Cinema Home
 
சினி தகவல்கள்
 

  சினிமா முதல் பக்கம்
 
      கல்லூரி காலங்கள் முன்னோட்டம்  

பட காட்சிகள் >>
அறிமுக இயக்குனர் ரெமோஷிவா இயக்கும் புதிய படம் கல்லூரி காலங்கள். புதுமுகம் சுகுமார் - பிரியங்கா சந்திரா நடிக்கும் இந்த படத்தின் கதை இதுவரை யாருமே பார்த்திருக்காத வித்தியாசமான கதையாம்.

கல்லூரியில் படிக்கும் மாணவனுக்கும், மாணவிக்கும் இடையிலான காதலை சொல்கிற படமாக இருந்தாலும், இதுவரை வெளியான அத்தனை காதல் படங்களில் இருந்தும் மாறுபட்ட படமாக இது இருக்கும். ஹீரோவும், ஹீரோயினும் காதலை சொல்வதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் ஹீரோ தன் காதலை வெளிப்படுத்துவதே புதுமையாகவும், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துவதாகவும் இருக்கும். அது மட்டுமல்ல, செல்போனை வைத்து புதிய உத்தியிலும் காட்சிகளை அமைத்திருக்கிறேன். இந்த காட்சி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்படும், என்கிறார் இயக்குனர் ரெமோஷிவா.

இந்தப்படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டே திரைக்கதைதான் என்று சொல்லும் இயக்குனர்,  ஒரு நிமிஷம்கூட ரசிகர்கள் நாற்காலியைவிட்டு எழுந்துபோக முடியாத அளவுக்கு காட்சிகளை பரபரப்பாக அமைத்திருக்கிறேன். குறிப்பாக படத்தின் இரண்டாம் பகுதி முழுக்க விறுவிறுப்பாக நகரும். இடைவேளைக்குப் பிறகு படம் தொடங்கும்போதே க்ளைமாக்ஸின் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இதுபோன்ற பல புதிய அம்சங்களினால் காதல் படங்களிலேயே இது டிரெண்ட்செட்டாக இருக்கும் என்பது உறுதி. அதேபோல் தொழில்நுட்பத்திலும் புதிய தடங்களை பதிக்கிற படமாகவும் கல்லூரி காலங்களை உருவாக்குகிறோம், என்றும் கூறினார்.

காதலர் தினமான பிப்ரவரி 14ம்தேதி இப்படம் ரீலிஸ் ஆகவிருக்கிறது.

          << விமர்சனம் முதல் பக்கம்                                                                               சினிமா முதல் பக்கம்       
 
   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.