Cinema Home
 
சினி தகவல்கள்
 

  சினிமா முதல் பக்கம்
 
      ஸ்பெஷல் ரிப்போர்ட்  


ஏடாகூட கேள்விக்கு சுனேனாவின் நச் பதில்கள்
யாதுமாகி, கதிர்வேல், திருத்தணி என்று அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் கோலிவுட்டின் பிஸியான நாயகிகள் பட்டியலில் இணைந்திருக்கிறார் சுனேனா. காதலில் விழுந்தேன் படத்திற்கு முன்பே கமிட் ஆன மதன் படத்தின் சர்ச்சை சுனேனாவை ரொம்பவே தாக்கியிருக்கிறது. பதினைஞ்சு வயசுல... எனக்கு விவரம் தெரியாத நிலையில் மதன் பட ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டேன். ஒரே ஒருநாள் மட்டுமே சூட்டிங் போனேன். 8 மணி நேரம் நடந்த சூட்டிங்கில் நடிச்ச என் ‌பெயரை இப்போ மதன் படத்தோட பப்ளிசிட்டிக்கு பயன்படுத்துறாங்க... என்று குழந்தை குரலில் குமுறுகிறார் சுனேனா. பரத்தடன் திருத்தணி சூட்டிங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருத்தவரை இடைவேளை நேரத்தில் சந்தித்து ஏடாகூடமாக கேள்வி கேட்‌‌டோம். அவரது பேட்டி:-

மதன் படத்தில் படு கிளாமரா நடிச்சிருக்கீங்களாமே?

ஒரு சின்ன பிளாஷ்பேக் சொல்றேன். எனக்கு அப்ப 15 வயசுதான் இருக்கும். 2 தெலுங்கு படத்திலும், தமிழில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். அந்த தமிழ்படம்தான் மதன். அப்போ எனக்குன்னு ஒரு பி.ஆர்.ஓ., மேனேஜர் யாருமே இல்லை. சரியா விவரம் தெரியாது. கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்திச்சு. அப்போதான் ஜெய்ஆகாஷ் என்னிடம் மதன் கதையை சொல்லி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார். ஒரே ஒரு நாள் மட்டும் சூட்டிங் போனேன். ‌மெத்தம் 16 மணி நேரம் நடந்த படப்பிடிப்பில் 8 மணிநேரம்தான் நான் நடிச்சேன். ஒரு பாடல் காட்சியில் பாதிதான் நடித்திருந்தேன். அதன் பிறகு படப்பிடிப்பு நடக்கவில்லை. ஆகாஷிடம் இருந்தும் எந்த தகவலும் வரவில்லை. நானும் அடுத்தடுத்த படங்கள்ல பிஸியாயிட்டேன். கிட்டத்தட்ட 4 வருஷம் ஆன பிறகு மதன் படத்தோட பப்ளிசிட்டிக்கு என் பெயரை பயன்படுத்துறாங்க. அத பார்த்து நான் ஷாக் ஆயிட்டேன். உருப்படியா ஒரு நாள்கூட அந்த படத்துல நான் நடிக்காதபோது இப்படியொரு பப்ளிசிட்டி ஏன்னு புரியல.

அப்போ உங்களிடம் கால்ஷீட் கேட்கவில்லையா?

கேட்டாங்க! நான் இப்போ ரொம்ப பிஸியா இருக்கேன். எப்போதோ மூட்டை கட்டி போட்ட ஒரு படத்திற்கு திடீர்னு டேட் கேட்டா எப்படி தர முடியும்? அதிலும் முன்பு என்னிடம் சொன்ன கதையையும் மாற்றி விட்டதாக சொன்னார்கள். எனக்கு முக்கியத்துவம் இல்லாதபோது நான் எப்படி நடிப்பேன். பட போஸ்டர்களின் என்னை பப்ளிசிட்டிக்காக பயன்படுத்துகிறார்கள்.

இப்போது நடித்து வரும் படங்கள்...?

யாதுமாகி, கதிர்வேல், திருத்தணின்னு மூன்று படங்கள்ல பிஸியா இருக்கேன். இதுதவிர ரெண்டு படங்களில் நடிக்க ‌பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

என்ன மாதிரி கேரக்டர் பண்ண ஆசை?

நான் ஆசைப்பட்டா போதுமா? அமையணும‌ே. எல்லாமே இயக்குனர்கள் கையில்தான் இருக்கு. எனது கேரக்டர் கதையுடன் தொடர்புடையதா இருக்கணும். டூயட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் கதையென்றால் ஒப்புக் கொள்ள மாட்டேன்.

சொந்த குரலில் பேசி நடிக்கும் முயற்சி இருக்கா?

நிச்சயமா ட்ரை பண்ணணும். இப்போதான் தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ல டப்பிங் பேசுற அளவுக்கு வந்துடுவேன். டப்பிங் பேசுறது சாதாரண விஷயமல்ல. அதுவும் கிட்டத்தட்ட நடிப்பு மாதிரிதான்.

ரி‌யல் லைப் சுனேனா எப்படி?

பல நேரங்களில் மூடியா இருப்பேன். சந்தோஷமான நேரங்கள்ல செம சவுண்ட் பார்ட்டியா மாறிடுவேன். சூட்டிங் ஸ்பாட்டில் செம ஜாலி பொண்ணு நான். எமோஷன் சீனில் என்னையும் அறியாமல் அழுது விடுவேன். மொத்தத்தில் என்னை சென்டிமெண்ட் பார்ட்டின்னு சொல்லலாம்.

நகுலோட கிசுகிசு மேட்டர் இன்னும் தூவானமாகவே இரு‌க்கே?

கிசுகிசு படித்து அலுத்துப் போய் விட்டது. சீரியஸா எடுத்துக் கொள்ளாத வரை எதுவுமே ஜாலிதான்.

ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப் போறீங்களாமே?

அய்யோ... அதெல்லாம் பெரிய முடிவு. இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தணும். ரசிகர் மன்றம்அமைக்கும் சூழ்நிலை வந்தால் அப்போ அது பற்றி பேசலாம்... என்று கண்சிமிட்டி உதட்டோர புன்னகையுடன் ‌பேட்டியை முடித்து விட்டு அடுத்த ஷாட்டுக்கு தயாரானார் சுனேனா.

திருத்தணியில் அம்மணியின் கேரக்டர் என்ன என்று கேட்டால்... அது ரொம்ப சஸ்பென்ஸ். இப்போ சொல்லக்கூடாது. படத்துல நான் காமெடியெல்லாம் பண்ணப்போறேனாம் என்கிறார் பவ்யமாக...!

- தினமலர் சினி டீம் -

          << ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்                                                                 சினிமா முதல் பக்கம்
   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.