Cinema Home
 
சினி தகவல்கள்
 

  சினிமா முதல் பக்கம்
 
      ஸ்பெஷல் ரிப்போர்ட்  


நடிகர் சங்கம் : எக்ஸ்குளூசிவ் தகவல்கள்
* நடிகர் சங்கம் 1952ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

* நடிகர் சங்கத்தின் முதல் உறுப்பினர் என்.என்.கண்ணப்பா. பல படங்களில் நாயகனாக நடித்திருக்கும் இவர் 15-02-1953 அன்று உறுப்பினர் ஆனார்.

* நடிகர் சங்கத்தின் 2வது உறுப்பினர் எம்.என்.கிருஷ்ணன். மதுரை வீரன், பராசக்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவரும் 15-02-1953 அன்றே உறுப்பினர் ஆனார்.

* நடிகர் சங்கத்தின் முதல் தலைவர் டி.வி.சுந்தரம்.

* நடிகர் நம்பியார் 15-02-53 அன்று உறுப்பினர் ஆனார். அவரது உறுப்பினர் எண் 7.

* முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆர் உறுப்பினர் ஆனதும் 15-02-53 அன்றுதான்.  எம்.ஜி.ஆரின் உறுப்பினர் எண் 10.

* நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் எம்.என்.ராஜம். இவர் 29-03-53 அன்று உறுப்பினராக இணைந்தார். அவரது உறுப்பினர் எண் 19.

* இருபதாவது ஆளாக உறுப்பினர் ஆனவர் ஆர்.எஸ்.மனோகர். இவர் 29-03-53 அன்று உறுப்பினர் ஆனார்.

* எஸ்.எஸ்.ராஜேந்திரன் 28-04-53 அன்று சங்கத்தின் 24வது ஆளாக உறுப்பினர் ஆனார்.

* நடிகர் திலகம் சிவாஜிகணேசன் 19-05-53 அன்று உறுப்பினர் ஆனார். அவரது உறுப்பினர் எண் 26.

* கமல்ஹாசன்  13-04-1975ல் உறுப்பினர் ஆனார். அவரது உறுப்பினர் எண் 515.

* நடிகர் ரஜினிகாந்த் 09-04-1978 அன்று நடிகர் சங்கத்தின் உறுப்பினராக 720வது தன்னை இணைத்துக் கொண்டார்.

* நடிகர் சங்கத்தின் தலைவராக அதிக முறை பதவி வகித்தவர் நடிகர் ராதாரவி. அவர் மொத்தம் 12 ஆண்டுகள் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். ராதாரவியின் உறுப்பினர் எண் 1932. அவர் 31-01-1982ல் உறுப்பினர் ஆனார்.

* நடிகர் சரத்குமார் 20-01-1991 அனறு தன்னை நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அவரது உறுப்பினர் எண் 4327.

* நடிகர் விஜய் 18-02-1994 அன்று நடிகர் சங்க உறுப்பினர் ஆனார். அவரது உறுப்பினர் எண் 4743.

* நடிகர் அஜித் 40-05-2006 அன்று சங்கத்தின் 6091வது உறுப்பினராக இணைந்தார்.

* சமீபமாக உறுப்பினர் ஆனவர் பிரேம்ஜி அமரன். இவர் 31-03-2009 அன்று நடிகர் சங்கத்தின் உறுப்பினர் ஆனார். இவரது உறுப்பினர் எண் 7366.

* நடிகர் சங்கம் சார்பில் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிவாஜி ‌தலைமையில் பாராட்டு விழா நடந்துள்ளது.

* கமல் தேசிய விருது பெற்றபோது நடிகர் சங்கம் சார்பில் விழா எடுத்து கவுரவிக்கப்பட்டது.

* கலைச்செல்வம் என்ற விருது 12 வருடங்களாக கொடுத்து வருகின்றனர். அந்த விருது விழா, இனி நாடக விழாவாக நடைபெற இருக்கிறது. மறைந்த கலைஞர்களின் நினைவாக வருகிற ஆகஸ்ட் மாதம் 15ம்தேதி முதல் 7 நாட்கள் நடைபெறும் இந்த நாடக விழாவில் நடிகர் சங்க உறுப்பினர்களே நடிக்கவுள்ளனர். சரத்குமார் விழாவை தொடங்கி வைக்கவுள்ளார்.

* நடிகர் சங்கத்துக்கு ரூ.2 கோடி கடன் இருந்தது. விஜயகாந்த் தலைவராக இருந்தபோது ரஜினி, கமல் உள்பட அனைவரும் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சியை நடத்தி அந்த கடனை அடைத்து சா‌தனை படைக்கப்பட்டது.

*சென்ற வருடம் சரத்குமார் தலைமையில் கலைநிகழ்ச்சி நடத்தி ரூ.3 கோடி வருவாய் சேர்த்துள்ளனர்.

* நலிந்த கலைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.500 வீதம் 300 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

* நடிகர் சங்கத்திற்கு என்று ‌தனி வெப்சைட் உருவாகி வருகிறது.

* சமீபகாலமாக திரைத்துறையில் ஏற்படும் பிரச்னைகளை நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து சுமூகமாக தீர்த்து வருகிறார்கள்.

* நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவிடம் அமைக்க தமிழக அரசிடம் இடம் கேட்கப்பட்டுள்ளது.

- தினமலர் சினி டீம் -

          << ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்                                                                 சினிமா முதல் பக்கம்
   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.