Cinema Home
 
சினி தகவல்கள்
 

  சினிமா முதல் பக்கம்
 
      காந்தி கணக்கு முன்னோட்டம்  

பட காட்சிகள் >>
பிரபல இயக்குநர் சசியின் உதவியாளர் சம்பத் ஆறுமுகம் இயக்கும் புதிய படம் காந்தி கணக்கு. பூஜா ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரமணா கதாநாயகனாக நடிக்கிறார். லொள்ளு சபா ஜீவா, தேவதர்ஷினி, கராத்தே ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

நம் நாட்டுக்கு சுதந்திரம் பெறுவது எப்படி என ஆளாளுக்கு ஒரு போராட்டம், வியூகம் அமைத்தார்கள். ஆனால் காந்தியடிகளின் கணக்கு வேறாக இருந்தது. எல்லோரும் வன்முறை, அடிதடி, போர் என சிந்தித்தபோது காந்தி உண்ணாவிரதம், ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம் என அகிம்சை வழியில் சிந்தித்தார். அதற்குத்தான் வெற்றி கிடைத்தது. அதுபோல இந்தப் படத்தில், நம் நாட்டு மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்னைக்கு காந்தி வழியில் சிந்தித்து, காந்தி வழியில் தீர்வு காண்கிறான் நாயகன். அதனால்தான் இந்த டைட்டிலை வைத்திருக்கிறோம் என்கிறார் இயக்குனர் சம்பத் ஆறுமுகம். சென்னை, ஊட்டி, கோவா, கேரளம் ஆகிய இடங்களிலும் லண்டன் நகரிலும் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.

ஏ.கே.ரிஷால்சாய் இசையமைத்திருக்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். கார்த்திக் ஒளிப்பதிவு ‌செய்கிறார்.

          << விமர்சனம் முதல் பக்கம்                                                                               சினிமா முதல் பக்கம்       
 
   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.