Cinema Home
 
சினி தகவல்கள்
 

  சினிமா முதல் பக்கம்
 
      ஸ்பெஷல் ரிப்போர்ட்  


சாதிக்க காத்திருக்கும் அழகிய அசுரா... அனிதா உதீப்
"குளிர் 100 டிகிரி' என்ற படத்தின் மூலம் பெண் இயக்குனர் அனிதா உதீப் தமிழ் திரைப்பட துறையில் சாதிக்க காத்திருக்கிறார். அடிப்படையில் நல்ல பாடகியான இவர், "விசில்' படத்தில் வந்த "அழகிய அசுரா அழகிய அசுரா...' பாடலைப் பாடியவர். திரைத்துறை அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:

அமெரிக்காவில் உள்ள லயோலா மேரிமவுன்ட் பல்கலைக்கழகத்தில் "மாஸ்டர் ஆப் பிலிம் மேக்கிங்' 3 ஆண்டு படிப்பை முடித்தேன். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் நிறுனவத்தில் "டேக்கன்' என்ற சீரியலில் பணிபுரிந்தேன். அதைத் தொடர்ந்து, ''நாக் நாக் ஐயம் லுக்கிங் டூ மேரி" என்ற படத்தை இயக்கினேன். அப்போது, அனிமேஷன் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

நான் இயக்கிய, குளிவர்ஸ் டிராவல்" என்ற அனிமேஷன் படம், 2006ம் ஆண்டு ஆஸ்கர் வரை சென்றது. எனக்கு நடனம் மற்றும் பாடல் மீது தீராத ஆசை உண்டு. நாட்டியம், ஓவியம் என ஒவ்வொரு சபாவிலும் என்னை நான் மெருகேற்றிக் கொண்டேன். "விசில்' படத்தில் இடம்பெற்ற "அழகிய அசுரா' பாடல் எனக்கு தமிழ்த்திரையின் வாசலை திறந்துவைத்தது. "முகங்கள்'ங்கிற பாப் ஆல்பம் போட்டு அதுவும் ஹிட்.

டைரக்ஷனில் இறங்க முடிவு செய்தேன். அதற்காக, கோலிவுட்டின் நிலவரத்தை கற்கத் துவங்கினேன். அனைத்து விஷயங்களையும் நன்கு ஆராய்ந்த பின்னர், ஒரு முடிவுக்கு வந்தேன். நாம் நினைக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டுவரவேண்டும் என்றால், தயாரிப்பாளரின் ஒத்துழைப்பும் அதற்கு ரொம்ப அவசியம். அதனால், இந்தப் படத்தை சொந்தமாகத் தயாரிக்க விரும்பினேன். பள்ளிப் பருவத்தை கொண்டாடும் விதமாக "குளிர் 100 டிகிரி' என்ற கதையை தயாரித்தேன். தங்களோட மைனஸ் என்ன பிளஸ் என்ன என்பது கூட தெரியாமல், தட்டுத் தடுமாறி நிற்கிற பிளஸ் 2 பசங்களோட கதைதான் இது.

படத்துக்கும், பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெண் டைரக்டர்களின் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால், கோலிவுட்டில் வெரைட்டியான படைப்புகள் அதிக அளவில் வெளிவரும், என்றார்.

- தினமலர் சினி டீம் -

          << ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்                                                                 சினிமா முதல் பக்கம்
   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.