பு வரத் தான் செய்யும். தமிழகத்தில் நேர்மறை சிந்தனை இன்னும் வளர வேண்டும்.

உங்கள், ரோல்மாடல் யார்?
ஆங்கில, டிவி சேனல்களில், கேலி, கிண்டலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும், டேவிட் லெட்டர்மேன், ஜேய் லெனோ, ஜிம்மிகிம்மல், கோர்ல்பேர்ட் இவர்களெல்லாம், என் ஆதர்ஷ நாயகர்கள்.

ரஜினி, கமல் அரசியலை எப்படி பார்க்கிறீர்கள்?
விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது, நம்பிக்கையோடு பார்த்தேன். தன் தலைமை பண்பை நிரூபித்தவர், அவர். ஆனால், ரஜினியும், கமலும், நேரடியாக அரசியலுக்கு வந்துள்ளனர்; கமல் களத்தில் இறங்கியுள்ளார். போகப் போகத் தான் தெரியும். இவர்கள் நினைத்தால், ஏசி அறையிலேயே இருக்கலாம். அரசியலில் அவர்களுக்கு ஆதாயம் என்பதை விட, நஷ்டம் தான் இருக்கும். சினிமா இல்லாமல், தமிழக அரசியல் இல்லை.

சினிமா கவர்ச்சிக்கு தமிழக மக்கள் அடிமையாகி விட்டனரா?
தமிழக மக்கள், சினிமா கவர்ச்சியை மட்டுமே வைத்து ஓட்டுப் போடுவதில்லை. அப்படி போட்டிருந்தால், எம்.ஜி.ஆருடன் நடித்த, லதா, சரோஜாதேவி தான், வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால், எம்.ஜி.ஆரால், அரசியலில் வளர்க்கப்பட்ட, ஜெயலலிதா தான் வெற்றி பெற்றார். சினிமாவில் வெற்றி பெற்றவர், அரசியலில் ஜெயிக்க முடியாது என்பதற்கு உதாரணமாக, சிவாஜியை கூறலாம். ஆனாலும், சினிமாவை பிரித்து வைத்து, தமிழக அரசியலை பார்க்க முடியாது.

சினிமா ஸ்டிரைக் பிரச்னைக்கு தீர்வு என்ன?
ஒரு ரசிகையாக சொல்கிறேன். பாக்கெட்டுக்கு அடக்கமான, ஒரே பொழுதுபோக்கு, சினிமா தான். 600 - 1,000 ரூபாயில் முடிந்து விடும். ஆனால், அதே வேறு இடங்களுக்கு சென்றால், ஆயிரக்கணக்கில் பழுத்து விடும். ஐந்து தனி நபர்களால் தான் அந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த ஐந்து பேர், தங்கள் தவறை உணர வேண்டும். தயாரிப்பாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க வேண்டும். தியேட்டர்காரர்களுக்கு நஷ்டமே இல்லை. கார்ப்பரேட் வியாபாரமாகி விட்ட சினிமாவில், மரண அடி வாங்குவது தயாரிப்பாளர்கள் தான்.

இந்த தலைமுறை நடிகையர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இப்போதுள்ள நடிகையரில் ஓரிருவரை தவிர, அனைவருமே ரொம்ப ஸ்மார்ட்டாக உள்ளனர். எங்கள் தலைமுறையை விட, சிறப்பாக செயல்படுகின்றனர். சினிமாவுக்கு அப்பாற்பட்டு, நாலும் தெரிஞ்ச புத்திசாலிகளாக உள்ளனர்.

Advertisement
எனக்கு எல்லா வித்தையும் தெரியும்! : ப்ரியா வாரியர்எனக்கு எல்லா வித்தையும் தெரியும்! : ... எனக்கு கல்யாணம் நடக்குமா என தெரியவில்லை! - கவுதம் கார்த்திக் எனக்கு கல்யாணம் நடக்குமா என ...


வாசகர் கருத்து (4)

praj - Melbourn,ஆஸ்திரேலியா
06 ஏப், 2018 - 12:51 Report Abuse
praj தமிழகத்தின் சாபக்கேடு சினிமா தமிழ் அரசியலோடு இணைந்திருப்பது..
Rate this:
V. VENUGOPAL - Erode,இந்தியா
06 ஏப், 2018 - 12:25 Report Abuse
V. VENUGOPAL இந்த தமிழ்நாட்டை இறைவன் காப்பாற்றுவான்.
Rate this:
sam - Doha,கத்தார்
06 ஏப், 2018 - 08:05 Report Abuse
sam எம்மா தாயே , மக்கள் பார்க்கா விட்டால் இல்லாமல் சினிமா இல்லை. சினிமா காரர்களை நம்பி அரசியல் இல்லை. நீங்கள் எல்லாம் retire ஆகி விட்டால், அரசியலில் வருவதற்கு மக்கள் ஒன்றும் ஏமாளி இல்லை
Rate this:
Shanu - Mumbai,இந்தியா
06 ஏப், 2018 - 02:07 Report Abuse
Shanu காமராஜர் சினிமா பார்த்தா அரசியலுக்கு வந்தார். சும்மா பேச வந்து விட்டாள் இந்த அக்கா...இவருக்கு தன்னை பத்தி மற்றவர்கள் ஏதாவது பேச வேண்டும் என்று அப்போ அப்போ வந்து போவார். இவரை ஒரு கணக்கில் எடுக்காதீர்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in