Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

சூர்யா என்னிடம் சரியாக பேச மாட்டார் - கீர்த்தி சுரேஷ்

05 ஜன, 2018 - 00:47 IST
எழுத்தின் அளவு:
no-talk-suriya

ஹோம்லியான கேரக்டரா; கூப்பிடு கீர்த்தி சுரேஷை என, சொல்லும் அளவுக்கு, தமிழில் நல்ல பெயர் வாங்கியுள்ளார், அவர். சூர்யா, விக்னேஷ் சிவன் கூட்டணியில், கீர்த்தி நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம், பொங்கலுக்கு வெளியாகிறது. அவருடன் ஒரு சந்திப்பு:

தானா சேர்ந்த கூட்டம் படம் பற்றி...

இது, 1980களில் நடப்பது போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ள படம். இதில், ஹோம்லியான ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். இதுவரை நடிக்காத ஒரு கேரக்டர். படம் முழுக்க, சல்வாரில் தான் அதிகம்நடித்துள்ளேன். தோற்றம், உடை எல்லாம், 80களில் இருந்ததை போல் இருக்கும்.

சூர்யாவுடன் நடித்த அனுபவம்?


சூர்யா, படப்பிடிப்பில் யாருடனும் அதிகம் பேச மாட்டார். நாமாக போய், சார், இந்த சீனை அப்படி செய்யலாமா, இப்படி செய்யலாமா என கேட்டால், நல்லா பண்ணும்மா என ஒற்றை வார்த்தையில் கூறி விடுவார். எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

மகாநடி படத்துக்காக சாவித்திரியாக நடித்த அனுபவம்?

சாவித்திரி அம்மா, மூன்று மொழிகளில் பிரபலமான நடிகையாக விளங்கியவர். நடிகையர் திலகம் என பெயர் எடுத்தவர். அவரைப் போல் நடிக்க வேண்டும் என்பதால், ரொம்ப பயமாக இருந்தது. அப்புறம் சமாளித்து நடித்தேன். அவர் நடித்த படங்களில், அவர் சிரிப்பு, நடிப்பு, பாடல் காட்சிகளில் அவர் அசைவு என, அனைத்தையும் உள்வாங்கி, தேவைப்படும் காட்சிகளில்
அதை பிரதிபலித்தேன்.

சாவித்திரியாக நடிப்பதற்கு உடல் எடையை குறைத்தீர்களாமே?


ஆமாம். முதலில், அவரது இளம் வயது தோற்றத்தில் நடிக்க வேண்டியிருந்ததால், சிறிதளவு எடையை குறைக்க வேண்டியிருந்தது. அப்புறம், எடையை சற்று கூட்ட வேண்டியிருந்தது.
பின், கடைசியில், அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது போன்ற காட்சிகளில், மறுபடியும் எடையை குறைக்க வேண்டியிருந்தது. இந்த படத்துக்காக, 40 நாட்கள் கால்ஷீட் கேட்டனர். ஆனால், 80 நாள் நடிக்க வேண்டியிருந்தது.

தமிழ், தெலுங்கு படங்களில் என்ன வித்தியாசம்?

பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இரண்டு மொழி படங்களும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றன. ஆனாலும், தெலுங்கில் இரண்டு படங்களில் தான்
நடித்திருக்கிறேன். என் முழு கவனமும், தமிழில் தான் இருக்கிறது.

புதுமுக நடிகர்கள், புதுமுக இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது இல்லையே; ஏன்?


முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்களில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு இல்லை. புதுமுகங்களுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். ஆனால், அது நல்ல கதையாக இருக்க வேண்டும்.

கமர்ஷியல் படங்களில் அதிகம் நடிக்கிறீர்களே?

எனக்கு அமையும் படங்கள் எல்லாம் அப்படி இருக்கிறது; அதற்கு நான் என்ன செய்வது? மகாநடிகன் படத்தில், நல்ல நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து அது போன்ற படங்கள் அமையும்போது, கண்டிப்பாக நடிப்பேன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - சிலிர்க்கிறார் மகேந்திரன் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in