டாக்கிங் டைம்ஸ் மூவிஸ் பிரைவேட் லிட் எனும் புதிய பட நிறுவனம் சார்பில் பட்டியல் சேகர் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் புதிய படம் கற்றது களவு. அலிபாபா படத்தின் நாயகன் கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம் இது. கதாநாயகியாக விஜயலட்சுமி நடிக்கிறார். இவர்கள் தவிர வி.எம்.சி.ஹனீபா, சந்தானபாரதி, மனோபாலா, அபியும் நானும் குமாரவேல் உள்ளிட்டவர்கள் நடிக்கும் இப்படத்தை 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களையும், பல மியூசிக் ஆல்பங்களையும் இயக்கிய பாலாஜி டி. இயக்குகிறார். கிருஷ்ணா வங்கி அதிகாரியாகவும், விஜயலட்சுமி விமான பணிப் பெண்ணாகவும் பணிபுரியும் கற்றது களவு படத்தின் கதைக் கரு, இருக்கும் இடத்தில் இருந்து வேகமாக வாழ்க்கையில் முன்னேறும் ஒருவனைப் பற்றியது என்கிறார் டைரக்டர் பாலாஜி. படத்திற்கு ஒளிப்பதிவு செய்பவர் நீரவ்ஷா. இசை பால் ஜேக்கப்.
|