பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மொட்டை சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், ஹரஹரமகாதேவகி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி. அவர் தினமலர் வாசகர்களுக்காக அளித்த கலகலப்பு பேட்டி இதோ...
* 2017 எப்படி இருந்தது?
2017 ரொம்பவே நல்ல வருஷமா இருந்தது. மொட்டை சிவா , மரகத நாணயம் போன்ற படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.இந்த வருடமும் கீ, கலகலப்பு 2, பக்கா உட்பட சில படங்கள் கையில் உள்ளது.
* கலகலப்பு 2 பற்றி...
கலகலப்பு 2ல் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன ரோலில் நடித்தேன். வாரணாசியில் செட்டில் ஆன தமிழ் குடும்பம் நாங்கள். நான் அந்த ஊர்.தாசில்தார் ஆக இருக்கேன்.எனக்கு ஜோடியாக ஜெய். சிவா, ஜீவா, ரோபோ என்று படபிடிப்பு தளமே காமெடியாக இருக்கும்.
* சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கும் அனுபவம்
சுந்தர் சி இயக்கத்தில் புது அனுபவம் எல்லாருக்கும். பொதுவாக படபிடிப்பில் நடிகர்கள் நடிகைகளுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். ஆனால் இந்த சூட்டிங்கில் நிற்க நேரம் இருக்காது. ஒரே இடத்தில் பல இடங்களில் சூட்டிங் நடக்கும். இதை முடித்து அங்கே போகணும்.அத முடித்து அடுத்த இடத்துக்கு போகனும்.செட்டே பிஸியா இருக்கும்.
* காசியில் சூட்டிங் எப்படி இருந்தது?
காசி கோயில் போனேன். அந்த சூட்டிங் கொஞ்சம் பயமாக இருந்தது. பிணம் எரிந்து கொண்டிருந்த போது பார்த்து இருக்கேன்.சீக்கிரம் ஊர்க்கு போகனும் என்று பயந்தேன்
* கலகலப்பு பார்ட் 1 - பார்ட் 2 வித்தியாசம்
கலகலப்பு பார்ட்1 விட பார்ட் 2 பிரஷ் ஸ்கிரிப்ட். படம் முழுக்க காமெடி இருக்கிறது. படத்தின் பின் பாதியில் ஜெய், சிவா, எனக்குமான காட்சிகள் செம ரகளையாக இருக்கும்
* ரஜினி வசனங்களை பேசியது பற்றி
படத்தில் ரஜினி பேசின டயலாக் எல்லாம் நான் பேசிருக்கேன். அவர் அளவுக்கு பேசமுடியுமானு கொஞ்சம் பயந்தேன்..அவர் பாடல்களும் படத்தில் இருக்கிறது..
* பக்கா படத்தில் உங்கள் கேரக்டர்
நான் நடிக்கும் படத்தில் ரொம்ப வித்தியாசமான கதை பக்கா படம். ரஜினி ரசிகரா வர்றேன். பசங்க என்னவெல்லாம் ரகளையாக பண்ணுவாங்களோ அதை நான் பண்ணிருக்கேன்.
* ஹரஹர மகாதேவகி பார்ட் 2 எடுத்தால் நடிப்பீர்களா?
நான் நடித்த படங்களில் ரொம்ப வசூலானதும் விமர்சனமானதும் ஹரஹரமகாதேவகி படம். கவுதம்.. ஞானவேல் ராஜா நல்ல நண்பர்கள் தான். ஆனால் பார்ட் 2 எடுத்தால் நான் நடிக்க மாட்டேன்.
* பொங்கல் எங்கு கொண்டாட போகிறீர்கள்?
இந்த வருட பொங்கல் சென்னையில் தான். பெங்களூரில் இருந்து அம்மா சென்னை என் வீட்டிற்கு வந்திருக்காங்க. குடும்பத்தோடு கொண்டாட போறேன். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.