சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பில், டைரக்டர் லிங்குசாமி இயக்கி வரும் படம் பையா. படத்தின் நாயகனாக கார்த்தி நடிக்க அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இதுவரை காட்டாத கவர்ச்சியையெல்லாம் தமன்னா இப்படத்தில் காட்டியிருக்கிறாராம். படத்தின் 80 சதவீத சூட்டிங் முடிந்துள்ள நிலையில் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.
பையாவில் வில்லனாக மிலிந்த் சோமன் நடித்துள்ளார். மும்பையில் எடுக்கப்பட்ட ஒரு சண்டைக்காட்சியில் 10 ஹாங்காங் சண்டை கலைஞர்கள் பங்கேற்று அசத்தியிருக்கிறார்கள். பையா குறித்து டைரக்டர் லிங்குசாமியிடம் கேட்டால், இதுவரை எனது வாழ்க்கையில் நடந்ததை மட்டுமே படமாக்கியிருக்கிறேன், என்று கூறுகிறார்.
|