Cinema Home
 
சினி தகவல்கள்
 

  சினிமா முதல் பக்கம்
 
      ஸ்பெஷல் ரிப்போர்ட்  


56வது பிலிம்பேர் விருதுகள் : முழு விவரம்
பிராந்திய மொழி திரைப்படங்களில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து பிலிம்பேர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 56வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா கடந்த வாரம் ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் நடிகைகள் சினேகா, ப்ரியாமணி, ஜெனிலியா, முமைத்கான்,. கவுரி முன்சால், சாரதா தாஸ் உள்ளிட்டவர்களின் கண்கவர் நடனம் இடம்பெற்றது.

விருது பெற்ற தமிழ் நட்சத்திரங்கள் முழு விவரம் வருமாறு:

சிறந்த படம் : சுப்பிரமணியபுரம்
சிறந்த இயக்குனர் : சசிக்குமார் (சுப்பிரமணியபுரம்)
சிறந்த நடிகர் : சூர்யா (வாரணம் ஆயிரம்)
சிறந்த நடிகை : பார்வதி (பூ)
சிறந்த துணை நடிகர் : அஜ்மல் (அஞ்சாதே)
சிறந்த துணை நடிகை : சிம்ரன் (வாரணம் ஆயிரம்)
சிறந்த இசையமைப்பாளர் : ஹாரீ்ஸ் ஜெயராஜ் (வாரணம் ஆயிரம்)
சிறந்த பாடலாசிரியர் : தாமரை (நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை... வாரணம் ஆயிரம்)
சிறந்த பாடகர் : நரேஷ் ஐயர் (முன்தினம் பார்த்தேனே... வாரணம் ஆயிரம்)
சிறந்த பாடகி : தீபா மரியம் : (கண்கள் இரண்டால்... சுப்பிரமணியபுரம்)


தெலுங்கு சினிமாவை பொறுத்த வரை சிறந்த நடிகராக அல்லு அர்ஜூனும், சிறந்த நடிகையாக சுவாதியும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

மலையாளத்தில் சிறந்த நடிகராக லாலும், சிறந்த நடிகையாக ப்ரியாமணியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திரைக்கதா என்ற படத்துக்காக ப்ரியாமணிக்கு விருது கிடைத்துள்ளது.

கன்னடத்தில் சிறந்த நடிகராக கணேஷூம், சிறந்த நடிகையாக ராதிகா பண்டிட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளை பெற்றனர்.

இதுதவிர சிறந்த அறிமுக நாயகனாக சாந்தனு பாக்யராஜ் (சக்கரகட்டி) தேர்ந்தெடுக்கப்பட்டார். அறிமுக நாயகியாக மீரா நந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாழ்நாள் சாதனையாளர் விருது பாடலாசிரியர் வெட்டூரி சுந்தரராம மூர்த்திக்கு வழங்கப்பட்டது.

          << ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்                                                                 சினிமா முதல் பக்கம்
   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.